உள்ளடக்கத்துக்குச் செல்

இலெனின் ரகுவன்ஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலெனின் ரகுவன்ஷி
தாய்மொழியில் பெயர்लेनिन रघुवंशी
பிறப்பு18 மே 1970 (1970-05-18) (அகவை 54)
வாரணாசி, இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்சஞ்சய்
குடியுரிமைஇந்தியா
கல்விஆயுர்வேதம், நவீன மருத்துவம், அறுவை சிகிச்சை ஆகியவற்றில் இளங்கலை பட்டம் (1994)
படித்த கல்வி நிறுவனங்கள்ஆயுர்வேத மற்றும் மருத்துவத்துக்கான மாநிலக் கல்லூரி, குருகுல் காங்ரி, அரித்துவார்
பணிசமூக ஆர்வலர்
அறியப்படுவதுமனித உரிமைகள் தொடர்பான மக்கள் விழிப்புணர்வு குழு
பட்டம்மருத்துவர்
பெற்றோர்சுரேந்திரநாத் நிங் (தந்தை)
சிறீமதி சாவித்ரி தேவி (தாயார்)
துணைவர்சுருதி நாகவன்ஷி
பிள்ளைகள்கபீர் கருணிக்
விருதுகள்எம். ஏ. தாமஸ் தேசிய மனித உரிமைகள் விருது 2016, கரம்வீர் விருது 2012, வீமர் நகரத்தின் மனித உரிமைகள் விருது (2010), குவாங்ஜு மனித உரிமைகள் விருது (2007), ஆச்சா அமைதி நட்சத்திர விருது
கையொப்பம்
வலைத்தளம்
website

இலெனின் ரகுவன்ஷி (Lenin Raghuvanshi) ஒரு தலித் உரிமை ஆர்வலரும், அரசியல் சிந்தனையாளரும், இந்தியாவைச் சேர்ந்த சமூகத் தொழில்முனைவோரும் ஆவார். [1] [2] [3] [4] மனித உரிமைகள் தொடர்பான மக்கள் விழிப்புணர்வு குழுவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான இவர், இது சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் முன்னேற்றத்திற்காக செயல்படுகிறது. [5] குவாங்ஜு மனித உரிமைகள் விருது (2007), [6] ஆச்சா நட்சத்திர அமைதி விருது (2008), [7] வீமர் நகரத்தின் சர்வதேச மனித உரிமைகள் விருது (2010), பிரெஞ்சு குடியரசின் மனித உரிமைகளுக்கான சிறப்பு குறிப்புகள் பரிசு (2018) [8] பொது அமைதி பரிசு (2018). [9] [10] கர்மவீர் மகாரத்னா விருது (2019) போன்ற விருதுகளுடன் இவரது படைப்புகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. [11] [12] [13] [14] ஆண்பால் சார்ந்து இயங்கும் ஆண்பால் சார்ந்து இயங்கும் இராணுவவாத மரபுகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சிகளில் ஒரு உந்து சக்தியாக செயல்பட்டதற்காகவும், உலகில் அமைதிக்கான நிலைமைகளை மேம்படுத்துவதில் இவர் செய்த பங்களிப்புக்காகவும், இவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார். [15]

சொந்த வாழ்க்கை

[தொகு]

இலெனின் ரகுவன்ஷி 1970 மே 18 அன்று சுரேந்திரநாத் சிங் மற்றும் ஸ்ரீமதி சாவித்ரி தேவி ஆகியோருக்கு உயர் சாதி இந்து குடும்பத்தில் பிறந்தார். [16] இவரது தாத்தா சாந்தி குமார் சிங், காந்திய சுதந்திர போராட்ட வீரர். இலெனின் 1994ஆம் ஆண்டில் அரித்வாரில் உள்ள குருகுல் கங்காரி, மாநில ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் ஆயுர்வேதம், நவீன மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றில் இளங்கலைப் படிப்பை மேற்கொண்டார். லெனின் ஒரு பிரபலமான சமூக ஆர்வலரான [17] சுருதி நாகவன்ஷி என்பவரை 1992 பிப்ரவரி 22 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கபீர் கருணிக் என்ற ஒரு மகன் இருக்கிறார். [18] கபீர் தேசிய அளவிலான மேடைக் கோற்பந்தாட்ட வீரர் ஆவார். [19] இவரும் இவரது மனைவியும் பௌத்த மதத்திற்கு மாறினர் .

ஆரம்ப ஆண்டுகள்

[தொகு]

ஆரம்பத்தில் இருந்தே இலெனின் சாதி அமைப்பின் மேல் வெறுப்புடன் இருந்தார். இவர் தனது உயர் சாதி இந்து வளர்ப்பை "நிலப்பிரபுத்துவ அமைப்பு" என்று குறிப்பிடுகிறார். [20] இது இவரை சமூக செயல்பாட்டின் பால் ஈர்த்தது. இவர் தனது 23 வயதில் (1993) ஐக்கிய நாடுகள் அவையின் இளைஞர் அமைப்பின் உத்தரபிரதேசத்தின் தலைவரானார்.

