உள்ளடக்கத்துக்குச் செல்

இலுத்மிலா பாவ்லிசென்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலுத்மிலா பாவ்லிசென்கோ
1943-ல் இலுத்மிலா பாவ்லிசென்கோ
சுதேசியப் பெயர்
  • Людмила Михайловна Павличенко
பிறப்பின்போதான் பெயர்இலுத்மிலா மிகைலோவ்னா பாவ்லிசென்கோ
பட்டப்பெயர்(கள்)லேடி டெத்
பிறப்பு(1916-07-12)12 சூலை 1916
பிலா செர்க்வா, உருசியப் பேரரசு
இறப்பு10 அக்டோபர் 1974(1974-10-10) (அகவை 58)
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
அடக்கம்
நோவோடெவிச்சி கல்லறை
சார்புசோவியத் ஒன்றியம்
சேவை/கிளைசெஞ்சேனை
சேவைக்காலம்1941–1953
தரம்சோவியத் கடற்படையின் மூத்த ஆராய்ச்சியாளர்
துணை(கள்)
  • அலெக்ஸி கிட்சென்கோ
    (தி. 1932, divorced)
    [1]
  • அலெக்ஸி கிட்சென்கோ
    (தி. 1941; இற. 1942)
பிள்ளைகள்ரோஸ்டிலாவ் [1]

இலுத்மிலா மிகைலோவ்னா பாவ்லிசென்கோ (Lyudmila Mikhailovna Pavlichenko) ஜூலை 12,-அக்டோபர் 10,1974).[a] இரண்டாம் உலகப் போரின் போது துடிப்பாக செயல்பட்ட செஞ்சேனையைச் சேர்ந்த சோவியத் ஒன்றியத்தின் குறிசுடுநர் ஆவார். 309 எதிரி போராளிகளைக் கொன்ற பெருமை இவருக்கு உண்டு. இதனால் வரலாற்றில் மிக மோசமான குறிசுடுநர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.[2][3][4] கிழக்குப் போர்முனையில் நடந்த சண்டையின் ஆரம்ப கட்டங்களிலும், ஒடெசா முற்றுகை மற்றும் செவாஸ்டோபோல் முற்றுகையின் போதும் இவர் செஞ்சேனையில் பணியாற்றினார்.

போரில் பீரங்கி குண்டு மூலம் காயமடைந்த பின்னர், இவர் சிகிச்சைக்காக மாஸ்கோவுக்கு அனுப்பப்பட்டார்.[5] தனது காயங்களிலிருந்து மீண்ட பிறகு, பிற செஞ்சேனை குறிசுடுபவர்களுக்கு பயிற்சி அளித்தார். மேலும், செஞ்சேனையின் பொது செய்தித் தொடர்பாளராகவும் இருந்தார். 1942 ஆம் ஆண்டில், அமெரிக்கா, கனடா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் சுற்றுப்பயணம் செய்தார். 1945-இல் போர் முடிவடைந்த பிறகு, சோவியத் கடற்படையின் மூத்த ஆராய்ச்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்டார். இலுத்மிலா தனது 58 வயதில் பக்கவாதத்தால் இறந்தார்.[2]

இளமை வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

இலுத்மிலா பெலோவ் உருசியப் பேரரசில் (இப்போது கீவ் மாகாணம், உக்ரைன்) சென் பீட்டர்சுபெர்குவைச் சேர்ந்த உருசிய பிரபுக்களில் ஒருவரான[3] மைக்கேல் பெலோவ் மற்றும் அவரது மனைவி எலெனா டிரோஃபிமோவ்னா பெலோவ[3] ஆகியோருக்கு ஜூலை 12 அன்று மகளாகப் பிறந்தார்.[4] இலுத்மிலாவுக்கு 14 வயதாக இருந்தபோது குடும்பம் கீவுக்கு குடிபெயர்ந்தது.[6] இவரின் தந்தை ஒரு பொதுவுடைமைக் கட்சி உறுப்பினராக இருந்தார். மேலும் செஞ்சேனையில் படைப்பிரிவு ஆணையராக பணியாற்றினார். ஆர்டர் ஆஃப் தி ரெட் பேனர் என்ற இராணுவ அலங்காரம் வழங்கப்பட்டது.[3]

குழந்தையாக இருக்கும்போது இலுத்மிலா ஆணியல் பெண்ணாக இருந்தார். தடகள விளையாட்டுகளில் போட்டியிட்டார். ஒரு துப்பாக்கி சுடும் சங்கத்தில் சேர்ந்து தொழில்முறை மறைசுடுவீராங்கனையாக வளர்ந்தார்.

