இலித்தியம் குளோரைடு
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் குளோரைடு | |
| முறையான ஐயூபிஏசி பெயர்
இலித்தியம்(1+) குளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 7447-41-8 | |
| ChEBI | CHEBI:48607 |
| ChEMBL | ChEMBL69710 |
| ChemSpider | 22449 |
| EC number | 231-212-3 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| ம.பா.த | இலித்தியம்+குளோரைடு |
| பப்கெம் | 433294 |
| வே.ந.வி.ப எண் | OJ5950000 |
| |
| UNII | G4962QA067 |
| UN number | 2056 |
| பண்புகள் | |
| LiCl | |
| வாய்ப்பாட்டு எடை | 42.39 g·mol−1 |
| தோற்றம் | வெண்ணிறத் திண்மம் நீர் உறிஞ்சும் திறன், நுண்ணியவை |
| அடர்த்தி | 2.068 கி/செமீ3 |
| உருகுநிலை | 605–614 °C (1,121–1,137 °F; 878–887 K) |
| கொதிநிலை | 1,382 °C (2,520 °F; 1,655 K) |
| 68.29 கி/100 மிலி (0 °செ) 74.48 கி/100 மிலி (10 °செ) 84.25 கி/100 மிலி (25 °செ) 88.7 கி/100 மிலி (40 °செ) 123.44 கி/100 மிலி (100 °செ)[1] | |
| கரைதிறன் | ஐதரசீனில், n-மீதைல்பார்மமைடு, n-பியூட்டனால், செலீனியம் ஆக்சி இருகுளோரைடு, 1-புரோப்பனால் ஆகியவற்றில் கரையும்[1] |
| மெத்தனால்-இல் கரைதிறன் | 45.2 கி/100 கி (0 °செ) 43.8 கி/100 கி (20 °செ) 42.36 கி/100 கி (25 °செ)[2] 44.6 கி/100 கி (60 °செ)[1] |
| எத்தனால்-இல் கரைதிறன் | 14.42 கி/100 கி (0 °செ) 24.28 கி/100 கி (20 °செ) 25.1 கி/100 கி (30 °செ) 23.46 கி/100 கி (60 °செ)[2] |
| ஃபார்மிக் அமிலம்-இல் கரைதிறன் | 26.6 கி/100 கி (18 °செ) 27.5 கி/100 கி (25 °செ)[1] |
| அசிட்டோன்-இல் கரைதிறன் | 1.2 கி/100 கி (20 °செ) 0.83 கி/100 கி (25 °செ) 0.61 கி/100 கி (50 °செ)[1] |
| திரவ அம்மோனியா-இல் கரைதிறன் | 0.54 கி/100 கி (−34 °செ)[1] 3.02 கி/100 கி (25 °செ) |
| ஆவியமுக்கம் | 1 torr (785 °செ) 10 torr (934 °செ) 100 torr (1130 °செ)[1] |
| −24.3·10−6 செமீ3/மோல் | |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.662 (24 °செ) |
| பிசுக்குமை | 0.87 cP (807 °C)[1] |
| கட்டமைப்பு | |
| ஒருங்கிணைவு வடிவியல் |
எண்முகி |
| மூலக்கூறு வடிவம் | |
| இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 7.13 D (gas) |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
−408.27 கி.ஜுல்/மோல்[1] |
| நியம மோலார் எந்திரோப்பி S |
59.31 யூல்/மோல்·கெல்வின்[1] |
| வெப்பக் கொண்மை, C | 48.03 யூல்/மோல்·கெல்வின்[1] |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள்
|
|
குறியீட்டுச் சொல்
|
எச்சரிக்கை |
இடர் அறிக்கைகள்
|
H302, H315, H319, H335[3] |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
|
P261, P305+351+338[3] |
| தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாதது |
| Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
526 மிகி/கிகி (வாய்வழி, எலி)[4] |
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | இலித்தியம் புளோரைடு இலித்தியம் புரோமைடு இலித்தியம் அயோடைடு இலித்தியம் அசுட்டால்டைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் குளோரைடு பொட்டாசியம் குளோரைடு ருபீடியம் குளோரைடு சீசியம் குளோரைடு பிரான்சியம் குளோரைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
இலித்தியம் குளோரைடு (Lithium chloride) என்பது LiCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த உப்பு ஒரு பொதுவான அயனிச் சேர்மமாகும். இருப்பினும், இலித்தியம் நேர்மின் அயனியின் சிறிய அளவு மற்ற கார உலோகக் குளோரைடுகளுக்குக் காணப்படாத பண்புகளுக்கு (முனைவுற்ற கரைப்பான்களில் அசாதாரணமான கரைதிறன் (g/100 mL நீர் 20°C இல்) மற்றும் அதன் நீர் உறிஞ்சும் திறன் சார்ந்த பண்புகள்) காரணமாக அமைகிறது.[5]
வேதியியல் பண்புகள்
[தொகு]
மற்ற கார உலோக குளோரைடுகளைப் போலல்லாமல், இந்த உப்பு படிக ஐதரேட்டுகளை உருவாக்குகிறது.[6] இந்த உப்பில் ஒற்றை, மூ மற்றும் ஐ பென்டாஐதரேட்டுகள் அறியப்படுகின்றன.[7] ஐதரேட்டுகளை வெப்பப்படுத்துவதன் மூலம் நீரற்ற உப்பை மீண்டும் உருவாக்க முடியும். LiCl மோல் ஒன்றிற்கு நான்கு சமான அம்மோனியா வரை உறிஞ்சுகிறது. மற்ற எந்த அயனி குளோரைடையும் போலவே, இலித்தியம் குளோரைடு கரைசல்களும் குளோரைடு அயனிக்கான மூலமாக செயல்பட முடியும், எடுத்துக்காட்டாக, இச்சேர்மத்துடன் வெள்ளி நைட்ரேட்டைச் சேர்க்கும்போது ஒரு வீழ்படிவை உருவாக்குகிறது.
