இல்லீரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இல்லீரியா
வரலாற்று பிராந்தியம்
பாரம்பரியக் காலத்தின் போது இல்லீரியன் பழங்குடியினர் குடியேறிய தோராயமான பகுதி
பாரம்பரியக் காலத்தின் போது இல்லீரியன் பழங்குடியினர் குடியேறிய தோராயமான பகுதி
பகுதிதென்கிழக்க ஐரோப்பா
பிராந்தியம்பால்கன் குடா

பாரம்பரியக் காலத்தில், இல்லீரியா (Illyria, பண்டைக் கிரேக்கம்Ἰλλυρία , இல்லியா அல்லது Ἰλλυρίς , இல்லிரிஸ் ; [1] [2] ) என்பது பால்கன் தீபகற்பத்தின் மேற்குப் பகுதியில் பல பழங்குடியின மக்கள் வசித்த ஒரு பகுதி ஆகும். இல்லீரியன்கள் இந்தோ-ஐரோப்பிய மொழியான இலிரியன் மொழியைப் பேசினர். இது பண்டைய காலங்களில் தெற்கு இத்தாலியின் சில பகுதிகளில் பேசுப்பட்டதாக இருக்கலாம். [3] புவியியலில் இல்லீரிஸ் ( இல்லிரியாவில் இருந்து வேறுபட்டது) என்பது சில சமயங்களில் வடக்கு மற்றும் நடு அல்பேனியாவின் அயோஸ் பள்ளத்தாக்கு வரையிலான பகுதியை வரையறுக்கப் பயன்படுத்தப்பட்டது, பெரும்பாலான காலகட்டங்களில் லேக்லேண்ட் பகுதி உள்ளிட்டப் பகுதியைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. [4] [5] ரோமானிய காலங்களில் Illyria / Illyris / Illyricum என்ற சொற்கள் தென்-கிழக்கு ஏட்ரியாட்டிக் கடற்கரை (நவீன அல்பேனியா மற்றும் மொண்டெனேகுரோ ) மற்றும் தன்யூபு, மற்றும் அட்ரியாட்டிக்கின் மேல் பகுதியிலிருந்து ஆர்டியாயி வரையிலான பகுதிகளைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. [6] [7] [8] கிமு முதல் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து ரோமானியர்களால் இலிரிகம் என்ற சொல் பேரரசின் மாகாணத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இது டிரின் ஆற்றின் வடக்கே கிழக்கு அட்ரியாடிக் கடற்கரைவரை பரவியிஉந்தது. அதன் தெற்கே ரோமானிய மாகாணமான மாசிடோனியாவின் எல்லை . தொடங்கியது. [6]

குறிப்புகள்[தொகு]

  1. Illyría and Illyrís respectively
  2. Polybius. Histories, 1.13.1.
  3. If the Messapian language was close enough to the Illyrian language to be considered an Illyrian dialect, then Illyrian would also have been spoken in southern Italy.
  4. Boardman 1982.
  5. Hammond 1982.
  6. 6.0 6.1 Wilkes 1995.
  7. Kos 2012.
  8. Dzino 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இல்லீரியா&oldid=3422420" இலிருந்து மீள்விக்கப்பட்டது