இலின்போர்ட் கிறிஸ்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலின்போர்ட் கிறிஸ்டி
2009இல் இலின்போர்ட் கிறிஸ்டி
தனிநபர் தகவல்
தேசியம்பிரித்தானியர்
பிறப்பு2 ஏப்ரல் 1960 (1960-04-02) (அகவை 64)
செயின்ட் ஆண்ட்ரூ, ஜமேக்கா
உயரம்6 அடி 2 அங் (188 cm)[1]
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் தடகளம்
நாடு  பெரிய பிரித்தானியா
நிகழ்வு முதல் இரண்டாம் மூன்றாம்
ஒலிம்பிக் விளையாட்டுகள் 1 2 0
உலகப்போட்டிகள் 1 1 2
உள்ளரங்க சர்வதேசப் போட்டிகள் 0 2 0
ஐரோப்பியப் போட்டிகள் 3 1 2
ஐரோப்பிய உள்ளரங்கப் போட்டிகள் 3 0 1
பொதுநலவாய விளையாட்டுக்கள் 3 2 0
மொத்தம் 11 8 5
ஒலிம்பிக் விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1992 பார்செலோனா 100 மீ
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் சியோல் 100 மீ
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1988 சியோல் 4×100 மீ ரிலே
உலகப்போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1993 இசுடுட்கார்ட் 100 மீ
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1987 உரோம் 100 மீ
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1991 தோக்கியோ 4×100 மீ ரிலே
சர்வதேச உள்ளரங்க விளையாட்டுகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1991 செவீயா 60 மீ
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1991 செவீயா 200 மீ
ஐரோப்பியப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1986 இசுடுட்கார்ட் 100 மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் 1990 இசுப்லிட் 100 மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் 1994 எல்சிங்கி 100 மீ
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1990 இசுபிலிட் 4×100 மீ ரிலே
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1990 இசுபிலிட் 200மீ
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1986 இசுடுட்கார்ட் 4×100 மீ ரிலே
ஐரோப்பிய உள்ளரங்க போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1986 மத்ரித் 200 மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் 1988 புடாபெசுட்டு 60 மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் 1990 கிளாஸ்கோ 60 மீ
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1988 புடாபெசுட்டு 200 மீ
நாடு  இங்கிலாந்து
பொதுநலவாய விளாஇயாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1990 ஓக்லாந்து 100 மீ]]
தங்கப் பதக்கம் – முதலிடம் 1990 ஓக்லாந்து 4×100 மீ ரிலே
தங்கப் பதக்கம் – முதலிடம் 1994 விக்டோரியா 100 மீ
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1986 எடின்பரோ 100 மீ]]
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1986 எடின்பரோ 4×100 மீ ரிலே
20 சூலை 2012 இற்றைப்படுத்தியது.

இலின்போர்ட் சிசரோ கிறிஸ்டி (Linford Cicero Christie) (பிறப்பு: 1960 ஏப்ரல் 2) ஜமேக்காவில் பிறந்த இவர் முன்னாள் பிரித்தானியாவைச் சேர்ந்த விரைவோட்ட வீரராவார். பிரித்தன் விளையாட்டு வீரர்களுக்கான ஒலிம்பிக் விளையாட்டு, உலகப் போட்டிகள, ஐரோப்பியப் போட்டிகள், பொதுநலவாய விளையாட்டு ஆகிய நான்கு முக்கிய போட்டிகளிலும் 100 மீட்டரில் தங்கப் பதக்கங்களை வென்ற ஒரே பிரித்தன் மனிதர் இவர். 100 மீட்டரில் 10 வினாடிகளில் தடையை உடைத்த முதல் ஐரோப்பியரான இவர், இந்த நிகழ்வில் பிரிட்டிசு சாதனையை இன்னும் வைத்திருக்கிறார். இவர் 200 மீட்டரில் உள்ளரங்கத்தில் உலக சாதனை படைத்தவராவார். 60 மீட்டர், 100 மீ மற்றும் 4 × 100 மீட்டர் ரிலேவிலும் சாதனை படைத்த ஐரோப்பியராவார்.

இவர் எல்லா காலத்திலும் மிகவும் அலங்கரிக்கப்பட்ட பிரிட்டிசு விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் தனது தடகள வாழ்க்கையின் முடிவில் ஒட்டுமொத்தமாக 24 பதக்கங்களை வென்றுள்ளார். இதற்கு முன்னர் அல்லது அதற்குப் பிறகு வேறு எந்த பிரிட்டிசு ஆண் விளையாட்டு வீரரையும் விட இது அதிகமாகும். 1993 ஆம் ஆண்டில் இவருக்கு அந்த ஆண்டின் பிபிசி விளையாட்டு ஆளுமை கௌரவம் வழங்கப்பட்டது.

