உள்ளடக்கத்துக்குச் செல்

இலாசுகரி பசார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலாசுகரி பசார்
தொல்லியல் தளம்
லாசுகர் காவில் உள்ள இலாசுகர் பசாரின் கசனவித்து அரண்மனையின் இடிபாடுகள் (தெற்கு அரண்மனை, வடக்கே இருந்து பார்க்கப்படுகிறது).
லாசுகர் காவில் உள்ள இலாசுகர் பசாரின் கசனவித்து அரண்மனையின் இடிபாடுகள் (தெற்கு அரண்மனை, வடக்கே இருந்து பார்க்கப்படுகிறது).[2]
இலாசுகரி பசார் is located in ஆப்கானித்தான்
இலாசுகரி பசார்
இலாசுகரி பசார்
ஆப்கானித்தானில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 31°33′57″N 64°21′03″E / 31.565961°N 64.350822°E / 31.565961; 64.350822
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்எல்மந்து

இலாசுகரி பசார் (Lashkari Bazar) என்பது ஆப்கானித்தானில் இலாசுகர் காவில் அமைந்துள்ள கசனவித்து பேரரசின் ஆட்சியாளர்களின் அரண்மனை குடியிருப்பு ஆகும். அசல் பெயர் அநேகமாக அல்-அசுகர் என்பதாக இருக்கலாம்.[3]

வரலாறு

[தொகு]

தளத்தின் சில கட்டமைப்பு கூறுகள் பார்த்தியப் பேரரசின் காலத்தைச் சேர்ந்தவையாகக் குறிப்பிடுகிறது. [3] மைய அரண்மனை (32x52 மீட்டர்) சமனிட் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது ( பொ.ச.819-999 ).[3] 661 ஆம் ஆண்டிலேயே அரேபியர்களால் இப்பகுதி கைப்பற்றப்பட்டது. மேலும் பெரிய மற்றும் பணக்கார நகரமாக வளர்ந்தது.[4]

தென்பகுதியிலுள்ள மிகப் பெரிய அரண்மனை (170x100 மீட்டர்) கசினியின் மகுமூதுவால் (பொ.ச.998-1030) நிறுவப்பட்டது. மேலும் அவரது மகன் முதலாம் மசூத் (பொ.ச.1030-1041) மூலம் விரிவாக்கப்பட்டது.[3][5][6][4] இலாசுகரி பசாரில் உள்ள அரண்மனைகள் கசனவித்து ஆட்சியாளர்களின் குளிர்காலத் தங்குமிடமாக இருந்தன. அதன் தலைநகரம் கசினியில் இருந்தது.[4] தெற்கு அரண்மனைச் சுவரின் மேற்பரப்புப் பூச்சுகள், ஓவியங்கள், சுதை ஓவியங்கள், செதுக்கப்பட்ட பளிங்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.[3] சுமார் 100 மீட்டர் நீளமுள்ள ஒரு பெரிய சந்தைத் தெரு, அரண்மனை அமைப்புடன் இணைகிறது.[3]

வடக்கு அரண்மனை பிற்கால ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது.[4][3]

பிற்கால குரித் வம்சத்தினர் பொ.ச.1151இல் அரண்மனைகளை சூறையாடினர். ஆனாலும் பின்னர் அவற்றை மீட்டெடுத்தனர். மேலும் கட்டிடக்கலையின் சில பகுதிகள் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது.[4][3] அவர்கள் தெற்கே சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலா-இ-போஸ்ட் கோட்டையை கட்டிடக்கலை வளைவுடன் கட்டினார்கள்.

சமீபத்தில் இடிபாடுகள் தலிபான் வன்முறையில் இருந்து தப்பி ஓடிய ஆப்கானித்தான் அகதிகளால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டன.[7]

சான்றுகள்

[தொகு]
  1. Schlumberger, Daniel (1952). "Le Palais ghaznévide de Lashkari Bazar". Syria 29 (3/4): 257. பன்னாட்டுத் தர தொடர் எண்:0039-7946. https://www.jstor.org/stable/4390312.
  2. ↑ Schlumberger, Daniel (1952). "Le Palais ghaznévide de Lashkari Bazar". Syria 29 (3/4): 257. பன்னாட்டுத் தர தொடர் எண்:0039-7946. https://www.jstor.org/stable/4390312.
  3. 1 2 3 4 5 6 7 8 Petersen, Andrew (1996). Dictionary of Islamic Architecture. Routledge. pp. 161–162. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. 1 2 3 4 5 Kipfer, Barbara Ann (29 June 2013). Encyclopedic Dictionary of Archaeology (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 576. ISBN 978-1-4757-5133-8.
  5. ↑ Schlumberger, Daniel (1952). "Le Palais ghaznévide de Lashkari Bazar". Syria 29 (3/4): 251–270. பன்னாட்டுத் தர தொடர் எண்:0039-7946. https://www.jstor.org/stable/4390312.
  6. ↑ Fehérvári, Géza; Shokoohy, Mehrdad (1980). "ARCHEOLOGICAL NOTES ON LASHKARI BAZAR". Wiener Zeitschrift für die Kunde des Morgenlandes 72: 83–95. பன்னாட்டுத் தர தொடர் எண்:0084-0076. https://www.jstor.org/stable/23866273.
  7. ↑ "Afghan war displaced settle in lost city". South China Morning Post.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாசுகரி_பசார்&oldid=4570146" இலிருந்து மீள்விக்கப்பட்டது