இலெவா படேல்
| இலெவா பட்டிதர்Leva Patidar | |
|---|---|
| மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் | குசராத்து, மத்தியப் பிரதேசம், இராசத்தான், மகாராட்டிரம் |
| உட்பிரிவுகள் | பட்டிதர் |
இலெவா படேல் (Leva Patel) என்பது இந்தியாவில் உள்ள பட்டிதர்களின் துணை சாதியாகும். முக்கியமாக குசராத்தின் சரோதர் பிராந்தியத்தில் காணப்படுகிறது. கடவாக்கள் போன்ற பிற பட்டிதார் துணை சாதிகளுடன் ஒப்பிடும்போது, இவர்கள் அதிக செல்வத்தையும், வர்த்தகம், கல்வி மற்றும் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் பதவிகளின் கட்டுப்பாட்டையும் கொண்டிருந்தனர்.[1]
தோற்றம்
[தொகு]இலெவா பட்டேல் சாதியினர் குசராத்தின் கேடா மாவட்டத்தில் உள்ள கதா விசுதார் வட்டம் பச்சாவ் இயில்லோ கட்சு-புச்சு குசராத்தில் இருந்து சூத்ரா என்ற பெயரில் உருவானவர்கள் ஆவர்.[2][3] பஞ்சாபில் இருந்து குடியேறியவர்கள், குசான்களிலிருந்து தப்பி வந்தவர்கள், அயோத்தியிலிருந்து குடியேறியவர்கள் அல்லது ஊனாக்கள், குர்ச்சராக்கள் போன்றோரிடமிருந்து வந்தவர்கள் போன்ற பல்வேறு பிரபலமான புராணக்கதைகள் உள்ளன. இருப்பினும், இந்த புராணங்கள் சந்தேகத்திற்குரிய நம்பகத்தன்மை கொண்டவையாகும். மேலும் பாரம்பரியத்தின் கண்டுபிடிப்புக்கு ஓர் எடுத்துக்காட்டும் ஆகும்.[4] இந்த மரபுக் கதைகளில் மிகவும் பிரபலமானவை என்னவென்றால், இந்து காவியமான இராமாயணத்தில் உள்ள இராமர் தெய்வத்தின் மகன் லாவா வழித்தோன்றல்கள் என்று கூறப்படுவதாகும்.[5][6] லேவா சாதியினர் தங்கள் பெயர் லாவா என்ற பெயரிலிருந்து பெறப்பட்டதாக கூறுகின்றனர், இருப்பினும் இது உண்மையில் நர்மதா ஆற்றின் உள்ளூர் பெயரான ரேவாவின் சிதைவு ஆகும்.[7]
19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில், பல இலெவா பட்டேல் மக்கள் தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, கனடா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற பிற நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்தியாவிற்குள், அவர்கள் குசராத்தில் இருந்து மகாராட்டிரா, இராசத்தான், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் போன்ற பிற மாநிலங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Murali, Kanta (2017). Caste, Class, and Capital: The Social and Political Origins of Economic Policy in India. Cambridge University Press. p. 109.
- ↑ Clark-Deces 2011, ப. 290
- ↑ Gadgil & Guha 2012 Quote: "For instance, in western Maharashtra the Rigvedic Deshastha Brahmans are genetically closer to the local Shudra Kunbi castes than to the Chitpavan Konkanastha Brahmans (Karve and Malhotra 1968)."
- ↑ 4.0 4.1 Trivedi, Jayprakash M. (1992-01-01). The Social structure of Patidar caste in India (in ஆங்கிலம்). Kanishka Pub. House. pp. 20, 32. ISBN 9788185475196.
- ↑ David Francis Pocock 1972, ப. 66.
- ↑ Dutta, Prabhash K. (7 December 2017). "Patels and Patidars of Gujarat: Descendants of Ram and worshippers of Krishna". India Today.
- ↑ Sadasivan, S. N. (2000). A social history of India. APH Publishing Corporation. p. 257.
நூலியல்
[தொகு]- David Francis Pocock (1972). Kunbi and Patidar: a study of the Patidar community of Gujarat. Clarendon Press. ISBN 9780198231752.
- Clark-Deces, Isabelle (2011), A Companion to the Anthropology of India, John Wiley and Sons, ISBN 978-1-4051-9892-9
- Gadgil, Madhav; Guha, Ramachandra (2012). "Chapter 2 Forest and Fire". This Fissured Land. Oxford India Perennials Series (in ஆங்கிலம்). Delhi: Oxford University Press. doi:10.1093/acprof:oso/9780198077442.001.0001. ISBN 978-0-19-807744-2.