இளங்கடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இளங்கடை என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோயில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். முன்னர் இது கிராமாக இருந்தது. பின்னர் நாகர்கோயில் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இது நாகர்கோவிலிலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது. இளங்கடையிலிருந்து 5 கி.மீ தொலைவில் சொத்தவிளை கடற்கரையும் 10 கி.மீ தொலைவில் சங்குதுறை கடற்கரையும் உள்ளது. இங்குள்ள பெருவாரியான குழந்தைகள் நாகர்கோவிலுக்கு சென்று கல்வி கற்கின்றனர். இளங்கடைக்கு மிக அருகில் சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளங்கடை&oldid=2695095" இருந்து மீள்விக்கப்பட்டது