உள்ளடக்கத்துக்குச் செல்

இலுகன்சுக் மக்கள் குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலுகன்சுக் மாகாணம்
கொடி of
கொடி
குறிக்கோள்: 
Луганск, сила и свобода
"Luhansk, strong and free"
நாட்டுப்பண்: 
Гимн Луганской Народной Республики
"Anthem of the Luhansk People's Republic"[1]
2014-இல் இலுகன்சுக் மக்கள் குடியரசாக அறிவித்துக் கொண்ட பகுதிகள் (வெளிர் மற்றும் அடர்பச்சை): கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் (அடர் பச்சை நிறம்)
2014-இல் இலுகன்சுக் மக்கள் குடியரசாக அறிவித்துக் கொண்ட பகுதிகள் (வெளிர் மற்றும் அடர்பச்சை): கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் (அடர் பச்சை நிறம்)
நிலை21 பிப்ரவரி 2022 அன்று உருசியா மட்டும் இதற்கு அங்கீகாரம் அளித்துள்ள்து.
தலைநகரம் இலுகன்சுக்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)ருசியா[2]
அரசாங்கம்ஓரவை, அரசியலமைப்பு குடியரசு
• குடியரசுத் தலைவர்
லியோனிட் பசெக்னிக்
• பிரதம அமைச்சர்
செர்ஜி இவனோவிச் கோஸ்லோவ்
• தலைவர், மக்கள் குழு
டெனிஸ் மிரோஷ்னிசென்கோ
சட்டமன்றம்இலுகன்சுக் மக்கள் குடியரசின் மக்கள் குழு
உக்ரைலிருந்து பிரிந்த தன்னாட்சி நாடு
• நிறுவப்பட்ட ஆண்டு
27 ஏப்ரல் 2014
• இலுகன்சுக் மக்கள் குடியரசு
11 மே 2014
5 செப்டம்பர் 2014
• இரண்டாம் மின்ஸ்க் ஒப்பந்தம்
12 பிப்ரவரி 2015
• உருசியாவால் அங்கீகாரம் பெற்றது
21 பிப்ரவரி 2022
பரப்பு
• மொத்தம்
8,377 km2 (3,234 sq mi)
மக்கள் தொகை
• மதிப்பிடு
1,464,039[3]
நாணயம்உருசிய ரூபிள், உக்ரைன் நாணயம், யுரோ[4]
நேர வலயம்ஒ.அ.நே+3[5]
உக்ரைன் நாட்டின் கிழக்கில் தொன்பாஸ் பிரதேசத்தில் லுகான்ஸ்கா மாகாணம் மற்றும் தோனெத்ஸ்க் மாகாணம்
உக்ரைன் நாட்டின் கிழக்கில் லுகான்ஸ்கா மாகாணம் மற்றும் தோனெத்ஸ்க் மாகாணம்

இலுகன்சுக் மக்கள் குடியரசு (Luhansk People's Republic)[6][7] (உருசியம்: Луга́нская Наро́дная Респу́блика, ஒ.பெ Luganskaya Narodnaya Respublika, பஒஅ[lʊˈɡanskəjə nɐˈrodnəjə rʲɪˈspublʲɪkə]; உக்ரைனியன்: Луганська Народна Республіка), (சுருக்கப் பெயர் LPR or LNR), இதன் தலைநகரம் இலுகன்சுக் நகரம் ஆகும். உக்ரைனின் வடகிழக்கில் அமைந்த தொன்பாஸ் பிரதேசத்தில் அமைந்த இலுகன்சுக் மாகாணத்தின் உருசியா ஆதரவு பெற்ற கிளர்ச்சிகளின் விளைவாக, 27 ஏப்ரல் 2014 அன்று இலுகன்சுக் மாகாணம், தன்னை மக்கள் குடியரசு நாடு என தானாக அறிவித்துக் கொண்டது. 5 செப்டம்பர் 2014 அன்று உக்ரைன், ருசியா மற்றும் இலுகன்சுக் மாகாண கிளர்ச்சிப்படைகள் செய்து கொண்ட மின்ஸ்க் முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி இலுகன்சுக் மாகாணம் தனி நாடாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இலுகன்சுக் மக்கள் குடியரசு நாட்டிற்கு உருசியா மட்டும் 21 பிப்ரவரி 2022 அன்று அங்கீகாரம் வழங்கியது. பின்னர் 22 பிப்ரவரி 2022 அன்று உருசியா இலுகன்சுக் மக்கள் குடியரசை அங்கீகாரம் அளித்ததை கியுபா, சிரியா, வெனிசூலா மற்றும் நிகரகுவா நாடுகள் வரவேற்றது.[8][9]ஆனால் பிற உலக நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அவை இலுகன்சுக் மக்கள் குடியரசிற்கு, நாடு என்ற அங்கீகாரம் வழங்கவில்லை. மேலும் உக்ரைன் நாட்டு அதிகாரிகள், இரண்டாம் மின்ஸ்க் ஒப்பந்தத்திற்கு எதிராக ருசியா இலுகன்சுக் மக்கள் குடியரசை அங்கீகாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததுள்ளது.[10]

