இலிவிங்சுடோனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலிவிங்சுடோனைட்டு
Livingstonite
ஆண்டிமனியின் சிடிப்னைட்டு தாது மீது பிரகாசமான எஃகு-உலோக இலிவிங்சுடோனைட்டின் 1.2 செ.மீ அளவுள்ள சிரால்கள். மெக்சிகோவின் அயுட்சுகோ டி லாசு பிகுயுரோ நகராட்சியில் கிடைத்தது.
பொதுவானாவை
வகைசல்போவுப்புக் கனிமம்
வேதி வாய்பாடுHgSb4S8
இனங்காணல்
நிறம்கருஞ்சாம்பல்; பளபளப்பான பகுதிகளில், வெண்மை; சிவப்பு பிரதிபலிப்பு ஒளியில்,உள்ளக எதிரொளிப்பில் ஆழ்ந்த சிவப்பு
படிக இயல்பு[010] முதல் 12 செ.மீ ஊசிகளாக ; இழைகளாக, பொதி, தூண், இடைப்பிண்ணிய ஊசிகள்.
படிக அமைப்புஒற்றைச்சரிவு
பிளப்பு{001} இல் தெளிவு, {010} மற்றும் {100} இல் குறைவு
முறிவுசமமற்றது, தட்டை மேற்பரப்பு
விகுவுத் தன்மைநெகிழும்
மோவின் அளவுகோல் வலிமை2
மிளிர்வுவிடாப்பிடியான உலோகத் தன்மை
கீற்றுவண்ணம்சிவப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது, மெல்லிய படலங்களில் ஒளி கசியும்
ஒப்படர்த்தி4.8 - 4.88 அளக்கப்பட்டது 4.98 கணக்கிடப்பட்டது.
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (–)
ஒளிவிலகல் எண்>= 2.72
பலதிசை வண்ணப்படிகமைவலிமையற்றது; பலமான திசைமாறி
மேற்கோள்கள்[1][2][3]

இலிவிங்சுடோனைட்டு (Livingstonite) என்பது HgSb4S8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் பாதரச ஆண்டிமனி சல்போவுப்பு வகை கனிமமாகும். தாழ்வெப்பநிலை நீர்வெப்பப் பகுதிகளில் சின்னபார், சிடிப்னைட்டு, கந்தகம், கிப்சம் கனிமங்களுடன் சேர்ந்து இது தோன்றுகிறது.

தென்மேற்கு மெக்சிகோவின் அயுட்சுகோ டி லாசு பிகுயுரோ நகராட்சியில் முதன் முதலாக 1874 ஆம் ஆண்டு இலிவிங்சுடோனைட்டு கண்டறியப்பட்டது.

இசுக்கொட்லாந்து நாட்டின் ஆபிரிக்க ஆய்வுப்பயணி டேவிட் லிவிங்சுட்டனை சிறப்பிக்கும் விதமாக கனிமத்திற்கு இலிவிங்சுடோனைட்டு எனப் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  • Palache, C., H. Berman, and C. Frondel (1944) Dana’s system of mineralogy, (7th edition), v. I, 485–486
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலிவிங்சுடோனைட்டு&oldid=2963622" இலிருந்து மீள்விக்கப்பட்டது