இலாகூரில் காற்று மாசுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலாகூரில் காற்று மாசுபாடு (Air pollution in Lahore) பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் தொடர் பிரச்சினையாக இருந்து வருகிறது.[1] காற்று மாசுபாட்டிற்கு பாக்கித்தான் இந்தியாவை குற்றம் சாட்டிக் கொண்டிருந்தாலும் பாக்கித்தான் குடிமக்கள் இதை ஏற்கவில்லை. [2]

நவம்பர் 2017[தொகு]

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காற்று மாசுபாடு காரணமாக இலாகூருக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. [3]

சனவரி 2019[தொகு]

2019 ஆம் ஆண்டு சனவரியில் ஏற்பட்ட ஒரு புகை மூட்டம் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைத் தூண்டியது. [4]

ஏப்ரல் 2020[தொகு]

2020 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாக்கித்தானில் கோவிட்டுD-19 நெருக்கடி முடிவடைந்ததைத் தொடர்ந்து காற்று மாசுபாடு மீண்டும் வெடித்தது.

நவம்பர் 2021[தொகு]

நவம்பர் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட புகைமூட்டம், குடிமக்களுக்கு சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சளி, காய்ச்சல் ஆகியவை பொதுவான நோய்களாக மாறின. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, காற்று மாசுபாட்டின் அடிப்படையில் இலாகூர் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. [5] [6] [7] இலாகூரில் உள்ள கோட் லக்பத் பகுதியில் அதிகபட்சமாக 680 காற்றுத் தரச் சுட்டெண் மதிப்பீடு பதிவாகியுள்ளது. [8]

இலாகூர் பெருநகர மாநகராட்சி, நீர் மற்றும் சுகாதார நிறுவனம், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் இலாகூர் மின்சார விநியோக நிறுவனம் [9] [10] ஆகிய 5 சிறப்புப் படைகள் இலாகூரின் புகைமூட்டத்தை எதிர்த்துப் போராட அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Zahra-Malik, Mehreen (10 November 2017). "In Lahore, Pakistan, Smog Has Become a 'Fifth Season'". The New York Times. https://www.nytimes.com/2017/11/10/world/asia/lahore-smog-pakistan.html. 
  2. Abi-Habib, Maria (22 November 2019). "Pakistan Blames India for Its Air Pollution. Its Citizens Disagree.". The New York Times. https://www.nytimes.com/2019/11/22/world/asia/pakistan-lahore-air-pollution.html. 
  3. "All you need to know about air pollution in New Delhi" (in en). www.aljazeera.com. https://www.aljazeera.com/news/2017/11/8/whats-pm-2-5-and-why-is-new-delhi-lahore-smog-so-bad. 
  4. "As Lahore chokes on winter smog, Pakistan moves to cut air pollution" (in en). Reuters. 7 January 2019. https://www.reuters.com/article/us-pakistan-smog-lahore-idUSKCN1P10XS. 
  5. "Lahore Air Quality Index (AQI) and Pakistan Air Pollution | AirVisual".
  6. "Pakistan: 'Find a solution,' say Lahore residents choking in smog". www.aljazeera.com.
  7. "Hazy Lahore declared most polluted city in the world". 2 November 2021.
  8. "Lahore world's most polluted city". 30 October 2021.
  9. "Smog squads". 18 November 2021.
  10. "Buzdar reviews anti-smog measures".