இலிண்டா சால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலிண்டா சால் (Linda Zall) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் விஞ்ஞானியாவார். முன்னதாக இவர் மத்திய புலனாய்வு அமைப்பில் பணியாற்றினார். இங்கு பணியிலிருந்தபோது 1992 ஆம் ஆண்டில் மீடியா என்ற பணிக்குழுவை நிறுவுவதற்கு இவர் பொறுப்பேற்றார். இக்குழு சுற்றுச்சூழல் தரவை உருவாக்க உளவு செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றதாகும்.[1] [2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சால் வடக்கு நியூயார்க்கிலுள்ள ஆர்னல் கிராமத்தில் வளர்ந்தார். இவருடைய தந்தை ஒரு பெரிய பால்பண்ணையின் மேலாளராக இருந்தார். [1] பின்னர் அவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியரானார். ஓய்வுக்குப் பிறகும் பணியாற்றி பேராசிரியராக ஓய்வு பெற்றார்.

இங்கிலாந்தில் பிறந்த கணிதவியலாளர், இயற்பியலாளர் மற்றும் அறிவியல் புனைகதை எழுத்தாளர் சார்லசு செஃபீல்ட்டை சால் திருமணம் செய்து கொண்டு பிறகு விவாகரத்து செய்தார். இந்த தம்பதியருக்கு எலிசபெத் மற்றும் விக்டோரியா செஃபீல்டு என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். [3] [4]

கல்வி[தொகு]

கார்னெல் பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியலில் சால் முனைவர் பட்டம் பெற்றார். இங்கு சால் இருந்தபோது டொனால்டு யே. பெல்ச்சர் இவருக்கு வழிகாட்டினார்.[1]

தொழில்[தொகு]

சால் 1975 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை புவி நோக்கு செயற்கைக்கோள் நிறுவனத்தில் பணிபுரிந்தார், 1985 ஆம் ஆண்டில் மத்திய புலனாய்வு அமைப்புக்குச் சென்றார். 2013 ஆம் ஆண்டு சால் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Broad, William (5 January 2021). "Inside the C.I.A., She Became a Spy for Planet Earth". New York Times. https://www.nytimes.com/2021/01/05/science/linda-zall-cia.html. 
  2. Sanchez, Kate (5 January 2021). "Go read these stories about the use of spy satellite images in environmental studies". The Verge. https://www.theverge.com/2021/1/5/22215778/spy-satellites-cia-climate-change-environmental-studies-new-york-times. 
  3. Pace, Eric (9 January 2002). "Charles Sheffield, 67, Physicist And Author of Science Fiction". New York Times. https://www.nytimes.com/2002/11/09/arts/charles-sheffield-67-physicist-and-author-of-science-fiction.html. 
  4. Estrada, Louie (3 November 2002). "Charles Sheffield Dies at 67". Washington Post. https://www.washingtonpost.com/archive/local/2002/11/03/charles-sheffield-dies-at-67/62af58b8-63b7-4a1a-a9fc-3ea9f2725aa7/. 

புற இணைப்புகள்[தொகு]

  • Appearances on C-SPAN
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலிண்டா_சால்&oldid=3213421" இலிருந்து மீள்விக்கப்பட்டது