இலுத்விக் குட்மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலுத்விக் குட்மேன்
இலுத்விக் குட்மேன்
பிறப்பு(1899-07-03)3 சூலை 1899
டோஸ்ட், புருசியா, செருமானியப் பேரரசு ( தற்போது தோசக், போலந்து)
இறப்பு18 மார்ச்சு 1980(1980-03-18) (அகவை 80)
அயிலசுபரி, பக்கிங்காம்சயர், ஐக்கிய இராச்சியம்
குடியுரிமைஜெர்மனி ஐக்கிய இராச்சியம்
அறியப்படுவதுஇணை ஒலிம்பிக் விளையாட்டுக்களை நிறுவியவர்
மருத்துவப் பணிவாழ்வு
தொழில்நரம்பியல்
குறிப்பிடத்தக்க விருதுகள்பேரரசின் சக கூட்டாளர்

சர் இலுத்விக் கட்மேன் (Ludwig Guttmann) (3 சூலை 1899 – 18 மார்ச் 1980)[1] (3 சூலை 1899 - மார்ச் 1980 18) [2] [3] ஒரு ஜெர்மன்-பிரித்தானிய [4] நரம்பியல் நிபுணர் ஆவார். இவர், மாற்றுத்திறனாளிகளுக்கான இணை ஒலிம்பிக் விளையாட்டுகளை நிறுவினார். இங்கிலாந்தில் இவர் ஒரு யூத மருத்துவராக இருந்தார். இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு சற்று முன்னர் நாட்சி ஜெர்மனியிலிருந்து வெளியேறினார். இவர், ஊனமுற்றோருக்கான பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட உடல் செயல்பாடுகளின் நிறுவனர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.[5] [6] [7] [8]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இலுத்விக் சூலை 3, 1899 இல் தோசக்சில் ஒரு ஜெர்மன்-யூத குடும்பத்தில் பிறந்தார். தோசெக் அப்போது ஜெர்மன் கட்டுப்பாட்டிலிருந்த அப்பர் சிலேசியாவில் இருந்தது, இப்போது போலந்தில் உள்ளது. இவருக்கு, மூன்று வயதாக இருக்கும் போது வரது குடும்பம் சிலேசிய நகரமான கே சால் கோனிக்சட்டிற்கு (இப்போது கோர்சாவ், போலந்து) குடிபெயர்ந்தது. அங்கு இவர் இராணுவச் சேவையில் சேருவதற்கு முன்பு 1917இல் மனிதநேய இலக்கணப் பள்ளியில் பட்டம் பெற்றார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

குட்மேன் கோனிக்சட்டில் உள்ள விபத்து மருத்துவமனையில் தன்னார்வத் தொண்டு பணியில் ஈடுபட்டிருந்தபோது கால் காயத்துடன் இருந்த ஒரு நோயாளியை எதிர்கொண்டார். அந்த நிலக்கரி சுரங்கத் தொழிலாளி, பின்னர் நோய்தொற்று முற்றி இறந்தார்.[9] இவர், தனது மருத்துவ படிப்பை ஏப்ரல் 1918இல் பிரெசுலாவ் பல்கலைக்கழகத்தில் தொடங்கினார். இவர் 1919 இல் பிரீபர்க் பல்கலைக்கழகத்திற்குச் சென்று 1924இல் மருத்துவ முனைவர் பட்டம் பெற்றார்.

