உள்ளடக்கத்துக்குச் செல்

இலினா மதீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலினா மதீனா
1939 இல் மதினா
பிறப்புஇலினா மார்செலா மதினா
23 செப்டம்பர் 1933 (1933-09-23) (அகவை 91)
திக்ராபோ, காஸ்ட்ரோவிரேனா,பெரு
அறியப்படுவதுநடப்பு உலகின் வயது குறைந்த நிலையில் தாய்மை அடைந்தவர்
வாழ்க்கைத்
துணை
இராவுல் ஜுராடோ
பிள்ளைகள்2

இலினா மார்செலா மதினா டி ஜுராடோ (Lina Marcela Medina de Jurado) (பிறப்பு; 23 செப்டம்பர் 1933) பெரு நாட்டைச் சேர்ந்த ஓர் பெண் ஆவார் இவர் 1939 மே 14 அன்று ஐந்து வயதில் ஜெரார்டோ என்ற ஒரு குழந்தைக்குத் தாயானார்.[1][2] முன்கூட்டிய பருவமடைதல் காரணமாக காரணமாக இது நடந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர்.[3]

இளமை வாழ்க்கை

[தொகு]

இலினா மதினா 1933 ஆம் ஆண்டு பெருவின் காஸ்ட்ரோவிரேனா மாகாணத்தில் உள்ள திக்ராபோவில் [4] ஒரு வெள்ளித் தொழிலாளியான திபுரேலோ மதினா மற்றும் விக்டோரியா லோசியா ஆகியோரின் ஒன்பது குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார்.[4]

வயிற்று அளவு அதிகரித்து வந்ததால், ஐந்து வயதில் இவரை பிஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஒவருடைய பெற்றோர் அழைத்துச் சென்றனர்.[5] முதலில் இவருக்கு கட்டி இருப்பதாக மருத்துவர்கள் நினைத்தனர். ஆனால் பின்னர் இவர் கருத்தரித்துள்ளதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.[6]

கருத்தருப்பிற்கான காரணம்

[தொகு]

தனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இவரது தந்தை கைது செய்யப்பட்டார். ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.

பிற்கால வாழ்க்கை

[தொகு]

பெரியவரானதும், மதினா லோசாடாவின் லிமா மருத்துவமனையில் பணியாற்றினார். இந்தப் பணி இவருக்குக் கல்வியைக் கொடுத்து, தனது மகனை உயர்நிலைப் பள்ளியில் சேர்க்க உதவியது.[7][8] அவர் 1972 இல் திருமணம் செய்துகொண்டு இரண்டாவது மகனைப் பெற்றெடுத்தார்.[9] இது சம்பந்தமாக எந்த பத்திரிக்கை நிருபர்களையும் சந்திக்க மதினா மறுத்துவிட்டார்.[10]

ஆவணப்படுத்தல்

[தொகு]

இந்த வழக்கு ஒரு புரளி என்று ஊகிக்கப்பட்டாலும், பல ஆண்டுகளாக பல மருத்துவர்கள் உயிரகச்செதுக்குகள், கருப்பையில் உள்ள கருவின் எலும்புக்கூட்டின் எக்ஸ்-கதிர்கள் மற்றும் அவரைப் பராமரிக்கும் மருத்துவர்கள் எடுத்த புகைப்படங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இதனை சரிபார்த்துள்ளனர். [11] [12] [13]

வழக்கை ஆவணப்படுத்தும் ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1939 தொடக்கத்தில், மதினா கருவுற்று ஏழரை மாதங்கள் ஆனபோது எடுக்கப்பட்டது. [14]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mikkleson, David (7 February 2015). "Youngest Mother". Snopes. Retrieved 25 January 2017.
  2. "Six decades later, world's youngest mother awaits aid". The Telegraph (Kolkata). 27 August 2002 இம் மூலத்தில் இருந்து 22 July 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090722030008/http://www.telegraphindia.com/1020827/asp/foreign/story_1140311.asp. 
  3. "Raped 5 year-old Peruvian is world's youngest mum". P.M. News. 2 July 2020. Archived from the original on 2022-12-27. Retrieved 12 April 2023.
  4. 4.0 4.1 "Six decades later, world's youngest mother awaits aid". The Telegraph (Kolkata). 27 August 2002 இம் மூலத்தில் இருந்து 22 July 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090722030008/http://www.telegraphindia.com/1020827/asp/foreign/story_1140311.asp. 
  5. "5-Year-Old Gives Birth: 14 May 1939". History Channel Australia. Archived from the original on 16 April 2019. Retrieved 27 July 2020.
  6. Mikkleson, David (7 February 2015). "Youngest Mother". Snopes. Retrieved 25 January 2017.
  7. Leon, Luis (October 30, 1955). "Caesarean at Age 5: 'Witchcraft Mother,' Son Grow Up Quietly". Independent Press Telegram. AP. https://archive.org/details/independent-press-telegram-1955-10-30/page/n152/. 
  8. Feldman, Robert (3 December 1955). "She became mother at five (thought she had a doll)". Perth Mirror. https://trove.nla.gov.au/newspaper/article/75998355. 
  9. "On this day In History: May 14, 1939 – The youngest 'mother' was born". Free Press Journal (in ஆங்கிலம்). Retrieved 24 July 2021.
  10. . 
  11. Mikkleson, David (7 February 2015). "Youngest Mother". Snopes. Retrieved 25 January 2017.Mikkleson, David (7 February 2015). "Youngest Mother". Snopes. Retrieved 25 January 2017.
  12. The Journal of Medical-physical Research: A Journal of Progressive Medicine and Physical Therapies, Volumes 15–16. American Association for Medico-Physical Research. 1941. p. 188. Lina Medina... Dear Dr. Eales: 'We are pleased to give you permission to publish the story of Lina Medina' ... An x-ray examination revealed a foetal skeleton and left no doubt as to a positive uterine gestation.
  13. Ashley Montagu (1979). The reproductive development of the female: a study in the comparative physiology of the adolescent organism. PSG Publishing Company. p. 137. ISBN 0-88416-218-4.
  14. "La Plus Jeune Mère du Monde". La Presse Médicale 47 (43): 875. 31 May 1939. http://www.biusante.parisdescartes.fr/histoire/medica/resultats/?cote=100000x1939xartorig&p=878&do=page. 

கூடுதல் ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலினா_மதீனா&oldid=4297519" இலிருந்து மீள்விக்கப்பட்டது