இலிர்னெய்ட்டு
தோற்றம்
| இலிர்னெய்ட்டு Ilirneyite | |
|---|---|
| பொதுவானாவை | |
| வகை | தெலூரைட்டு |
| வேதி வாய்பாடு | Mg0.5[ZnMn3+(TeO3)3]•4.5H2O |
| இனங்காணல் | |
| படிக அமைப்பு | அறுகோணம் |
| மேற்கோள்கள் | [1] |
இலிர்னெய்ட்டு (Ilirneyite) என்பது Mg0.5[ZnMn3+(TeO3)3]•4.5H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அரிய தெலூரைட்டு கனிமமாக வகைப்படுத்தப்படும் இக்கனிமம் உருசியாவின் மேற்கு சுகோட்காவில் உள்ள இலிர்னி மலைத்தொடரில் உள்ள செண்டியாபர்சுகோ படிவுகளில் (வெள்ளி மற்றும் தங்கம்) கண்டுபிடிக்கப்பட்டது.[1]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் இலிர்னெய்ட்டு கனிமத்தை Iny[2]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
இலிர்னெய்ட்டு கனிமம் செமானைட்டு கனிமத்தின் மூன்று இணைதிற-மாங்கனீசு ஒப்புமை ஆகும். கீசுடோனைட்டு மற்றும் கினிசிலிட்டின் துத்தநாகம்- மற்றும் மாங்கனீசின் ஒப்புமையாகவும் கருதப்படுகிறது.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Pekov, I.V., Siidra, O.I., Vlasov, E.A.,Yapaskurt, V.O., Lukina, E.A., Polekhovsky, Y.S., and Apletalin, A.V., 2015. Ilirneyite, IMA2015-046. CNMNC Newsletter No. 27, October 2015, 1225; Mineralogical Magazine 79, 1229–1236
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ "Zemannite: Zemannite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-12.
- ↑ "[International Mineralogical Association] : List of Minerals - IMA". Ima-mineralogy.org. 21 March 2011. Retrieved 2016-03-12.
வெளி இணைப்புகள்
[தொகு]- Ilirneyite on Mindat: "Ilirneyite: Ilirneyite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-12.