இலித்தியம் நாப்தலீன்
டெட்ரா ஐதரோபியூரானில் உள்ள இலித்தியம் நாப்தலீனைடு கரைசல்
| |
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் நாப்தலீனைடு | |
| இனங்காட்டிகள் | |
| 14474-59-0 | |
| ChemSpider | 9172277 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 57466756 |
| |
| பண்புகள் | |
| Li+[C10H8]− | |
| வாய்ப்பாட்டு எடை | 135.11 g·mol−1 |
| தோற்றம் | அடர் பச்சை படிகங்கள் |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் நாப்தலீனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலித்தியம் நாப்தலீன் (Lithium naphthalene) என்பது Li+[C10H8]− என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆராய்ச்சி ஆய்வகத்தில், இச்சேர்மம் கரிம, கரிம உலோக மற்றும் கனிம வேதியியல் பொருள்கள் தயாரிப்பு வினைகளில் ஓர் ஒடுக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக தேவைப்படும் இடத்திலேயே இது உருவாக்கப்படுகிறது. இலித்தியம் நாப்தலீன் Li+ உடன் பிணைக்கப்பட்ட ஈந்தணைவிகளுடன் படிகமாகிறது.[1] இந்த அயனி ஒரு கரிம இயங்குறுப்புக்கு நன்கு அறியப்பட்ட எடுத்துக்காட்டு ஆகும்.
தயாரிப்பு
[தொகு]உலோக இலித்தியத்தை நாப்தலீனுடன் ஓர் ஈரெத்தில் ஈதரில் கரைக்கப்பட்ட கரைசலில், பொதுவாக டெட்ரா ஐதரோபியூரான் அல்லது டைமெத்தாக்சியீத்தேனுடன் சேர்த்து நன்றாகக் கலக்குவதன் மூலம் இலித்தியம் நாப்தலீன் தயாரிக்கப்படுகிறது. இதன் விளைவாகக் கிடைக்கும் உப்பு அடர் பச்சை நிறத்தில் இருக்கும்.[2] இலித்தியத்துடன் நாப்தலீனின் வினையை ஒலி அலைகளால் கிளறி துரிதப்படுத்தலாம். இலித்தியம் நாப்தலீனை மதிப்பிடுவதற்கான முறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.[3]
பண்புகள்
[தொகு]ஓர் இயங்குறுப்பாக இதன் கரைசல்கள் g = 2.0 என்ற அளவுக்கு அருகில் ஒரு வலுவான எலக்ட்ரான் பாரா காந்த அதிர்வைக் காட்டுகின்றன.[4] இதன் அடர் பச்சை நிறம் 463, 735 நானோமீட்டரில் உறிஞ்சுதல்களிலிருந்து எழுகிறது.[5] இலித்தியம் நாப்தலீனின் பல கரைப்பான்கள் எக்சு-கதிர் படிகவியல் மூலம் வகைப்படுத்தப்பட்டுள்ளன. விளைவுகள் நுட்பமானவை, HC–CH பிணைப்புகளின் வெளிப்புற சோடி 3 பைக்கோ மீட்டரில் சுருங்குகிறது மற்றும் மற்ற ஒன்பது C–C பிணைப்புகள் 2–3 பைக்கோமீட்டரில் நீண்டு செல்கின்றன. ஒட்டுமொத்தத்தில் குறைப்பு பிணைப்பை பலவீனப்படுத்துகிறது.[6]
வினைகள்
[தொகு]ஏற்ற ஒடுக்கம்
[தொகு]சாதாரண ஐதரசன் மின்முனையுடன் ஒப்பிடும்போது −2.5 வோல்ட்டுக்கு அருகில் குறைப்பு திறன் கொண்ட நாப்தலீன் இயங்குறுப்பு அயனி ஒரு வலுவான குறைக்கும் முகவராகும்.[5]
புரோட்டானேற்றம்
[தொகு]இலித்தியம் நாப்தலீன் எதிர்மின் அயனி வலுவான கார அயனியாகும். மேலும் ஒரு பொதுவான சிதைவு பாதையானது நீர் மற்றும் ஆல்ககால் போன்ற தொடர்புடைய புரோட்டானிக் மூலங்களுடனான வினையை உள்ளடக்கியுள்ளது. இந்த வினைகள் ஈரைதரோநாப்தலீனை வழங்குகின்றன:
