இலித்தியம் பிசு(ஆக்சலேட்டு)போரேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
LiBOB
| |
| இனங்காட்டிகள் | |
| 244761-29-3 | |
| EC number | 456-990-3 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 23677815 |
| |
| பண்புகள் | |
| C4BLiO8 | |
| வாய்ப்பாட்டு எடை | 193.79 g·mol−1 |
| தோற்றம் | வெண் திண்மம் |
| அடர்த்தி | 2.021 கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலித்தியம் பிசு(ஆக்சலேட்டு)போரேட்டு (Lithium bis(oxalate)borate) LiB(C2O4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். வெள்ளை நிற திடப்பொருளான இது சில இலித்தியம் மின்கலங்களில் மின் பகுளியாகப் பயன்படுத்தப்படுகிறது.[1] அறியப்பட்டுள்ள பல போரேட் ஆக்சலேட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.
எக்சு-கதிர் படிகவியலின் முடிவுகளின்படி, திடமான இலித்தியம் பிசு(ஆக்சலேட்டு)போரேட்டு சேர்மத்தில் Li+ நேர்மின் அயனிகளும் நான்முக B(C2O4)−2 எதிர்மின் அயனிகளும் இணைக்கப்பட்டு இச்சேர்மம் உருவாகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Whittingham, M. Stanley (2004). "Lithium Batteries and Cathode Materials". Chemical Reviews 104 (10): 4271–4302. doi:10.1021/cr020731c. பப்மெட்:15669156.
- ↑ Zavalij, Peter Y.; Yang, Shoufeng; Whittingham, M. Stanley (2003). "Structures of potassium, sodium and lithium bis(oxalato)borate salts from powder diffraction data". Acta Crystallographica Section B Structural Science 59 (6): 753–759. doi:10.1107/S0108768103022602. பப்மெட்:14634252.