1932 ஆம் ஆண்டில், அலெக்ஸி பாவ்லிசென்கோ என்பவரை மணந்தார். இவர்களுக்கு ரோஸ்டிஸ்லாவ் (1932-2007) என்ற மகன் பிறந்தார். இருப்பினும், திருமணம் விரைவில் விவாகரத்தில் முடிந்தது. இலியுட்மிலா தனது பெற்றோருடன் வாழ திரும்பினார். அங்கு ஒரு இரவுப் பள்ளியில் பயின்றார். அதே நேரத்தில் வருமானத்திற்காக வீட்டு வேலைகளையும் செய்தார்.[5] பகலில், இவர் கீவ் அர்செனல் தொழிற்சாலையில் அரைப்பவராகவும் பணியாற்றினார்.[5][7]

1937 இல் கீவ் தேசியப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வரலாற்றைப் படித்தார். ஒரு அறிஞராகவும் ஆசிரியராகவும் இருக்க விரும்பினார். அங்கு, பல்கலைக்கழகத்தின் தடகள அணியில் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனையாகவும், உயரம் தாண்டுபவராகவும் இருந்தார்.[5][8] பின்னர், செஞ்சேனையால் ஆறு மாதங்களுக்கு இராணுவ பாணி துப்பாக்கி சுடும் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.[5]

இரண்டாம் உலகப் போர்

[தொகு]
ஒரு அகழியில் பாவ்லிசென்கோ (1942).

ஜூன் 1941 இல், நாஜி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுக்கத் தொடங்கியபோது, கீவ் பல்கலைக்கழகத்தில் நான்காவது ஆண்டில் படித்து வந்தார்.[7] ஒடெசா சென்று காலாட்படையில் தன்னை சேர்க்கக் கோரினார்.

அனால் அங்கு ஒரு செவிலியர் பணியில் சேர வலியுறுத்தப்பட்டார். ஆனால் செவிலியராக சேர மறுத்து விட்டார். இவர் துப்பாக்கி சுடுவதில் பல பயிற்சிகளை முடித்திருப்பதைக் கண்ட பிறகு, இறுதியாக ஒரு குறிசுடுபவராக இராணுவத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, செஞ்சிலுவைப் படையின் 25 வது ரைபிள் பிரிவில் நியமிக்கப்பட்டார்.[9] அங்கு, செஞ்சேனை இராணுவத்தில் 2,000 பெண் குறிசுடுபவர்களில் ஒருவராக ஆனார்.[5] முதன்முதலில் ஆகஸ்ட் 8,1941 அன்று பிலியாவ்காவில் நடந்த ஒரு தாக்குதலில் இரண்டு நாஜி அதிகாரிகளை தனது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.[3]

ஒடெசா முற்றுகையின் போது பாவ்லிசென்கோ மேலும் 187 வீரர்களைக் கொன்றார்.[10] ஆகஸ்ட் 1941 இல் மூத்த அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். தனது 25 வயதில், சக குறிசுடுநரான அலெக்ஸி கிட்சென்கோ என்பவரை மணந்தார்.[5] திருமணத்திற்குப் பிறகு, கிட்சென்கோ ஒரு பீரங்கித் தாக்குதலில் காயமடைந்த காரணத்தால் மருத்துவமனையில் இறந்தார்.[8]

இரண்டாம் உலகப் போரின் போது பாவ்லிசென்கோவால் 309 நாஜி வீரர்கள் கொல்லப்பட்டனர்.[9][11]

ஜூன் 1942 இல், பாவ்லிசென்கோ ஒரு கணையெக்கியால் தாக்கப்பட்டார். காயமடைந்த இவர் போர் முனையிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல் வழியாக வெளியேறினார்.[3]

பின்னர், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பின்னர், செஞ்சேனையின் பிரச்சாரகராக ஆனார். மேலும் "லேடி டெத்" எனவும் அழைக்கப்பட்டார்.[2][2][5][12][13]

பிற்கால வாழ்க்கை

[தொகு]

