உள்ளடக்கத்துக்குச் செல்

இலித்தியம் ஓசோனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் ஓசோனைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் ஓசோனைடு
இனங்காட்டிகள்
12162-89-9
InChI
  • InChI=1S/Li.HO3/c;1-3-2/h;1H/q+1;/p-1
    Key: UVIRAESCTFSTPA-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
  • [Li+].[O-]O[O]
பண்புகள்
LiO3
வாய்ப்பாட்டு எடை 54.94 g·mol−1
தோற்றம் சிவப்பு திண்மம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்
ஏனைய நேர் மின்அயனிகள்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

இலித்தியம் ஓசோனைடு (Lithium ozonide) என்பது LiO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியம் நேர்மின் அயனியும் ஓசோனைடு (O3). எதிர்மின் அயனியும் சேர்ந்து இந்த ஆக்சிசன் மிகு சேர்மம் உருவாகிறது.

சீசியம் ஓசோனைடுடன் தொடங்கும் அயனி பரிமாற்ற வினையைப் பயன்படுத்துவதன் மூலம், நீரற்ற திரவ அம்மோனியாவில் இலித்தியம் ஓசோனைடின் செறிவூட்டப்பட்ட கரைசல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.[1] திரவ அம்மோனியாவில் உள்ள கார உலோக ஓசோனைடுகளில் இலித்தியம் ஓசோனைடு மிகவும் நன்றாகக் கரையக்கூடியதாகும்.[2]

மற்ற கார உலோகங்களின் ஓசோனைடுகளுடன் ஒப்பிடும்போது இலித்தியம் ஓசோனைடு ஒரு புலப்படும் நிறமாலை பண்பைக் காட்டுகிறது. அதிகபட்ச புலப்படும் நிறமாலை பண்பு 450 μm இல் தோன்றுகிறது. இலித்தியம் ஓசோனைடின் டெட்ரா அம்மோனியேட்டின் உருவாதல் வெப்பம் -135 ± 5 கிலோகலோரி/மோல் எனக் கண்டறியப்பட்டது. இலித்தியம் ஓசோனைடின் இசைவான அலை மற்றும் அடிப்படை அதிர்வெண்களைக் கணக்கிட முழுமையான செயலில் உள்ள வெளி சுய-நிலையான புலமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Korber, Nikolaus; Jansen, Martin (July 1996). "Ionic Ozonides of Lithium and Sodium: Circumventive Synthesis by Cation Exchange in Liquid Ammonia and Complexation by Cryptands". Chemische Berichte 129 (7): 773–777. doi:10.1002/cber.19961290707. https://chemistry-europe.onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/cber.19961290707. பார்த்த நாள்: 20 July 2025.
  2. Kacmarek, Andrew J.; McDonough, John M.; Solomon, Irvine J. (1 August 1962). "Preparation and Properties of Lithium Ozonide and the Use of Ammonia in the Preparation of Ozonides". Inorganic Chemistry 1 (3): 659–661. doi:10.1021/ic50003a041. https://pubs.acs.org/doi/pdf/10.1021/ic50003a041. பார்த்த நாள்: 20 July 2025.
  3. Borowski, Piotr; Roos, Björn O.; Racine, Stephen C.; Lee, Timothy J.; Carter, Stuart (1 July 1995). "The ozonide anion: A theoretical study". J. Chem. Phys. 103 (1): 266–273. doi:10.1063/1.469639. Bibcode: 1995JChPh.103..266B. https://pubs.aip.org/aip/jcp/article-abstract/103/1/266/293371/The-ozonide-anion-A-theoretical-study?redirectedFrom=PDF. பார்த்த நாள்: 20 July 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_ஓசோனைடு&oldid=4323134" இலிருந்து மீள்விக்கப்பட்டது