1933 வாக்கில், இவர் பிரெசுலாவில் (இப்போது போலந்தின் விரோகாவ்) ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணிபுரிந்து பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானார்.[10] நரம்பியல் அறுவை சிகிச்சையின் முன்னோடியான ஓட்ஃபிரைட் ஃபோஸ்டரின் கீழ் ஆராய்ச்சியை மேற்கொண்டார். போஸ்டரின் முதல் உதவியாளராக வெற்றி பெற்ற போதிலும், இவர் 1933 ஆம் ஆண்டில் நியூரம்பெர்க் சட்டங்களின்படி தனது பல்கலைக்கழகப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் இவரது தலைப்பு "கிரான்கன்பேகான்ட்லர்" (நோயுற்றவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஒருவர்) என்றும் மாற்றப்பட்டது. [11] நாசிக்கள் பதவிக்கு வந்தவுடன், யூதர்கள் தொழில் ரீதியாக மருத்துவம் செய்யத் தடை விதிக்கப்பட்டனர். இவர் பிரெசுலாவ் யூத மருத்துவமனையில் பணியாற்ற நியமிக்கப்பட்டார். அங்கு இவர் 1937இல் மருத்துவ இயக்குநரானார். நவம்பர் 9, 1938 அன்று கிரிஸ்டல்நாக்ட்டில் யூத மக்கள் மற்றும் சொத்துக்கள் மீதான வன்முறைத் தாக்குதலைத் தொடர்ந்து, எந்தவொரு நோயாளிகளையும் கேள்விக்கு இடமின்றி மருத்துவமனையில் அனுமதிக்குமாறு குட்மேன் தனது அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அடுத்த நாள் இவர் கெஸ்டபோவிடம் தனது முடிவை நியாயப்படுத்தினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 64 நோயாளிகளில் 60 பேர் நாசி அரசியல் கைதிகளின் முகாமிலிருந்து மீட்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர்.

பிரிட்டனுக்கு தப்பித்தல்[தொகு]

1939இன் ஆரம்பத்தில், குட்மேனும் இவரது குடும்பத்தினரும் யூதர்களை நாசிக்கள் துன்புறுத்தியதால் ஜெர்மனியை விட்டு வெளியேறினர். நாசிக்கள் இவருக்கு நுழைவு அனுமதி வழங்கியதோடு, போர்த்துகீசிய சர்வாதிகாரி அன்டோனியோ டி ஒலிவேரா சலாசரின் நண்பருக்கு சிகிச்சையளிக்க போர்ச்சுகலுக்கு செல்லும்படி கட்டளையிட்டபோது தப்பிப்பதற்கான ஒரு வாய்ப்பு வந்தது.[12]

இவர், இலண்டன் வழியாக ஜெர்மனிக்குத் திரும்ப திட்டமிடப்பட்டார். அப்போது "அகதிகள் கல்வியாளர்களுக்கான அமைப்பு " (காரா) இவருக்கு ஐக்கிய இராச்சியத்தில் தங்குவதற்கான வாய்ப்பை வழங்கியது. இவர், மார்ச் 14, 1939 அன்று தனது மனைவி எல்சு சாமுவேல், மகன் டென்னிசு மகள் ஈவாவுடன் இங்கிலாந்தின் ஆக்சுபோர்டுக்கு வந்தார். [9] ஆக்சுபோர்டில் குடியேற உதவுவதற்காக கட்மேன் மற்றும் இவரது குடும்பத்தினருக்கு £250 (2019 இல் £16,000 டாலர் மதிப்பு) செலுத்த பிரிட்டிஷ் உள்துறை அலுவலகத்துடன் காரா பேச்சுவார்த்தை நடத்தியது. இராட்க்ளிஃப் இன்பர்மரி மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் முதுகெலும்பு காயம் குறித்து கட்மேன் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இலன்ஸ்டேல் சாலையில் உள்ள ஒரு சிறிய வீட்டிற்குச் செல்லும் வரை, குடும்பம் பல்லியோல் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் விடுதியில் சில வாரங்கள் தங்கியிருந்தது.[13] இரு குழந்தைகளும் கிரேக்கோட்சு பள்ளியில் இலவசமாக சேர்க்கப்பட்டனர். குடும்பம் ஆக்சுபோர்டு யூத சமூகத்தின் உறுப்பினர்களாகச் சேர்ந்தது. அப்போது பிரபல நடிகையான மிரியம் மார்கோலிசுடன் நட்புறவு கொண்டதை ஈவா நினைவு கூர்ந்தார்.[14] ஐரோப்பாவிலிருந்து இடம்பெயர்ந்த யூதக் கல்வியாளர்களின் வருகையின் விளைவாக ஆக்சுபோர்டில் யூதச் சமூகம் வேகமாக வளர்ந்து வந்தது.

