இலை அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலை
குளிர் நாடுகளில் உள்ள பைன், ஸ்புரூஸ் போன்ற சிலவகையான மரங்களில் உள்ள குச்சி போன்ற வடிவில் இருக்கும் ஊசியிலை

இலை என்பது மரஞ்செடி கொடிகளின்[1] ஓர் உறுப்பு. இதுவே ஒளிச்சேர்க்கை வழி மரஞ்செடி கொடிகளின் உயிர்ப்புக்கு ஊட்டம் அல்லது ஆற்றல் பெற உதவுவது. கதிரவனின் ஒளியைப் பெறும் இலைகள் பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளன, சில தட்டையாகவும், சில நீண்டும் இருக்கின்றன. இலைகளில் பச்சையம் என்ற நிறமி இருப்பதன் காரணமாக இலைகள் பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கின்றன. இலைகள் பொதுவாக உணவையும் நீரையும் சேமித்து வைப்பினும், சில தாவரங்களில் வேறு விதங்களிலும் பயன்படுகின்றன.

இலையின் பாகங்கள்[தொகு]

     இலையின் மூன்று முக்கிய பாகங்கள், இலைத்தாள், இலைக்காம்பு, இலையடிப்பகுதி

இலைத்தாள்[தொகு]

   பசுமையான அகன்ற, பரந்த இலைப்பரப்பே இலைத்தாள் ஆகும். இலைத்தாளின் மையத்தில் மைய நரம்பு உள்ளது. அதிலிருந்து பல பக்கவாட்டு நரம்புகள் இருபுறங்களிலும் பிரிகின்றன.

இலைக்காம்பு[தொகு]

  இலையிலுள்ள காம்புப் பகுதியே இலைக்காம்பு எனப்படும். இது இலைத்தாளை இலையடிப்பகுதியுடன் இணைக்கிறது.

இலையடிப்பகுதி[தொகு]

   தண்டு அல்லது கிளையுடன் இணைக்கப்பட்டுள்ள இலையின் பகுதி இலையடிப்பகுதி ஆகும். இலையடிப்பகுதி இரண்டு சிறிய பக்கவாட்டு வளரிகளை உடையது. இவை இலையடிச்செதில் எனப்படும்.

இலையின் பணிகள்[தொகு]

உணவு தயாரித்தல்[தொகு]

  ஒளிச்சேர்க்கை மூலம் இலைகள் உணவைத் தயாரிக்கின்றன.

வாயுப்பரிமாற்றம்[தொகு]

    தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது கரியமில வாயு (கார்பன் டை ஆக்ஸைடு) உள் எடுத்துக்கொண்டு உயிர்வளியை (ஆக்ஸிஜன்) வெளியிடுகின்றன. சுவாசித்தலின் போது உயிர்வளியை உள் எடுத்துக்கொண்டு கரியமிலவாயுவை வெளியிடுகின்றன. இலையில் உள்ள சிறு துளைகள் (இலைத்துளை) மூலமே இவ்வாயுப் பரிமாற்றம் நிகழ்கிறது.

நீராவிப்போக்கு[தொகு]

   இலையில் உள்ள அதிகப்படியான நீரை இலைத்துளை வழியாக நீராவியாக வெளியேற்றும் நிகழ்ச்சி நீராவிப்போக்கு எனப்படும்

மேற்கோள்கள்[தொகு]

  1. மரம் செடி கொடிகளைத் தமிழில் நிலைத்திணை என்றும் தாவரம் என்று கூறுவர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலை_அமைப்பு&oldid=2723377" இருந்து மீள்விக்கப்பட்டது