இல்லியர்கள்
இல்லியர்கள் (Illyrians) என்பவர்கள் பண்டைய காலத்தில் மேற்கு பால்கன் தீபகற்பத்தில் வசித்து வந்த இந்தோ-ஐரோப்பிய மொழி பேசும் மக்கள் குழுவினராவர். இவர்கள் திரேசியர்கள் மற்றும் கிரேக்கர்களுடன் சேர்ந்து மூன்று முக்கிய பேலியோ-பால்கன் மக்களில் ஒரு பிரிவினராக இருந்தனர்.
இல்லிரியர்கள் வசித்த பகுதியானது, பிற்கால கிரேக்க மற்றும் உரோமானிய எழுத்தாளர்களால் இல்லீரியா என்று அறியப்பட்டது. இவர்கள் அல்பேனியா, மொண்டெனேகுரோ, கொசோவோ, [a] குரோவாசியா, பொசுனியா எர்செகோவினா, மேற்கு மற்றும் நடு செர்பியா போன்ற பகுதிகளில் வாழ்ந்தனர். மேலும் மேற்கில் ஏட்ரியாட்டிக் கடல், வடக்கில் திராவா ஆறு, கிழக்கில் மொரவா ஆறு, தெற்கில் ஆஸ் (நவீன விஜோசா) ஆறு அல்லது செரானியன் மலைகளுக்கு இடையிலான சுலோவீனியாவின் உள்ள சில பகுதிகளில் வாழ்ந்தனர். [1] [2] இலிரியன் மக்களைப் பற்றிய முதல் வரலாற்றுத் தரவு கிமு 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையதாக உள்ளது. இவர்கள் பண்டைய கிரேக்க எழுத்தாளரான ஹெகாடேயஸ் ஆஃப் மிலேட்டசின் படைப்புகளில் கூறப்பட்டுள்ளனர்.
"இல்லிரியன்கள்" என்ற பெயரானது வரலாற்றுப் பதிவில் கடைசியாக 7ஆம் நூற்றாண்டு வரலாற்றுப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது முன்னாள் உரோமானிய மாகாணமான இல்லிரிகத்திற்குள் இருந்த பைசாந்திய காரிசனைக் குறித்தது. [3]