இரண்டாம் உலகப் போர் வெடித்தவுடன், குட்மனும் இவரது குடும்பத்தினரும் காரா உறுப்பினரும், பல்லியோல் கல்லூரியின் ஆசிரியருமான இலிண்ட்சே பிரபு வீட்டில் தங்கினர். [15]

இசுடோக் மாண்டேவில் மருத்துவமனை[தொகு]

செப்டம்பர் 1943 இல், பக்கிங்காம்ஷையரில் உள்ள இசுடோக் மாண்டேவில் மருத்துவமனையில் தேசிய முதுகெலும்பு காயங்கள் மையத்தை நிறுவுமாறு பிரித்தன் அரசாங்கம் இவரிடம் கேட்டுக்கொண்டது.[16] முதுகெலும்புக் காயங்களுடன் வரும் விமானிகளுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிப்பதை உறுதிசெய்ய அரசின் விமானப்படையால் இந்த முயற்சி தொடங்கப்பட்டது.[17] பிப்ரவரி 1, 1944 அன்று, ஐக்கிய இராச்சியத்தில் முதுகெலும்புக் காயத்திற்கான முதல் நிபுணர் பிரிவான மையம் திறக்கப்பட்டபோது, ​​குட்மேன் அதன் இயக்குநராக நியமிக்கப்பட்டார் (1966 வரை). காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு விளையாட்டு ஒரு முக்கியமான சிகிச்சையாக இருக்கும் என்றும், அது அவர்களுக்கு உடல் வலிமையையும், சுயமரியாதையையும் வளர்க்க உதவும் என்றும் இவர் நம்பினார். [18]

குட்மேன் 1945 இல் பிரித்தானிய குடிமகனாக ஆனார்.[19] ஊனமுற்ற போர் வீரர்களுக்கான முதல் இசுடோக் மாண்டேவில் விளையாட்டுக்களை இவர் ஏற்பாடு செய்தார். முதல் விளையாட்டுக்கள் சூலை 29, 1948 அன்று நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்ட அதே நாளில் மருத்துவமனையில் நடைபெற்றது. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் முதுகெலும்பு காயங்கள் இருந்தன. மேலும், சக்கர நாற்காலிகளில் போட்டியிட்டன.[18] குட்மேன் நோயாளிகளை தேசிய நிகழ்வுகளில் பங்கேற்க ஊக்குவிப்பதற்காக பாராப்லெஜிக் கேம்ஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். இது பின்னர் பாராலிம்பிக் விளையாட்டுக்கள் " என்று அழைக்கப்பட்டது. இது பின்னர் "இணை விளையாட்டுகள்" ஆனது. மேலும் பிற குறைபாடுகள் உள்ளவர்களையும் உள்ளடக்கியது.

பாராலிம்பிக்ஸ்[தொகு]

டெல் அவீவ் நகரில் 1968 கோடைகால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற டோனி சவுத்துக்கு குட்மேன் தங்கப் பதக்கம் வழங்கினார்

பிற்கால வாழ்வு[தொகு]

1961 ஆம் ஆண்டில், கேட்மேன் பராப்லீஜியாவின் சர்வதேச மருத்துவ சங்கத்தை நிறுவினார். இவர் இப்போது சர்வதேச முதுகெலும்புச் சங்கம் (ISCoS) என்று அழைக்கப்படும் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். 1970 வரை இந்த பதவியில் இருந்தார்.[20] இவர் பாராப்லீஜியா பத்திரிகையின் முதல் ஆசிரியராக இருந்தார் (இப்போது "ஸ்பைனல் கார்டு" என்று அழைக்கப்படுகிறது).[21] இவர் 1966இல் மருத்துவப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் விளையாட்டில் தனது ஈடுபாட்டைத் தொடர்ந்தார். இவர் ஓய்வு பெற்ற பிறகு தோட்டக்கலையில் ஆர்வம் காட்டினார். இவரைச் சுற்றியுள்ள மக்களிடையே அன்பாக 'போப்பா ஜி' என்று அழைக்கப்பட்டார்.[21]

