இலிசா கால்டெனகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலிசா கால்டெனகர்
Lisa Kaltenegger
கட்டிட்த்துக்கு முன்பு நிற்கும் இலிசா கால்டெனகர்
கார்னெல்லின் பிக் ரெட் பார்னுக்கு முன்பு நிற்கும் இலிசா கால்டெனகர்
பிறப்பு4 மார்ச்சு 1977
பணிஆசுத்திரிய வானியலாளர்

இலிசா கால்டெனகர் (Lisa Kaltenegger) (4 மார்ச்சு 1977, சால்சுபர்கு அண்மையில் உள்ள குச்சில்) ஓர் ஆசுத்திரிய வானியலாளர் அவர். இவர் புறக்கோள்களின் படிமமாக்கத்திலும் பான்மையிலும் விண்வெளி உயிரியலிலும் வல்லுனர் ஆவார். இவர் 2014 ஜூலை 1 இல் கார்னெல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார்.[1] முன்பு, இவர் ஐடெல்பர்கில் உள்ள வானியலுக்கான மேக்சு பிளாங்கு நிறுவனத்தில் இணைபதவி வகித்தார். இங்கு இவர் எம்மி நோயதர் ஆராய்ச்சிக் குழுவின் தலைவராகவும் இருந்தார். இக்குழு "மீப்புவிகளும் உயிர்வாழ்வும்" பர்ரிய ஆய்வில் ஈடுபட்டது. மேலும் இவர் கேம்பிரிட்ஜ், ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்திலும் பணிபுரிந்தார்.[2] இவர் 2008 இல் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். இவர் 2011 இல் ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தில் புல உறுப்பினராகச் சேர்ந்தார்.[3]

கல்வி[தொகு]

தகைமைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலிசா_கால்டெனகர்&oldid=3586243" இருந்து மீள்விக்கப்பட்டது