நாட்டு விவரம்[தொகு]

2018-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 8377 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இலுகன்சுக் மக்கள் குடியரசின் மக்கள் தொகை 14,64,039 ஆகும். இது ஓரவை முறைமை கொண்ட நாடாளுமன்ற அரசியல் அமைப்பு கொண்டது. இதன் முதல் குடியரசுத் தலைவர் லியோனிட் பசெக்னிக் ஆவார். முதல் பிரதம அமைச்சர் செர்ஜி இவனோவிச் கோஸ்லோவ் ஆவார். இதன் நாணயம் உருசிய ரூபிள் ஆகும். இதற்கென தனி அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இராணுவம் உள்ளது. இந்நாட்டிற்கு ருசியா மட்டும் அகீகாரம் அளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவையில் இந்நாட்டை உறுப்பினராக சேர்க்கவில்லை.

பொது வாக்கெடுப்பு[தொகு]

இலுகன்சுக் குடியரசு தன்னாட்சியுடன் செயல்பட வேண்டுமா அல்லது வேண்டமா என்பது குறித்து 11 மே 2014 அன்று வாக்கெடுப்பு நடைபெற்றது.[11]இந்த பொது வாக்கெடுப்பை கண்காணிக்க பன்னாட்டுப் பார்வையாளர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. [12]பொது வாக்கெடுப்பில் 81% பேர் வாக்களித்தனர். இலுகன்சுக் குடியரசு தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக 96.2% பேர் வாக்களித்தனர். 3.8% மக்கள் எதிராக வாக்களித்தனர்.[12]

விடுதலை அறிவிப்பு[தொகு]

பொது மக்கள் வாக்கெடுப்பின்படி, இலுகன்சுக் குடியரசு தன்னாட்சியுடன் கூடிய நாடாக அறிவித்து கொண்டது.[13] ஆனால் இலுகன்சுக் மாகாணக் குடியரசுக் குழு இதனை ஆதரிக்கவில்லை என்றாலும், இலுகன்சுக் குடியரசு, உக்ரைன் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக செயல்படலாம் எனக்கருதியது.[14][15]மேலும் இப்பிராந்தியத்தில் உக்ரேனிய இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும், அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பொது மன்னிப்பு மற்றும் உக்ரைனில் ருசியா மொழிக்கான அதிகாரப்பூர்வ தகுதியை வழங்கவும் கோரியது. .[15]

20 மே 2014 அன்று இலுகன்சுக் மக்கள் குடியரசு மற்றும் தோனெத்ஸ்க் மக்கள் குடியரசு கூட்டாக தங்களை தன்னாட்சி கொண்ட சுதந்திர நாடுகளாக அறிவித்துக் கொண்டது.[16]

பின்னணி[தொகு]

நேட்டோ அமைப்பில் ஒரு உறுப்பினராக உக்ரைன் நாடு சேர முடிவு எடுத்தது. உக்ரைன் நாட்டின் இந்த முடிவால், நேட்டோ அமைப்பின் இராணுவம் தனது எல்லை அருகே நிறுத்தப்படலாம் என்ற அச்சம் ருசியாவிற்கு ஏற்பட்டது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது என வலியுறுத்தி, உக்ரைனின் கிழக்கில் உள்ள தொன்பாஸ் பிரதேசத்தில் உள்ள மாகாணங்களில், ருசியா ஆதரவு பெற்ற உருசிய மொழி பேசும் கிளர்ச்சிப் படைகள் உக்ரைனிற்கு எதிராக 2014-ஆம் ஆண்டில் பெரிய அளவில் கிளர்ச்சிகள் செய்தனர். இதனிடையே உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள கிரிமியா தீபகற்த்தை ருசியா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி, ருசியாவுடன் இணைத்தனர். 2014-ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட மின்ஸ்க் முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி இலுகன்சுக் தன்னாட்சி நாடாக அறிவித்துக் கொண்டது. அதே போன்று தோனெத்ஸ்க் மாகாணமும் தன்னாட்சி நாடாக அறிவித்துக் கொண்டது.[17][18][19][20]

