உள்ளடக்கத்துக்குச் செல்

இலிபெத்தினைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலிபெத்தினைட்டு
Libethenite
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டுக் கனிமம்
வேதி வாய்பாடுCu2PO4OH
இனங்காணல்
நிறம்மெல்லிய முதல் அடர் பச்சை, கரும்பச்சை, ஆலிவ் பச்சை
படிக இயல்புஉலகாயம், பட்டகத்தன்மை
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
பிளப்பு[100] மற்றும் [010] இல் தெளிவற்று
முறிவுஒழிங்கற்று,சமமற்றும் சங்குருவமும்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை4
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு, மசகுத்தன்மை
கீற்றுவண்ணம்இளம் பச்சை
ஒப்படர்த்தி3.6 - 4, சராசரி = 3.8
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.701 - 1.704 nβ = 1.743 - 1.747 nγ = 1.787 - 1.790
மேற்கோள்கள்[1][2]

இலிபெத்தினைட்டு (Libethenite) என்பது Cu2PO4OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். ஓர் அரிய செப்பு பாசுப்பேட்டு ஐதராக்சைடு கனிமம் என்று இக்கனிமம் வகைபடுத்தப்படுகிறது. வன்மையான அடர் பச்சை நிற செஞ்சாய்சதுரப் படிகங்களாக இது உருவாகிறது. 1823 ஆம் ஆண்டு சுலோவாகியாவிலுள்ள உலூபியட்டோவா கிராமத்தில் இலிபெத்தினைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. கனிமம் கிடைத்த இடத்தின் பெயர் செருமன் மொழியில் இலிபெத்தன் என அழைக்கப்பட்டதால் கனிமத்திற்கும் இலிபெத்தினைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது. [1][2] போர்ச்சுக்கல் நாட்டின் எவோரா மாவட்டம் விலா விக்கோசா நகராட்சி, பெல்கியம் நாட்டின் லக்சம்போர்க்கு மாகாணம் போன்ற இடங்களிலும் இலிபெத்தினைட்டு கிடைக்கிறது [2].

தோற்றம்[தொகு]

இலிபெத்தினைட்டு எப்போதும் அடர்-பச்சை நிற செஞ்சாய்சதுர படிகங்களின் வடிவத்தையே ஏற்கிறது [1][2]. பெரும்பாலும் பிற இலிபெத்தினைட்டு படிகங்களுடன் சேர்ந்து கொத்தாகக் காணப்படுகிறது.

உருவாக்கம்[தொகு]

[[File:Libethenite-258235.jpg|thumb|left|மாலக்கைட்டின் மீது எமரால்டு-பச்சை நிறத்தில் செஞ்சாய்சதுர இலிபெத்தினைட்டு கனிமத்தின் நுண்படிகங்கள். தாமிரத் தாதுப் படிவுகளின் [2] ஆக்சிசனேற்ற மண்டலங்களில் இலிபெத்தினைட்டு பெரும்பாலும் காணப்படுகிறது. பெரும்பாலும் பாசுப்பேட்டு பாறைகளான அபடைட்டு, மோனசைட்டு மற்றும் செனோடைம் [2] போன்றவற்றிலிருந்து இது உருவாகிறது. முதன்மையான இலிபெத்தினைட்டு உறுதிப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லை என்றாலும் சாத்தியமான ஒரு நிகழ்வு பதிவாகியுள்ளது [2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலிபெத்தினைட்டு&oldid=2961872" இலிருந்து மீள்விக்கப்பட்டது