இலாமா தால்
Appearance
இலாமா தால் | |
---|---|
இலாம் தால் | |
![]() | |
அமைவிடம் | சம்பா |
ஆள்கூறுகள் | 32°20′12″N 76°19′51″E / 32.33667°N 76.33083°E |
ஏரி வகை | உயர்மட்ட ஏரி |
வடிநில நாடுகள் | இந்தியா |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 3,960 m (12,990 அடி) |
மேற்கோள்கள் | Himachal Pradesh Tourism Dep. |
இலாமா தால் (Lama Dal) அல்லது இலாம் தால் என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் உள்ள பியூரா தார் என்ற இடத்தில் அமைந்துள்ள ஓர் உயரமான ஏரியாகும். இது சம்பா நகரத்திலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் கடல் மட்டத்திற்கு மேல் 3,960 மீட்டர்கள் (12,990 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.[1][2]
வரலாறு
[தொகு]இலாமா தால் ஏரி சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான ஏரி. இது இந்து நாட்காட்டியின் அடிப்படையில் சூலை/ஆகத்து மாதங்களில் நடைபெறும் புனித யாத்திரையில் முக்கியப் பகுதியாகும். கரேரி ஏரி இங்கிருந்து தென்மேற்கில் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஏரியானது மலையேற்றம் மூலம் கெரா (சாலை அணுகக்கூடியது) - கரேரி - கரேரி ஏரி வழியாக அணுகக்கூடிய மிதமான மலையேற்ற இடமாகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Himachal Pradesh Tourism Dep.
- ↑ "Lama Dal Lake". ehimachal.org (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-01-17.
- ↑ "Lam Dal Lake Trek -" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-01-17.