இலியானா சித்தரிஸ்ட்
இலியானா சித்தரிஸ்ட் | |
---|---|
![]() புவனேஸ்வரத்தின், உத்கல் சங்க மகாவித்யாலயத்தில் இலியானா சிட்டாரிஸ்ட் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | Ileana Citaristi |
பிறப்பு | இத்தாலி, பெர்காமோ |
பிறப்பிடம் | இத்தாலியர் |
இசை வடிவங்கள் | ஒடிசி |
தொழில்(கள்) | ஒடிசி மற்றும் சாவ் கலைஞர், விளக்கவுரையாளர், நடன இயக்குநர் |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
இலியானா சித்தரிஸ்ட் (Ileana Citaristi) என்பவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு ஒடிசி மற்றும் சாவ் நடனக் கலைஞர் ஆவார். இவர் இந்தியாவின் புவனேஸ்வரில் நடன பயிற்றுவிப்பாளராக உள்ளார். 1995 ஆம் ஆண்டில் வங்க மொழித் திரைப்படமான யுகாந்தி திரைப்பட்திற்காக சிறந்த நடன இயக்குநருக்கான 43 வது தேசிய திரைப்பட விருது இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் ஒடிசிக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 2006 ஆம் ஆண்டு இந்திய அரசால் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. பத்மசிறீ விருது பெறும் வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த முதல் நடனக் கலைஞர் இவராவார்.
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
இத்தாலியின் பெர்காமோவை பூர்வீகமாகக் கொண்ட சிட்டாரிஸ்டி, இத்தாலியின் டெமக்ராஜியா கிறிஸ்டியானா கட்சியின் முன்னணி அரசியல்வாதியான செவரினோ சிட்டாரிஸ்டியின் மகள் ஆவார். [1] இவர் கதகளியைக் கற்றுக்கொள்ள முடிவு செய்வதற்கு முன்பு இத்தாலியில் பாரம்பரிய மற்றும் சோதனை நாடகங்களில் நடிகையாக ஐந்து ஆண்டுகள் கழித்தார். [2]
இவர் ஒடிசா செல்வதற்கு முன்னர் கேரளம் சென்றார், அங்கு தனது கதகளி குருவான கிருஷ்ணன் நம்பூதரியின் ஆலோசனையின் பேரில், கதகளியைக் கற்க மூன்று மாதங்கள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டார். [3]
1979 முதல், இவர் ஒடிசாவில் வசித்து வருகிறார். ' உளநிலைப் பகுப்பாய்வு மற்றும் கிழக்கு தொன்மவியல்' என்ற ஆய்வறிக்கையின்பேரில் தத்துவ முனைவர் பட்டம் பெற்றார். [4]
நடன வாழ்க்கை[தொகு]
சிட்டாரிஸ்டி குரு கேளுச்சரண மகோபாத்திராவிடம் ஒடிசியைப் பயின்றார். அதன்பிறகு 1994 இல் தனது சொந்த நடனப் பள்ளியைத் தொடங்கினார். [5] சிட்டாரிஸ்டி மயூர்பஞ்ச் சாவின் ஒரு விளக்கவுரையாளராகவும் இருக்கிறார். இவர் இக்கலையை குரு ஹரி நாயக்கிடம் பயிற்சி பெற்று கற்றுக் கொண்டார். மேலும் புவனேஸ்வரின் சங்க மகாவித்யாலாவில் ஆச்சார்யா என்ற பட்டத்தை பெற்றுள்ளார். [6] இவர் 1996 இல் ஆர்ட் விஷன் அகாடமியை நிறுவினார், இது நாடகம், இசை, நடனம், ஓவியம் போன்ற பல்வேறு கலை வடிவங்களுக்கிடையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான தளமாக செயல்படுகிறது. இந்த அகாடமியில் ஒடிசி மற்றும் சாவ் நடனங்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. [7]
முக்கிய தயாரிப்புகள்[தொகு]
ஒடிசி மற்றும் சாவ் ஆகிய நடனங்களில் புதுப் புனைவு நடன தயாரிப்புகளுக்காக இலியானா சிட்டாரிஸ்டி புகழ்பெற்றார். அவை மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளிலிருந்தும் கருப்பொருள்கள் மற்றும் பாணிகளை ஒன்றிணைகத்தன. இவரது குறிப்பிடத்தக்க தயாரிப்புகளில் சில ஓவிட் மெட்டாமார்போசஸில் உள்ள கிரேக்க தொன்மவியலை அடிப்படையாகக் கொண்ட ' எக்கோ மற்றும் நர்சிஸஸ் ', ஜப்பானிய ஐக்கூக்களைக் கொண்ட 'தி ஜர்னி', யின் மற்றும் யாங்கின் சீனக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட ‘Images of Change' மற்றும் மாயா ஏஞ்சலோவின் 'ஸ்டில் ஐ ரைஸ் ' என்ற கவிதையை அடிப்படையாகக் கொண்டது. ஒடிசியில், 'மாயா தர்பன்', ' மகாநதி : அண்ட் தி ரிவர் ஃபுளோ', என்பவை ஒரிசாவின் வரலாறு மற்றும் கலாச்சார புவியியல் பற்றியவையாகும். [4] அன்னை தெரேசா மற்றும் ஷரணம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'கருணா'. சந்தேகத்திற்கு இடமின்றி இரட்சிப்பை அடைந்த மூன்று மதங்களைச் சேர்ந்த பெண்கள் பற்றிய, அவரது குறிப்பிடத்தக்க பாடல்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்[தொகு]
1996 ஆம் ஆண்டில் தேசிய திரைப்பட விருதை வென்ற அபர்ணா சென் இயக்கிய பெங்காலி திரைப்படமான யுகந்தரைத் தவிர, சிட்டாரிஸ்டி எம். எஃப் ஹூசைனின் மீனாட்சி: எ டேல் , ஆஃப் த்ரீ சிட்டிஸ் (2004) மற்றும் கௌதம் கோஸின் அபர் ஆரண்யே ஆகிய திரைப்படங்களுக்கு நடன இயக்குநராக இருந்துள்ளார். சிட்டாரிஸ்டி மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார். 2001 ஆம் ஆண்டில், தி மேக்கிங் ஆஃப் எ குரு: கெலுச்சரன் மொஹாபத்ரா, இஸ் லைப் அண்ட் டைம் என்ற நூலையும், 2012 இல் ஒரிசாவில் உள்ள பாரம்பரிய தற்காப்பு கலைகள் என்ற நூலையும், 2016 ஆம் ஆண்டில் மை ஜர்னி, எ டெல் ஆப் டூ பிரித்ஸ் ஆகிய நூல்களை வெளியிட்டார் . [7]
விருதுகள் மற்றும் அங்கிகாரங்கள்[தொகு]
சிதரிஸ்டி தூர்தர்ஷனின் ´அ´ தர கலைஞராக உள்ளார். 1992 ஆம் ஆண்டில் நடனக் கலைக்காக லியோனைட் மாசின் என்ற பட்டத்தை இவர் பெற்றார். 1996 ஆம் ஆண்டில், அபர்ணா செனின் பெங்காலி திரைப்படமான யுகாந்த் (1995) திரைப்படத்தில் பணியாற்றியதற்காக சிறந்த நடனத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். [8] [9] இவர் ஐ.சி.சி.ஆரில் 'சிறந்த கலைஞராக' பதிவுசெய்யப்பட்டார். [10]
மும்பையின் சுர் சிங்கர் சன்சாத்தால் 'ராஷேஷ்வர் விருது' பெற்றவர்களில் இவரும் ஒருவர் ஆவார். [4] [7] ஒடிசிக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக, 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. [11] 2008 ஆம் ஆண்டில் இத்தாலிய அரசாங்கம் இவரை ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் இத்தாலியன் சோலிடரிடியின் உறுப்பினராக்கியது. [2]
படைப்புகள்[தொகு]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Description of a dancer's life - Ileana Citaristi".
- ↑ 2.0 2.1 "Ileana Citarista - Curriculum Vitae". மூல முகவரியிலிருந்து 7 September 2011 அன்று பரணிடப்பட்டது.
- ↑ "Ladies who love Indian rhythm". The Pioneer. 23 October 2012. http://www.dailypioneer.com/vivacity/103668-ladies-who-love-indian-rhythm.html. பார்த்த நாள்: 6 November 2012.
- ↑ 4.0 4.1 4.2 "Ileana Citaristi - Bio Data". மூல முகவரியிலிருந்து 29 April 2012 அன்று பரணிடப்பட்டது.
- ↑ .
- ↑ "Padmashri Ileana Citaristi". SPICMACAY. மூல முகவரியிலிருந்து 2 February 2013 அன்று பரணிடப்பட்டது.
- ↑ 7.0 7.1 7.2 "Dr. Ileana Citaristi: My karma is to break new ground".
- ↑ "43rd National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. மூல முகவரியிலிருந்து 2013-12-15 அன்று பரணிடப்பட்டது.
- ↑ "43rd National Film Awards (PDF)". Directorate of Film Festivals.
- ↑ http://www.iitbbs.ac.in/old/profile.php/ileana5/
- ↑ "Padma Awards Directory (1954-2009)". Ministry of Home Affairs. மூல முகவரியிலிருந்து 2013-05-10 அன்று பரணிடப்பட்டது. "..state:orissa;Country India"