இலிந்த்கிரெணைட்டு
| இலிந்த்கிரெணைட்டு Lindgrenite | |
|---|---|
சிலியின் அட்டகாமா பிராந்தியத்தின் கோபியாபோ மாகாணத்தில் உள்ள கச்சியுயோ டி லாம்போசு மாவட்டத்தின் சான் சாமுவேல் சுரங்கத்திலிருந்து கிடைத்த இலிந்த்கிரெணைட்டு மாதிரி (பார்வை புலம் 4 மிமீ) | |
| பொதுவானாவை | |
| வகை | மாலிப்டேட்டு கனிமம் |
| வேதி வாய்பாடு | Cu3(MoO4)2(OH)2 |
| இனங்காணல் | |
| நிறம் | பச்சை முதல் மஞ்சள் வரை |
| படிக இயல்பு | தட்டையான படிகங்கள், ஊசிவடிவத்திலும் இருக்கலாம். திரட்சிகள் |
| படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
| பிளப்பு | சரிபிளவு {010} இல் மற்றும் {101} இல், தெளிவற்று {100} இல் |
| முறிவு | மைக்காத்தன்மை |
| விகுவுத் தன்மை | நொறுங்கும் |
| மோவின் அளவுகோல் வலிமை | 4.5 |
| மிளிர்வு | எண்ணெய் தன்மை |
| கீற்றுவண்ணம் | வெளிர் பச்சை |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
| ஒப்படர்த்தி | 4.2 |
| ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
| ஒளிவிலகல் எண் | nα = 1.930 nβ = 2.002 nγ = 2.020 |
| இரட்டை ஒளிவிலகல் | δ = 0.090 |
| 2V கோணம் | 71° (அளவிடப்பட்டது) |
| மேற்கோள்கள் | [1][2][3] |
இலிந்த்கிரெணைட்டு (Lindgrenite) என்பது Cu3(MoO4)2(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். தாமிரமாலிப்டேட்டு வகை கனிமமாக இது கருதப்படுகிறது. ஒற்றைச்சரிவச்சில் பச்சை முதல் மஞ்சள் வரையிலான தட்டையான படிகங்களாக இலிந்த்கிரெணைட்டு தோன்றுகிறது.
கண்டுபிடிப்பு
[தொகு]முதன்முதலில் 1935 ஆம் ஆண்டு சிலியின் அண்டோபகாசுடாவில் உள்ள சுகிகாமாட்டா சுரங்கத்தில் இக்கனிமம் கண்டறியப்பட்டது. மேலும் மாசசூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தின் சுவீடிய-அமெரிக்க பொருளாதார புவியியலாளர் வால்டெமர் இலிந்த்கிரென் (1860–1939) நினைவாக கனிமத்திற்கு இலிந்த்கிரெணைட்டு எனப் பெயரிடப்பட்டது.[1][2]
சல்பைடு தாது படிவுகளைக் கொண்ட தாமிரம்-மாலிப்டினத்தின் ஆக்சிசனேற்றப்பட்ட பகுதிகளில் இலிந்த்கிரெணைட்டு காணப்படுகிறது. ஆண்ட்லெரைட்டு, மாலிப்டினைட்டு, போவெலைட்டு, புரோச்சாண்டைட்டு, கிரிசோகோலா, இரும்பு ஆக்சைடுகள் மற்றும் குவார்ட்சு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து இலிந்த்கிரெணைட்டு காணப்படுகிறது.[1]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் இலிந்த்கிரெணைட்டு கனிமத்தை Lgr[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.


மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 Lindgrenite in the Handbook of Mineralogy
- 1 2 Lindgrenite on Mindat.org
- ↑ Lindgrenite data on Webmineral
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
மேலும் வாசிக்க
[தொகு]- Calvert, L. D.; Barnes, W. H. (1957). "The structure of Lindgrenite". Can Mineral 6 (1): 31–51. http://canmin.geoscienceworld.org/content/6/1/31.extract.
- Xu, Jiasheng; Xue, Dongfeng (2007). "Hydrothermal synthesis of lindgrenite with a hollow and prickly sphere-like architecture". Journal of Solid State Chemistry 180 (1): 119–126. doi:10.1016/j.jssc.2006.09.030. Bibcode: 2007JSSCh.180..119X.
- Vilminot, Serge; André, Gilles; Richard-Plouet, Mireille; Bourée-Vigneron, Françoise; Kurmoo, Mohamedally (2006). "Magnetic Structure and Magnetic Properties of Synthetic Lindgrenite, Cu3(OH)2(MoO4)2". Inorganic Chemistry 45 (26): 10938–46. doi:10.1021/ic061182m. பப்மெட்:17173452.
- Frost, Ray L.; Duong, Loc; Weier, Matt (2004). "Raman microscopy of the molybdate minerals koechlinite, iriginite and lindgrenite". Neues Jahrbuch für Mineralogie - Abhandlungen 180 (3): 245. doi:10.1127/0077-7757/2004/0180-0245. https://eprints.qut.edu.au/23725/1/Raman_microscopy_of_the_molybdate_minerals_koechlinite_iriginite_and_lindgrenite.pdf.
- Kingsbury, Arthur W. G. (1955). "On the Occurrence of the Rare Copper Molybdate, Lindgrenite, at Brandy Gill, Carrock Fell, Cumberland". Mineralogical Magazine 30 (230): 723–726. doi:10.1180/minmag.1955.030.230.06. Bibcode: 1955MinM...30..723K. https://archive.org/details/mineralogical-magazine_1955-09_30_230/page/723.
- Bao, R; Kong, Z; Gu, M; Yue, B; Weng, L; He, H (2006). "Hydrothermal Synthesis and Thermal Stability of Natural Mineral Lindgrenite1". Chemical Research in Chinese Universities 22 (6): 679. doi:10.1016/S1005-9040(06)60189-X.
- Barnes, W. H.. The unit cell and space group of lindgrenite. http://www.minsocam.org/ammin/AM34/AM34_163.pdf.
- Miyazaki, Iyo; Ohori, Shinji; Kishi, Shigetomo; Kobayashi, Shoichi; Kusachi, Isao (2002). "Lindgrenite from the Sansei mine, Nara Prefecture, Japan". Journal of Mineralogical and Petrological Sciences 97 (4): 207. doi:10.2465/jmps.97.207. Bibcode: 2002JMPeS..97..207M.