பிரதான சமூகத்தில் இவர் வெளிப்பட்டதன் மூலம், சாதிவாதம் அனைத்து துறைகளிலும் இருப்பதை உணர்ந்தார். இந்திய அரசாங்கம் அதன் இடஒதுக்கீடு கொள்கைகளுடன் பிரச்சினையை கையாண்டு அதை வற்றாததாக மாற்றியதால், இவர் அவர்களின் குரல்களைக் கேட்பதன் மூலம் அவர்களை மேம்படுத்தும் பாதையைத் தேர்ந்தெடுத்தார். இவர் தனது மனைவி, வரலாற்றாசிரியர் மகேந்திர பிரதாப், இசைக்கலைஞர் விகாஷ் மகாராஜ், கவிஞர் ஞானேத்ரா பாட்டி ஆகியோருடன் சேர்ந்து 1996 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் தொடர்பான மக்கள் விழிப்புணர்வு குழுவை (பி.வி.சி.ஆர்) நிறுவினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dr. Lenin Raghuvanshi (2016-11-10), PVCHR and Lenin Raghuvanshi: Part1, பார்க்கப்பட்ட நாள் 2019-06-26
  2. Dr. Lenin Raghuvanshi (2016-11-11), PVCHR and Lenin Raghuvanshi: Part 2, பார்க்கப்பட்ட நாள் 2019-06-26
  3. stebraig (2010-11-16), Dr. Lenin Raghuvanshi and the PVCHR, பார்க்கப்பட்ட நாள் 2019-06-26
  4. "Lenin, my Friend: Empowering the Marginal, Restoring Dignity – Different Truths" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-09.
  5. "Lenin Raghuvanshi: Challenging Caste Discrimination At The Grassroots". Youth Ki Awaaz (in ஆங்கிலம்). 2017-06-07. பார்க்கப்பட்ட நாள் 2019-06-26.
  6. The 18 May Memorial Foundation (2007). "Gwangju Prize for Human Rights". Archived from the original on 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 23 May 2011. {{cite web}}: External link in |last= (help)CS1 maint: numeric names: authors list (link)
  7. Asia Peace.org (2008). "'ACHA Awards (Archives)". ACHA. Archived from the original on 12 April 2001.
  8. Special Mentions Prize of Human Rights of The French Republic . "Special Mentions Prize of Human Rights of The French Republic". {{cite web}}: External link in |last= (help)CS1 maint: numeric names: authors list (link)
  9. "Lenin Raghuvanshi". The Public Peace Prize Website (in ஆங்கிலம்). 2018-09-30. பார்க்கப்பட்ட நாள் 2019-06-26.
  10. publicpeaceprize (2018-12-10). "Unveiling of the winners of the Public Prize for Peace, 2018 edition". The Public Peace Prize Website (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-26.
  11. "लेनिन रघुवंशी को प्रथम कर्मवीर महारत्न पुरस्कार". Patrika News. பார்க்கப்பட்ட நாள் 24 July 2020.
  12. "Dalit activist wins Karmaveer Maharatna Award". Matters India (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-02. பார்க்கப்பட்ட நாள் 2020-10-09.
  13. "Dalit activist Lenin Raghuvanshi gets award for making a difference". www.asianews.it. பார்க்கப்பட்ட நாள் 24 July 2020.
  14. "मानवाधिकार कार्यकर्ता लेनिन रघुवंशी को प्रथम कर्मवीर महारत्न पुरस्कार". Youth Ki Awaaz. 2 November 2019. பார்க்கப்பட்ட நாள் 24 July 2020.
  15. http://www.nobelwill.org/index.html?tab=11
  16. "frontlinedefenders.org". Archived from the original on 20 May 2013. பார்க்கப்பட்ட நாள் 24 July 2020.
  17. "Shruti Nagvanshi is icon for rising of marginalized and rural women in India | Lenin Raghuvanshi". www.saddahaq.com. Archived from the original on 2017-06-14. பார்க்கப்பட்ட நாள் 2019-06-26.
  18. Roy, Author Arindam (2016-05-11). "Lenin, my Friend: Empowering the Marginal, Restoring Dignity". Different Truths (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-26. {{cite web}}: |first= has generic name (help)
  19. Rights, People's Vigilance Committee On Human (18 September 2019). "Kabeer Karunik: Professional Journey". பார்க்கப்பட்ட நாள் 24 July 2020.
  20. Ashoka Foundation (2001). "Ashoka Fellows". Ashoka Foundation. Archived from the original on 26 December 2010. பார்க்கப்பட்ட நாள் 23 May 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலெனின்_ரகுவன்ஷி&oldid=3544586" இலிருந்து மீள்விக்கப்பட்டது