இலெ. ப. கரு. இராமநாதன் செட்டியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலெ. ப. கரு. இராமநாதன் செட்டியார்
1960களில் இலெ. ப. கரு. இராமநாதன் செட்டியார்
பிறப்பு(1915-05-18)18 மே 1915
இறப்புஏப்ரல் 14, 2018(2018-04-14) (அகவை 102)
விருகம்பாக்கம், சென்னை
பணிபேராசிரியர்
பணியகம்அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுதமிழறிஞர்
வாழ்க்கைத்
துணை
அடக்கம்மை
பிள்ளைகள்3 மகன்கள், 4 மகள்கள்

இலெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் (18 மே 1915 - 14 ஏப்ரல் 2018) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னைப் பேராசிரியரும் தமிழ்க் கீழைக்கலைத் துறைத் தலைவருமாவார்[1]. தமிழிசைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்து தமிழ்ப்பணிபுரிந்தவர்.

இராமநாதன் செட்டியார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறுப்புத் துணைவேந்தர் பதவி மட்டுமல்லாது ஆட்சிக்குழு, பாடத்திட்டக் குழு எனப் பல்வேறு குழுக்களுக்குத் தலைமை வகித்துள்ளார். தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப்பண்களின் ஆய்வுக் குழுவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைவராக இருந்துள்ளார்.[2]

நூல்கள்[தொகு]

  • கட்டுரைக்கோவை
  • அண்ணாமலை அரசர்
  • சங்க காலத் தமிழர் வாழ்வு
  • வாழ்க்கை வளம்
  • தொல்காப்பியச் செல்வம்
  • நோக்கு
  • பத்துப்பாட்டு வளம்
  • சோழ வேந்தர் மூவர்
  • எட்டுத் தொகைச் செல்வம்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]