இவரது பதிவுகள் இருந்தபோதிலும், 1999 ஆம் ஆண்டில் ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவரது ஆளுமை சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. 1988 ஆம் ஆண்டில் தடைசெய்யப்பட்ட ஒரு பொருளை பயன்படுத்தியாதாக முடிவு வந்தது. 1999 இல் தோல்வியுற்ற மருந்து பரிசோதனையைத் தொடர்ந்து, இவருக்கு ஐ.ஏ.ஏ.எஃப் போட்டியிலிருந்து தடைசெய்யப்பட்டார். மேலும், பிரிட்டிசு ஒலிம்பிக் சங்கத்திலிருந்தும் ஆயுள் தடை செய்யப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

இவர் ஜமேக்காவின் செயிண்ட் ஆண்ட்ரூ என்ற நகரத்தில் பிறந்தார், அங்கு இவர் தனது பாட்டியிடம் வளர்ந்தார். ஏழு வயதில் இவர் தனது பெற்றோரிடம் சேர்ந்தார். அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்திலுள்ள இலண்டனின், ஆக்டன் என்ற பகுதிக்கு குடிபெயர்ந்தனர். இலண்டனின் புல்ஆமில் உள்ள ஹென்றி காம்ப்டன் மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற இவர் உடற்கல்வியில் சிறந்து விளங்கினார். இவர் 1977 ஆம் ஆண்டில் முதல் இலண்டன் இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் கேமர்ஸ்மித் & புல்ஆமின் பெருநகரத்திற்காக போட்டியிட்டார். [2] இவர் 1978, 336 (கேமர்ஸ்மித்) படைப்பிரிவில் விமான பயிற்சிப் படையில் சேர்ந்தார். இவர் 18 வயது வரை தடகளத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

தொழில்முறை தடகள வாழ்க்கை[தொகு]

இவரது ஆரம்பகால வாழ்க்கையானது நம்பிக்கைக்குரியதாக இல்லை. 1984 கோடைகால ஒலிம்பிக்கில் பிரித்தன் அணியை உருவாக்க இவர் தவறிவிட்டார். விரைவோட்ட ரிலே அணியில் கூட சேர்க்கப்படவில்லை. ரான் ரோடன் என்பவரின் பயிற்சியின் கீழ் இவர் ஆர்வத்துடன் பணியாற்றத் தொடங்கிய பிறகுதானன் தனது திறனை வெளிபடுத்தத் தொடங்கினார்.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]

இவருக்கு எட்டு குழந்தைகள் உள்ளனர். இவரது மருமகள் ரேச்சல் கிறிஸ்டி என்பவர் 2009 ஆம் ஆண்டில் மிஸ் இங்கிலாந்தாக முடிசூட்டப்பட்டார். ஆனால் பின்னர் தாக்குதல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பட்டத்தை கைவிட்டார். [3] [4] இவரது மருமகன் ஜோசுவா ஆர் கிறிஸ்டி ஆங்காங்கில் 2018 இல் நடந்த 7 கள் போட்டியில் ஜமேக்கா இரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவரது மகன் லியாம் ஆலிவர்-கிறிஸ்டி 2018 ஆம் ஆண்டில் போதைப்பொருள் குற்றங்களில் தண்டனை பெற்றார்.

1993 ஆம் ஆண்டில் கிறிஸ்டி ஸ்பிரிண்ட்-ஹர்ட்லர் கொலின் ஜாக்சனுடன் ஒரு விளையாட்டு மேலாண்மை மற்றும் விளம்பர நிறுவனமான நஃப் ரெஸ்பெக்ட் ஒன்றை உருவாக்கினார். அவர்களின் ஆரம்ப தயாரிப்புகளில் ஒன்று விளையாட்டு பயிற்சி மற்றும் ஒர்க்அவுட் வீடியோ, தி எஸ் பிளான்: கெட் ஃபிட் வித் கிறிஸ்டி மற்றும் ஜாக்சன் . ஜாக்சன் பின்னர் நிறுவனத்தை விட்டு வெளியேற, "லின்ஃபோர்டு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், அவர் முதலிடத்தில் இருக்க வேண்டும், அவர் தலைவராக இருக்க வேண்டும்" என்று கூறினார். [5]

குறிப்புகள்[தொகு]

  1. "Linford Christie". teamgb.com. British Olympic Association. பார்க்கப்பட்ட நாள் 22 January 2014.
  2. Hall of Fame பரணிடப்பட்டது 2013-03-07 at the வந்தவழி இயந்திரம் Retrieved on 2013-02-19
  3. "Miss England assault case dropped". BBC News. 7 April 2010. http://news.bbc.co.uk/1/hi/england/8607292.stm. 
  4. "Bradford City hope to be quick out of the blocks with young talent". Telegraph & Argus. 12 May 2017. http://www.thetelegraphandargus.co.uk/sport/sportbcfc/15281851.Bantams_hope_to_be_quick_out_of_the_blocks_with_young_talent/. 
  5. Colin Jackson, The Autobiography (2003)

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலின்போர்ட்_கிறிஸ்டி&oldid=3579936" இலிருந்து மீள்விக்கப்பட்டது