இறப்பு[தொகு]

அக்டோபர் 1979 இல், குட்மேனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மார்ச் 18, 1980 அன்று தனது 80 வயதில் காலமானார்.[22]

மரியாதை[தொகு]

"ஸ்போர்ட்ஸ் லெஜண்ட்ஸ்" தொடரிலிருந்து 2013 உருசிய அஞ்சல் முத்திரையில் குட்மேன்

ஐக்கிய இராச்சியத்திலுள்ள ஊனமுற்ற விளையாட்டுக்கான தேசிய மையமான இசுடோக் மாண்டேவில் விளையாட்டு அரங்கத்தை, மருத்துவமனையுடன் சேர்ந்து இவர் உருவாக்கினார்.[23]

பார்சிலோனாவிலுள்ள சிறப்பு நரம்பியல் மறுவாழ்வு மருத்துவமனையான இன்ஸ்டிட்யூட் குட்மேன் (எஸ்) என்பதற்கு இவரது நினைவாக பெயரிடப்பட்டது.[24]

2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டிகளின் ஒரு பகுதியாக, இசுடோக்-ஆன்-ட்ரெண்ட்வில்லே அரங்கத்தில் குட்மேனின் முழு நீள வெண்கல சிலை திறக்கப்பட்டது. விளையாட்டுக்குப் பிறகு அது தேசிய முதுகெலும்பு காயம் மையத்திற்கு மாற்றப்பட்டது.[25] குட்மேனின் மகள் ஈவா லோஃப்லர் இலண்டன் 2012 பாராலிம்பிக் விளையாட்டு தடகள கிராமத்தின் நகரத் தந்தையாக நியமிக்கப்பட்டுள்ளார்.[26]

மேற்கோள்கள்[தொகு]