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

இலுகன்சுக் மக்கள் குடியரசின் மாவட்டங்கள்

2014-ஆம் ஆண்டு முதல் இலுகன்சுக் மக்கள் குடியரசு 17 நகராட்சிகளும், மாவட்டங்களும் கொண்டுள்ளது.[21][22]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. National Anthem of Lugansk People's Republic - Гимн ЛНР (lugansk anthem, 루간스크 인민 공화국의 국가) பரணிடப்பட்டது 8 பெப்பிரவரி 2022 at the வந்தவழி இயந்திரம் YouTube (https://www.youtube.com பரணிடப்பட்டது 3 பெப்பிரவரி 2016 at Archive.today). Retrieved on 16 March 2021.
 2. (in ru). Interfax. 3 June 2020 இம் மூலத்தில் இருந்து 4 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200604232452/https://www.interfax.ru/world/711580. 
 3. "Population count of the Lugansk People's Republic on April 1st, 2018" (PDF). Committee of statistic of Lugansk People's Republic. 1 April 2018. Archived (PDF) from the original on 26 May 2018. பார்க்கப்பட்ட நாள் 26 May 2018.
 4. "The War republics in the Donbas one year after the outbreak of the conflict". 17 June 2015. Archived from the original on 29 June 2015. பார்க்கப்பட்ட நாள் 11 April 2016.
 5. "Russia Abandons Year-Round Summer Time". abcnews.go.com. 2 July 2014 இம் மூலத்தில் இருந்து 1 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140701143647/http://abcnews.go.com/International/wireStory/russia-abandons-year-round-daylight-saving-time-24378099. 
 6. Lugansk People’s Republic head resigns பரணிடப்பட்டது 7 ஆகத்து 2019 at the வந்தவழி இயந்திரம், TASS news agency (24 November 2017)
 7. "Lugansk Media Centre". en.lug-info.com. Archived from the original on 21 February 2021. பார்க்கப்பட்ட நாள் 9 May 2018.
 8. https://www.reuters.com/world/middle-east/syria-supports-putins-recognition-ukraine-breakaway-regions-fm-2022-02-22/
 9. "Donetsk and Luhansk: What you should know about the 'republics'". Al Jazeera. 22 February 2022.
 10. Russia accepts passports issued by east Ukraine rebels பரணிடப்பட்டது 21 சூலை 2018 at the வந்தவழி இயந்திரம், BBC News (19 February 2017)
 11. "Явка на референдуме в Луганской области превысила 75% :: Политика". Top.rbc.ru. Archived from the original on 20 June 2014. பார்க்கப்பட்ட நாள் 8 July 2014.
 12. 12.0 12.1 "Ukraine crisis: Will the Donetsk referendum matter?". BBC News. 12 May 2014 இம் மூலத்தில் இருந்து 16 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150416193356/http://www.bbc.com/news/world-europe-27344412. 
 13. "Separatists Declare Independence Of Luhansk Region". The Huffington Post. Archived from the original on 29 November 2014. பார்க்கப்பட்ட நாள் 25 March 2015.
 14. "Luhansk Regional Council demands Ukraine's immediate federalization". KyivPost. 12 May 2014. Archived from the original on 10 May 2015. பார்க்கப்பட்ட நாள் 25 March 2015.
 15. 15.0 15.1 "Luhansk". Interfax-Ukraine. Archived from the original on 12 November 2020. பார்க்கப்பட்ட நாள் 25 March 2015.
 16. "Луганская и Донецкая республики объединились в Новороссию". Novorossia. 24 May 2014 இம் மூலத்தில் இருந்து 26 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140626234046/http://novorossia.su/node/1798. 
 17. Ukraine crisis: Russian troops crossed border, Nato says பரணிடப்பட்டது 31 திசம்பர் 2019 at the வந்தவழி இயந்திரம், BBC News (12 November 2014)
  Putin defends rebel leaders in eastern Ukraine பரணிடப்பட்டது 27 திசம்பர் 2019 at the வந்தவழி இயந்திரம், BBC News (19 December 2019)
  Ukraine conflict: Front-line troops begin pullout பரணிடப்பட்டது 10 பெப்பிரவரி 2020 at the வந்தவழி இயந்திரம், BBC News (29 October 2019)
 18. "Database and Video Overview of the Russian Weaponry in the Donbas". InformNapalm.org (English) (in அமெரிக்க ஆங்கிலம்). 17 September 2016. Archived from the original on 20 December 2019. பார்க்கப்பட்ட நாள் 20 December 2019.
 19. "Second Russian aid convoy arrives in Ukrainian city of Luhansk: agencies" (in en). Reuters. 13 September 2014 இம் மூலத்தில் இருந்து 20 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191220170126/https://www.reuters.com/article/us-ukraine-crisis-convoy-idUSKBN0H72E120140913. 
 20. "Lugansk Media Centre — Russian humanitarian aid convoy arrives in Lugansk". en.lug-info.com. Archived from the original on 22 December 2019. பார்க்கப்பட்ட நாள் 22 December 2019.
 21. (in ru). Корреспондент. 14 November 2014 இம் மூலத்தில் இருந்து 14 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161014013922/http://korrespondent.net/ukraine/3444086-kabmyn-nazval-horoda-donbassa-podkontrolnye-separatystam. 
 22. Численность населения по состоянию на 1 октября 2015 года по Луганской Народной Республике [The population as of 1 October 2015 per the Lugansk People's Republic] (PDF) (in ரஷியன்). Luhansk People's Republic. 29 October 2015. Archived from the original (PDF) on 4 February 2016. பார்க்கப்பட்ட நாள் 21 December 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lugansk People's Republic
என்பதில் ஊடகங்கள் உள்ளன.