உள்ளடக்கத்துக்குச் செல்

இலிட்சா நாட்டுப்புற இசை விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலிட்சா நாட்டுப்புற இசை விழா
படிமம்:File:Ilidza.folk.music.festival.jpg
வகைநாட்டுப்புற இசை
நாள்சூலை
அமைவிடம்(கள்)இலிட்சா , சாரயேவோ, பொசுனியா எர்செகோவினா
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்1964–தற்போது வரை
Fabrice Lamproie
Sarajevo Music Academy
Pro Helvetia
வலைத்தளம்
Official Website

இலிட்சா நாட்டுப்புற இசை விழா Ilidža Folk Music Festival இது பண்டைய யூகோஸ்லாவியாவின் பழமையான மற்றும் தற்காலம்வரை வழக்கத்திலுள்ள முதன்மையான நாட்டுப்புற இசை விழா ஆகும்.[1][2][3] இவ்விழாவானது ஆண்டுதோறும் பொசுனியா எர்செகோவினா நாட்டில் சாரயேவோ மாகாணத்தின் இலிட்சா நகராட்சியில் நடத்தப்படுகிறது. 1964 ஆம் ஆண்டு பொசுனியா ரெக்கார்டிங் கலைஞர்கள் சங்கத்தால் இவ்விழா ஆரம்பிக்கப்பட்டது,[4] நான்கு நாட்கள் நீடிக்கும் இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் சூலை மாதம் நடைபெறுகிறது. .

வரலாறு

[தொகு]

முன்னாள் யூகோஸ்லாவியாவி சாரயேோோ நாட்டுப்புற இசைக்கான ஒரு பாரம்பரிய மையமாக இருந்தது.எனவே, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து ஏராளமான இசைப்பதிவு கலைஞர்கள் வாய்ப்புக்கள் தேடி நகரத்திற்கு வந்தனர். எனவே எண்ணற்ற இசை சார்ந்த மன்றங்கள், மற்றும் அமைப்புகள் உருவாகி இசையின் மொழிபெயர்ப்பாளர்களையும், சமகால நாட்டுப்புற பாடகர்கள் மற்றும் அன்றைய இசைக்கலைஞர்களையும் ஈர்த்தது. 1963 ஆம் ஆண்டில் பொசுனிய இசைப்பதிவு கலைஞர்கள் சங்கம் நாட்டுப்புற இசையின் கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்தது,[5] சாரயேவோ புறநகர்ப் பகுதியான இலிட்சாவில் நடைபெற்ற இந்நிகழ்வு விழாவிற்கு முன்னோடியாக இருந்தது ு.[6] ஒரு வருடத்திற்க்குப்பிறகு இவ்விழா நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்களின் விழா - இலிட்சா என்ற செயல்பாட்டுத் தலைப்பின் கீழ் பெயர்மாற்றப்பட்டது.

சாரயேவோ முற்றுகை மற்றும் பொசுனியாப் போர் தொடங்கியவுடன், இலிட்சா செர்பியர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசமானதால் மேற்படி விழா நிறுத்தப்பட்டது. 1995 இல் டேட்டன் அமைதி ஒப்பந்தங்களுக்குப்பிறகு, புறநகர்ப் பகுதி சாரயேவோுடன் மீண்டும் இணைக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு இந்த விழா இலிட்சா நகராட்சியின் ஆதரவின் கீழ் மீண்டும் தொடங்கப்பட்டது[7]. 2013 முதல் இந்த விழா ஹயாத் தொலைக்காட்சி நெட்வொர்க்குடன் இணைந்து நடத்தப்படுகிறது.[8] 2014 இல் இது அதன் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.[9] உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறக்கலைஞர்கள் இவ்விழாவில் பங்கேற்று இசை நிகழ்ச்சிகள் நிகழ்த்தியுள்ளனர்.

இசை வடிவம்

[தொகு]

இந்த விழா நான்கு விதமான போட்டிகளை நடத்துகிறது[10]

  1. பாரம்பரியத்தின் பாதுகாவலர்கள் - செவ்டலின்கா மற்றும் ஸ்டாரோகிராட்ஸ்கா போன்ற பாரம்பரிய பால்கன் நாட்டுப்புற இசை வகைகளை காட்சிப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
  2. முதல் அக்கார்டியன் - நாட்டுப்புற அக்கார்டியன் இசைக்கலைஞர்களுக்கான போட்டி நிகழ்ச்சி.
  3. மாலைப்பொழுதின் நாட்டுப்புற இசைப் போட்டிகள் - புதியவர்கள் மற்றும் தேர்ச்சியற்றவர்களுக்கான போட்டித் திட்டம்.
  4. நாட்டுப்புற இசை மேதைகள் - பால்கன் நாட்டுப்புற இசையில் உன்னதமானவர்களின் நிகழ்ச்சிகளை வழங்கும் தனிச்சிறப்பு விழா நிகழ்ச்சி.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kulturno blago svih Bosanaca i Hercegovaca". vipromo.ba. Archived from the original on 2018-05-04. Retrieved 2018-05-03.
  2. "Najpoznatiji među festivalima narodne muzike u regionu". faktor.ba.
  3. "Otvoren konkurs za Festival narodne muzike "Ilidža 2018."". coolstyle.ba.
  4. "AIS kao partner Festivala narodne muzike Ilidža 2017". aisbih.org. Archived from the original on 2020-02-24. Retrieved 2018-05-03.
  5. "Otvoren Festival Ilidža: Prva večer posvećena čuvarima tradicije". oslobodjenje.ba.
  6. "Ilidža '66". starigramofon.com.
  7. "Pripreme za festival narodne muzike Ilidža". opcinailidza.ba.
  8. "Zašto je važan Festival narodne muzike Ilidža". hayat.ba.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "U novembru Festival narodne muzike "Ilidža 2013"". novovrijeme.ba.
  10. "Sve je spremno za Festivala narodne muzike Ilidža". hayat.ba. Archived from the original on 2019-01-16. Retrieved 2018-05-03.