- LiCl + AgNO3 → AgCl + LiNO3
தயாரிப்பு
[தொகு]இலித்தியம் கார்பனேட்டை ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் லித்தியம் குளோரைடு உற்பத்தி செய்யப்படுகிறது .[5] இலித்திம் ஐதரேட்டை ஐதரசன் குளோரைடு வாயுவின் பாய்ச்சலின் ஊடே அனுப்பி வெப்பப்படுத்துவதன் மூலம் நீரற்ற இலித்தியம் குளோரைடானது உருவாக்கப்படுகிறது.
பயன்பாடுகள்
[தொகு]வணிக பயன்பாடுகள்
[தொகு]முக்கியமாக, இலித்தியம் குளோரைடானது, இதை 450 °C (842 °F) வெப்பநிலையில் LiCl/KCl உருக்கி மின்னாற்பகுப்பு செய்வதன் மூலம் இலித்தியம் உலோகத்தை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. வாகன பாகங்களில் அலுமினியத்திற்கான வன்பற்றாசுவைத்திணைத்தற்பாயமாக LiCl பயன்படுத்தப்படுகிறது. இது காற்றோட்டங்களை உலர்த்துவதற்கு ஒரு உலர்த்தியாக பயன்படுத்தப்படுகிறது . மேலும் சிறப்பு பயன்பாடுகளில், இலித்தியம் குளோரைடு கரிமத் தொகுப்பு முறை தயாரிப்புகளில் சில பயன்பாடுகளைக் காண்கிறது, எடுத்துக்காட்டாக, ஸ்டில் வேதிவினையில் இது ஒரு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், உயிர்வேதியியல் பயன்பாடுகளில், செல்லிலிருந்து பெறப்படும் சாறுகளிலிருந்து ஆர். என். ஏவை வீழ்படிவு செய்ய இது பயன்படுத்தப்படலாம்.[8]
அடர் சிவப்பு தீப்பிழம்புகளை உருவாக்க இலித்தியம் குளோரைடு ஒரு சுடர் வண்ணமாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
முன்னெச்சரிக்கைகள்
[தொகு]இலித்தியம் உப்புகள் மத்திய நரம்பு மண்டலத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கின்றன. சிட்ரேட்டு, கார்பனேட்டு மற்றும் ஓரோடேட்டு உப்புகள் தற்போது இருமுனையப் பிறழ்வுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன, குளோரைடு உள்ளிட்ட பிற லித்தியம் உப்புகள் கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டன. 1940களில் சிறிது காலத்திற்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உப்பு மாற்றாக லித்தியம் குளோரைடு தயாரிக்கப்பட்டது, ஆனால் கலவையின் நச்சு விளைவுகள் (நடுக்கம், சோர்வு, குமட்டல்) அடையாளம் காணப்பட்ட பின்னர் இது தடை செய்யப்பட்டது.[9][10]
இருப்பினும், லித்தியம் குளோரைடு நச்சுத்தன்மைக்கு காரணமாகக் கூறப்படும் பல அறிகுறிகள், சோடியம் குளோரைடு பற்றாக்குறையாலோ, லித்தியம் குளோரைடு கொடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு அடிக்கடி நிர்வகிக்கப்படும் சிறுநீர் பெருக்கிகளாலோ, அல்லது நோயாளிகளின் அடிப்படை நிலைமைகள் ஆகியவற்றாலோ ஏற்பட்டிருக்கலாம் என்று ஜே. எச். டால்பாட் குறிப்பிட்டார்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 lithium chloride
- ↑ 2.0 2.1 Seidell, Atherton; Linke, William F. (1952). Solubilities of Inorganic and Organic Compounds. Van Nostrand. Retrieved 2014-06-02.
- ↑ 3.0 3.1 3.2 Sigma-Aldrich Co., Lithium chloride. Retrieved on 2014-05-09.
- ↑ ChemIDplus - 7447-41-8 - KWGKDLIKAYFUFQ-UHFFFAOYSA-M - Lithium chloride - Similar structures search, synonyms, formulas, resource links, and other chemical information
- ↑ 5.0 5.1 Wietelmann, Ulrich; Bauer, Richard J. (2005), "Lithium and Lithium Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a15_393
- ↑ Holleman, A. F.; Wiberg, E. Inorganic Chemistry Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
- ↑ Hönnerscheid Andreas; Nuss Jürgen; Mühle Claus; Jansen Martin (2003). "Die Kristallstrukturen der Monohydrate von Lithiumchlorid und Lithiumbromid". Zeitschrift für anorganische und allgemeine Chemie 629 (2): 312–316. doi:10.1002/zaac.200390049.
- ↑ Cathala, G.; Savouret, J.; Mendez, B.; West, B. L.; Karin, M.; Martial, J. A.; Baxter, J. D. (1983). "A Method for Isolation of Intact, Translationally Active Ribonucleic Acid". DNA 2 (4): 329–335. doi:10.1089/dna.1983.2.329. பப்மெட்:6198133.
- ↑ 9.0 9.1 Talbott J. H. (1950). "Use of lithium salts as a substitute for sodium chloride". Arch Intern Med 85 (1): 1–10. doi:10.1001/archinte.1950.00230070023001. பப்மெட்:15398859.
- ↑ L. J. Stone; M. luton; J. Gilroy (1949). "Lithium Chloride as a Substitute for Sodium Chloride in the Diet". Journal of the American Medical Association 139 (11): 688–692. doi:10.1001/jama.1949.02900280004002. பப்மெட்:18128981.