- 2 Li+[C10H8]− + 2 H2O → C10H10 + C10H8 + 2 LiOH
ஈந்தணைவி முன்னோடி
[தொகு]நாப்தலீன் இயங்குறுப்பின் கார உலோக உப்புகள் நாப்தலீனின் அணைவுச் சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.[7]
தொடர்புடைய சேர்மங்கள்
[தொகு]ஆந்த்ரசீனில் இருந்து பெறப்பட்டவை, பிற கார உலோகங்கள் (குறிப்பாக சோடியம்), மற்றும் கார உலோக நேர்மின் அயனிகளுடன் இணைக்கப்பட்ட பல்வேறு ஈந்தணைவிகள் போன்ற பல தொடர்புடைய இயங்குறுப்பு எதிர்மின் அயனிகள் அறியப்படுகின்றன. இருலித்தியம் நாப்தலீன் [Li+(tmeda)2]2[C10H8]2−வடிவத்திலும் அறியப்படுகிறது.[8][1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Melero, Cristóbal; Guijarro, Albert; Yus, Miguel (2009). "Structural Characterization and Bonding Properties of Lithium Naphthalene Radical Anion, Li+(TMEDA)2C
10H−
8, and Lithium Naphthalene Dianion (Li+TMEDA)2C
10H2−
8". Dalton Transactions (8): 1286–1289. doi:10.1039/b821119c. பப்மெட்:19462646. https://archive.org/details/sim_dalton-transactions_2009-02-28_1_8/page/1286. - ↑ David G. Hilmey; Leo A. Paquette (2007). "1,3-Dichloroacetone as a Cyclopropanone Equivalent: 5-Oxaspiro[3.4]Octan-1-one". Organic Syntheses 84: 156. doi:10.15227/orgsyn.084.0156.
- ↑ Nicholas A. Morra and Brian L. Pagenkopf (2008). "Direct Synthesis of 2,5-Dihalosiloles". Organic Syntheses 85: 53. doi:10.15227/orgsyn.085.0053.
- ↑ Cotton, F. Albert; Wilkinson, Geoffrey (1988), Advanced Inorganic Chemistry (5th ed.), New York: Wiley-Interscience, p. 139, ISBN 0-471-84997-9
- ↑ 5.0 5.1 Connelly, Neil G.; Geiger, William E. (1996). "Chemical Redox Agents for Organometallic Chemistry". Chemical Reviews 96 (2): 877–910. doi:10.1021/cr940053x. பப்மெட்:11848774.
- ↑ Castillo, Maximiliano; Metta-Magaña, Alejandro J.; Fortier, Skye (2016). "Isolation of Gravimetrically Quantifiable Alkali Metal Arenides Using 18-Crown-6". New Journal of Chemistry 40 (3): 1923–1926. doi:10.1039/C5NJ02841H.
- ↑ Ellis, John E. (2019). "The Chatt Reaction: Conventional Routes to homoleptic Arenemetalates of d-Block Elements". Dalton Transactions 48 (26): 9538–9563. doi:10.1039/C8DT05029E. பப்மெட்:30724934.
- ↑ Brooks, J. J.; Rhine, Wendell; Stucky, G. D. (1972). "π-Groups in Ion Pair Bonding. Stabilization of the Dianion of Naphthalene by Lithium Tetramethylethylenediamine". Journal of the American Chemical Society 94 (21): 7346–7351. doi:10.1021/ja00776a014. Bibcode: 1972JAChS..94.7346B.