உள்ளடக்கத்துக்குச் செல்

இலியோசிச்சலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலியோசிச்சலா
இலியோசிச்சலா ரைப்போனி, கருஞ்சிவப்பு முகம் சிரிப்பான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லியோசிச்லா

சுவைன்கோ, 1877
மாதிரி இனம்
இலியோசிச்சலா இசுடீரி[1]
சுவைன்கோ, 1877
சிற்றினம்

உரையினை காண்க

இலியோசிச்சலா (Liocichla) என்பது இலியோத்ரிச்சிடே குடும்பத்தைச் சேர்ந்த இலியோசிச்லா என்ற அதே பெயரில் உள்ள பறவைகளின் பேரினமாகும். இவை இந்தியா முதல் சீனா வரை ஆசியாவில் காணப்படுகின்றன. இவை குறைந்தபட்சம் லியோத்ரிக்சு, ஆக்டினோடுரா, மின்லா மற்றும் கெட்டிரோபாசியா ஆகியவற்றைக் கொண்ட ஒரு உயிரிக்கிளையினைச் சேர்ந்தவை. இவற்றில், இலியோசிச்சலா ஆரம்பக்கால கிளை அல்லது அடித்தள பரம்பரை உருவாக்கியுள்ளது.[2]

வகைப்பாட்டியல்

[தொகு]

இக்குழுவில் உள்ள விவரக்குறிப்பின்படி தெற்கு சீனாவில் எங்காவது தோன்றிய மூதாதையர் சிற்றினங்களுடன் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. இது இலி. இசுடீரியை அடிப்படை சிற்றினமாக மாற்றுகிறது. இலி. ரைப்போனி மற்றும் இலி. பீனிசியாவைக் கொண்ட பரம்பரையானது பிளீசுடோசீனில் (0.07–1.88 மா) பிளவுபட்டதாகக் கருதப்படுகிறது. மற்ற வம்சாவளியைப் போலவே கெங்டுவான் மலைகளால் பிரிக்கப்பட்ட இலி. புகுனோரம் மற்றும் இலி. ஒமியென்சிசு சிற்றினங்கள் தோன்ற வழிவகுத்தது.

லி. ஸ்டீரி

லி. ஓமியென்சிசு

லி. புகுனோரம்

லி. பீனிசியா

லி. ரிப்போனி

பேரினத்தின் இன உறவு முறை.[3]

சிற்றினங்கள்

[தொகு]

இலியோசிச்சலா பேரினத்தில் ஐந்து சிற்றினங்கள் உள்ளன. இவை:[4]

படம் விலங்கியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
இலியோசிச்சலா பீனிசியா செம்மூஞ்சு சிரிப்பான் பங்களாதேஷ், பூட்டான், மியான்மர், வடகிழக்கு இந்தியா, நேபாளம் மற்றும் மேற்கு யுனான்.
இலியோசிச்சலா ரிப்போனி கருஞ்சிவப்பு முகம் சிரிப்பான் மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் தெற்கு சீனா.
இலியோசிச்சலா ஓமியென்சிசு எமி சான் சிரிப்பான் சிச்சுவான், சீனா.
இலியோசிச்சலா புகுனோரம் பூகுன் பாடும்பறவை அருணாசலப் பிரதேசம், இந்தியா
இலியோசிச்சலா இசுடீரி இசுடீரின் சிரிப்பான் தைவான்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Leiothrichidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. Retrieved 2023-07-15.
  2. Cibois, Alice (2003). "Mitochondrial DNA phylogeny of babblers (Timaliidae)". Auk 120 (1): 35–54. doi:10.1642/0004-8038(2003)120[0035:MDPOBT]2.0.CO;2. https://archive.org/details/sim_auk_2003-01_120_1/page/35.
  3. Mays, Herman L; McKay, Bailey D; Tietze, Dieter Thomas; Yao, Cheng-Te; Miller, Lindsey N; Moreland, Kathleen N; Lei, Fumin (2015). "A multilocus molecular phylogeny for the avian genus Liocichla (Passeriformes: Leiothrichidae: Liocichla)". Avian Research 6 (17): 1–13. doi:10.1186/s40657-015-0025-y.
  4. "Laughingthrushes and allies". World Bird List Version 8.1. International Ornithologists' Union. 2018. Retrieved 10 June 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலியோசிச்சலா&oldid=4578588" இலிருந்து மீள்விக்கப்பட்டது