 1. Whitteridge, David (1983). "Ludwig Guttmann. 3 July 1899 – 18 March 1980". Biographical Memoirs of Fellows of the Royal Society 29: 226–244. doi:10.1098/rsbm.1983.0010. 
 2. "Professor Sir Ludwig Guttmann". The Poppa Guttmann Trust. 2010 இம் மூலத்தில் இருந்து 18 August 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120818225455/http://www.poppaguttmanncelebration.org/poppa2.php. 
 3. GRO – Register of Deaths – MAR 1980 19 1000 Aylesbury, Ludwig Guttmann, DoB = 3 July 1899
 4. "Guttmann, Sir Ludwig (1899–1980)". http://archives.wellcome.ac.uk/DServe/dserve.exe?dsqIni=Dserve.ini&dsqApp=Archive&dsqDb=Catalog&dsqCmd=Show.tcl&dsqSearch=%28RefNo==%27PPGUT%27%29#. 
 5. Bedbrook, G. (1982). "International Medical Society of Paraplegia first Ludwig Guttmann Memorial Lecture". Paraplegia 20 (1): 1–17. doi:10.1038/sc.1982.1. பப்மெட்:7041053. 
 6. Ross, J. C.; Harris, P. (1980). "Tribute to Sir Ludwig Guttmann". Paraplegia 18 (3): 153–156. doi:10.1038/sc.1980.27. பப்மெட்:6997807. 
 7. Rossier, A. B.; Fam, B. A. (1979). "From intermittent catheterisation to catheter freedom via urodynamics: A tribute to Sir Ludwig Guttmann". Paraplegia 17 (1): 73–85. doi:10.1038/sc.1979.17. பப்மெட்:492753. 
 8. Scruton, J. (1979). "Sir Ludwig Guttmann: Creator of a sports movement for the paralysed and other disabled". Paraplegia 17 (1): 52–55. doi:10.1038/sc.1979.13. பப்மெட்:158734. 
 9. 9.0 9.1 "Professor Sir Ludwig Guttmann". The Poppa Guttmann Trust. 2010 இம் மூலத்தில் இருந்து 18 August 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120818225455/http://www.poppaguttmanncelebration.org/poppa2.php. "Professor Sir Ludwig Guttmann". poppaguttmanncelebration.org. The Poppa Guttmann Trust. 2010. Archived from the original on 18 August 2012. Retrieved 17 August 2012.
 10. "AJR Honors Sir Ludwig Guttmann". IHRA. 19 November 2013. https://www.holocaustremembrance.com/news-archive/ajr-honors-sir-ludwig-guttmann. 
 11. Silver, JR (8 February 2005). "History of the treatment of spinal injuries". BMA Postgraduate Medical Journal 81 (952): 108–114. doi:10.1136/pgmj.2004.019992. பப்மெட்:15701743. 
 12. "How CARA helped Ludwig Guttmann, Creator of the Paralympics". CARA. 2012 இம் மூலத்தில் இருந்து 9 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140309031859/http://www.cara1933.org/events/30/how-cara-helped-ludwig-guttmann-founder-of-the-paralympics. 
 13. Seven Roads in Summertown: Voices from an Oxford Suburb. White Cockade Publishing. 
 14. Then and Now: A collection of recollections: to commemorate the 150th anniversary Oxford Jewish Congregation, 1842–1992. Oxford Jewish Congregation. 
 15. "Interview with Eva Loeffler, April 2011". Buckinghamshire County Council இம் மூலத்தில் இருந்து 15 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120815050230/http://www.mandevillelegacy.org.uk/documents/Eva_Loeffler_full_interview.pdf. 
 16. name="biography"
 17. Jürgen Probst: Gedenken der jüdischen Mitglieder der Deutschen Gesellschaft für Unfallheilkunde, Versicherungs- und Versorgungsmedizin Orthopädie und Unfallchirurgie Mitteilungen und Nachrichten, October 2013, pp. 606–613.
 18. 18.0 18.1 Druzin, Randi (5 September 2008). "Paralympics traces roots to Second World War". Canadian Broadcasting Corporation. https://www.cbc.ca/olympics/story/2008/09/02/f-paralympics-history.html. 
 19. Vanlandewijck, Yves C.; Thompson, Walter R., தொகுப்பாசிரியர்கள் (2011). ""Chapter 1: Background to the Paralytic movement"". The Paralympic Athlete: Handbook of Sports Medicine and Science (Olympic Handbook of Sports Medicine). Wiley-Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4443-3404-3. https://books.google.com/books?id=1pAoIZG3-4cC&q=Ludwig+Guttmann&pg=PT27. 
 20. "About ISCoS – ISCoS Presidents". International Spinal Cord Society இம் மூலத்தில் இருந்து 30 April 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090430133159/https://www.iscos.org.uk/page.php?content=19. 
 21. 21.0 21.1 "About ISCoS – Sir Ludwig Guttmann Lecture". International Spinal Cord Society இம் மூலத்தில் இருந்து 7 May 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090507141842/https://www.iscos.org.uk/page.php?content=31. 
 22. Bailey, Steve (2008). Athlete First: A history of the Paralympic Movement. John Wiley & Sons. பக். 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-05824-4. 
 23. "Stoke Mandeville Stadium". stokemandevillestadium.co.uk/. http://www.stokemandevillestadium.co.uk/. 
 24. "The Institution – History". 5 June 2015. https://www.guttmann.com/en/history. 
 25. "Paralympics founder Ludwig Guttmann's statue unveiled at Stoke Mandeville". https://www.bbc.co.uk/news/uk-england-beds-bucks-herts-18577678. 
 26. "Paralympics Games: Founder Ludwig Guttmann would be 'proud'". https://www.bbc.co.uk/news/uk-england-suffolk-19351439. 

நூலியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ludwig Guttmann
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலுத்விக்_குட்மேன்&oldid=3723625" இருந்து மீள்விக்கப்பட்டது