இலித்தியம் பாசுப்பேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் பாசுப்பேட்டு
| |
| வேறு பெயர்கள்
டிரைலித்தியம் பாசுப்பேட்டு
| |
| இனங்காட்டிகள் | |
| 10377-52-3 | |
| ChemSpider | 145361 |
| EC number | 233-823-0 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 165867 |
| |
| UNII | 2QM4K05Q74 |
| பண்புகள் | |
| Li3PO4 | |
| வாய்ப்பாட்டு எடை | 115.794 கி/மோல் |
| தோற்றம் | வெண்மையான தூள் |
| அடர்த்தி | 2.46 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 1,205 °C (2,201 °F; 1,478 K) |
| 0.027 கி/100 மி.லி (25 °செல்சியசு) | |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
| புறவெளித் தொகுதி | Pmn21 |
| Lattice constant | a = 6.115, b = 5.239, c = 4.855 |
| ஒருங்கிணைவு வடிவியல் |
நான்முகி (எல்லா அணுக்களிலும்) |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
-2095.8 கிலோயூல்/மோல் |
| தீங்குகள் | |
| GHS pictograms | |
| GHS signal word | எச்சரிக்கை |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய நேர் மின்அயனிகள் | டிரைசோடியம் பாசுபேட்டு டிரைபொட்டாசியம் பாசுபேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலித்தியம் பாசுப்பேட்டு (Lithium phosphate) என்பது Li3PO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] இலித்தியத்தின் பாசுப்பேட்டு உப்பாகக் கருதப்படும் இச்சேர்மம் வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. இலித்தியம் பாசுப்பேட்டு நீரில் சிறிதளவு கரையும்.
முதன்மையாக இலித்தியம்-அயனி மின்கலன்களை தயாரிப்பதற்காக இலித்தியம் இரும்பு பாசுப்பேட்டு (LiFePO₄) உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.[1]
தயாரிப்பு
[தொகு]பாசுபாரிக் அமிலத்தைப் பயன்படுத்தி இலித்தியம் கார்பனேட்டை நடுநிலையாக்குவதன் மூலம் டிரைலித்தியம் பாசுப்பேட்டை உருவாக்கலாம்.:
- 3 Li2CO3 + 2 H3PO4 → 2 Li3PO4 + 3 H2O + 3 CO2
குறைந்த வெப்பநிலை வடிவம் (β-Li3PO4) Pmn21 என்ற இடக்குழுவுடன் செஞ்சாய்சதுரப் படிக அமைப்பில் படிகமாகிறது.[2] 500° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் வெப்பப்படுத்தப்பட்டால், இது மற்றொரு வடிவமான γ-Li3PO4 சேர்மமாக மாறுகிறது.[3]
தீங்குகள்
[தொகு]உடல்நலம்
[தொகு]அதிக அளவு இலித்தியம் பாசுப்பேட்டு தலைச்சுற்றலை ஏற்படுத்தக்கூடும். சில சமயங்களில் சிறுநீரக பாதிப்பும் ஏற்படலாம். சில அறிக்கைகளின்படி, இலித்தியம் அயனிகளின் அதிக வெளிப்பாடு காரணமாக நீரிழப்பு, எடை இழப்பு மற்றும் தைராய்டு தொந்தரவுகள் ஏற்படலாம். மந்தமான பேச்சு, மங்கலான பார்வை, புலன் இழப்பு மற்றும் வலிப்பு உள்ளிட்ட நரம்பு மண்டல குறைபாடுகளும் ஏற்படலாம்.[1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Lithium Phosphate". Sigma Aldrich. Retrieved 16 May 2025.
- ↑ Charles Keffer; Alan D. Mighell; Floyd Mauer; Howard E. Swanson; Stanley Block (1967). "Crystal structure of twinned low-temperature lithium phosphate" (in en). Inorganic Chemistry 6 (1): 119–125. doi:10.1021/ic50047a027.
- ↑ L. Popović; B. Manoun; D. de Waal; M. K. Nieuwoudt; J. D. Comins (2002). "Raman spectroscopic study of phase transitions in Li3PO4" (in en). Journal of Raman Spectroscopy 34 (1): 77–83. doi:10.1002/jrs.954.