உள்ளடக்கத்துக்குச் செல்

இலித்துவசுச் சுருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேர்ம மதிப்பு கொண்ட ஆரம் r உக்கான கிளை

கணிதத்தில் இலித்துவசு அல்லது இலித்துவசுச் சுருள் (lituus) என்பது விரிந்து கொண்டு போகும் கோணம், அச் சுருளின் ஆரம் r இன் இருமடிக்குத் தலைகீழ் விகிதத்தில் மாறுவது. இதனை வாள்முனை ஆள்கூறு ((r,θ)(polar coordinates) அல்லது கோணத்தொலைவு ஒப்புச்சட்டத்தின் ஆள்கூறுகளால் கீழ்க்காணுமாறு குறிக்கலாம்:

இந்தச் சுருளில், ஆரம் r என்பது நேர்ம மதிப்பா, எதிர்ம மதிப்பா என்பதைப் பொருத்து மொத்தம் இரண்டு கிளைகள் உள்ளன. இந்த r இன் பரும மதிப்புக் கூடக்கூட கிடை அச்சை (-அச்சை) ஈற்றணுகு முறையில் (asymptotic) அணுகும். இவற்றின் வளைமை மாறுபுள்ளிகள் (points of inflexion) கீழ்க்காண்பதாகும்:

-உம், -உம்.

இந்தச் சுருள் வடிவை இரோச்சர் கோட்ஃசு (Roger Cotes) என்பார் 1722 இல் வெளியிட்ட ஆர்மோனியா மென்சுராரம் (Harmonia Mensurarum) என்னும் தொகுப்பு நூலில் பதிவு செய்திருந்தார். இந்நூல் கோட்ஃசு இறந்தபின் ஆறு ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்துவசுச்_சுருள்&oldid=3664063" இலிருந்து மீள்விக்கப்பட்டது