போர் முடிவடைந்ததும், பாவ்லிசென்கோ கீவ் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை முடித்து வரலாற்றாசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[5][8] 1945 முதல் 1953 வரை சோவியத் கடற்படை தலைமையகத்தில் ஆராய்ச்சி உதவியாளராக இருந்தார். பின்னர் சோவியத் போர் வீரர்கள் குழுவில் தீவிரமாக இருந்தார்.[9]

இறப்பு

[தொகு]

1974 அக்டோபர் 10 அன்று 58 வயதில் பக்கவாதத்தால் இறந்த இலுத்மிலா பாவ்லிசென்கோ, மாஸ்கோவில் உள்ள நோவோடெவிச்சி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[14]

குறிப்புகள்

[தொகு]
  1. பெரும்பாலான ஆதாரங்கள் இவரது கூற்றுக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ சோவியத் கணக்குகளின் அடிப்படையில் 309 கொலைகளைச் செய்ததாகக் கூறுகின்றன. ஆனால் நவீன வரலாற்றாசிரியர்கள் இந்த எண்ணிக்கையை கேள்விக்குள்ளாக்கத் தொடங்கியுள்ளனர். உருசிய வரலாற்றாசிரியர் ஒலெக் காமின்ஸ்கி இவரது முரண்பாடான கூற்றுக்கள் மற்றும் நிகழ்வுகளின் காலவரிசைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இவருக்குக் கூறப்பட்ட பல சாதனைகளை கேள்விக்குள்ளாக்கினார். உறுதிப்படுத்தப்பட்ட கொலைக்கு சாட்சிகள் தேவைப்படுவதால் இவரது கொலைகள் அதிகமாக இருந்திருக்கலாம் என்று பிற ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Simonov & Chudinova 2017, ப. 160.
  2. 2.0 2.1 2.2 2.3 Lockie, Alex. "Meet the world's deadliest female sniper who terrorized Hitler's Nazi army". Business Insider. Retrieved 2019-10-20.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Vinogradova, Lyuba (2017). Avenging Angels: Young Women of the Soviet Union's WWII Sniper Corps (in ஆங்கிலம்). Quercus. pp. 37–47. ISBN 9781681442839.
  4. 4.0 4.1 "Meet the world's deadliest female sniper who terrorized Hitler's Nazi army". Business Insider.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 "Lady Death: Lyudmila Pavlichenko, the Greatest Female Sniper of All Time". mentalfloss.com (in ஆங்கிலம்). 2018-12-06. Retrieved 2019-10-20.
  6. King, Gilbert (February 21, 2013). "Eleanor Roosevelt and the Soviet Sniper". Smithsonian. http://www.smithsonianmag.com/history/eleanor-roosevelt-and-the-soviet-sniper-23585278/. 
  7. 7.0 7.1 Heroines of the Soviet Union 1941-45 by Henry Skaida, Osprey Publishing, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1841765988/பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1841765983, page 31
  8. 8.0 8.1 8.2 . 
  9. 9.0 9.1 9.2 Heroines of the Soviet Union 1941-45 by Henry Skaida, Osprey Publishing, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1841765988ISBN 1841765988/பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1841765983ISBN 978-1841765983, page 31
  10. Women and War: A Historical Encyclopedia from Antiquity to the Present originally from Ukraine by Arthur Bernard Cook, ABC-CLIO, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1851097708/பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1851097708, page 457
  11. Pat Farey; Mark Spicer (5 May 2009). Sniping: An Illustrated History. MBI Publishing Company. p. 129. ISBN 978-0-7603-3717-2. Retrieved 18 March 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  12. Pavlichenko, Lyudmila; Pegler, Martin (5 February 2018). Lady Death: The Memoirs of Stalin's Sniper. Greenhill Books. ASIN 1784382701.
  13. Ross, Greg (2018-11-12). "Podcast Episode 224: Lady Death". Futility Closet. Retrieved 2023-11-17.
  14. Wollstone, Edgar, Lady Death - The Beauty With a Sniper: Fascinating Tale of Lyudmila Pavlichenko, The Deadliest Female Sniper in History, p. 30.

நூல் ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இலுத்மிலா_பாவ்லிசென்கோ&oldid=4444572" இலிருந்து மீள்விக்கப்பட்டது