உள்ளடக்கத்துக்குச் செல்

இலாகிம்பூர், உத்தரப் பிரதேசம்

ஆள்கூறுகள்: 27°57′N 80°46′E / 27.95°N 80.77°E / 27.95; 80.77
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலாகிம்பூர்
நகரம்
இலாகிம்பூர் is located in உத்தரப் பிரதேசம்
இலாகிம்பூர்
இலாகிம்பூர்
உத்தரப் பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°57′N 80°46′E / 27.95°N 80.77°E / 27.95; 80.77
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்இலாகிம்பூர் கேரி
பரப்பளவு
 • மொத்தம்10.10 km2 (3.90 sq mi)
 • பரப்பளவு தரவரிசை3
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,51,993[1]
மொழி
 • அலுவல்இந்தி[3]
 • Additional officialஉருது[3]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
262701[4]
வாகனப் பதிவுUP-31

இலாகிம்பூர் (Lakhimpur) என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் இலாகிம்பூர் கேரி மாவட்டத்திலுள்ள ஒரு நகரமும், நகரியமும் ஆகும்.

நிலவியல்[தொகு]

இலாகிம்பூர் 27.95 ° வடக்கிலும், 80.77 ° கிழக்கிலும் அமைந்துள்ளது.[5] இதன் சராசரி உயரம் 147 மீட்டர் (482 அடி) ஆகும்.

இது அதன் எல்லைகளாக[6] கீழ்க்கண்ட நகரங்களை பகிர்ந்து கொள்கிறது -

 • வடக்கே - நேபாளம்
 • மேற்கே - ஷாஜகான்பூர் மாவட்டங்கள்
 • தெற்கே - கார்தோய் & சீதாபூர் மாவட்டம்
 • கிழக்கே - பக்ரைச் மாவட்டம்.

மகாகாளி ஆறு, காக்ரா ஆறு, கோரியாலா ஆறு, உல் ஆறு, சராயன் ஆறு, சௌகா ஆறு, கோமதி ஆறு, காத்னா ஆறு, சரயு ஆறு, மோகனா ஆறு ஆகியவை இதன் முக்கிய ஆறுகளாகும்.

காலநிலை[தொகு]

மழைக்காலங்களைத் தவிர ஆண்டு முழுவதும் இங்கு வெப்பமாக இருக்கும். குளிர்காலத்தில், இரவுகள் மிகவும் குளிராக இருக்கும். இந்த பருவத்தில் மூடுபனி மிகவும் பொதுவானது.[7]

புள்ளிவிவரங்கள்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இலாகிம்பூர் நகரில் மொத்த மக்கள் தொகை 151,993 ஆகும். இதில் 80,523 ஆண்களும், 71,470 பெண்களும் அடங்குவர். 0 முதல் 6 வயதுக்குட்பட்ட மக்கள் தொகை 17,167 என்ற எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மொத்த கல்வியறிவாளர்களின் எண்ணிக்கை 112,043 ஆகும். இது மக்கள்தொகையில் 73.7%இல் ஆண்களின் கல்வியறிவு 76.9% ஆகவும், பெண் கல்வியறிவு 70.1% ஆகவும் உள்ளது. இங்குள்ள 7 வயதுக்கு மேற்பட்டவர்களில் கல்வியறிவு விகிதம் 83.1% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 86.8% ஆகவும், பெண் கல்வியறிவு விகிதம் 78.9% ஆகவும் இருந்தது. பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினரின் எண்ணிக்கை முறையே 13,394 மற்றும் 312 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர். நகரில் 2011ன்படி 28199 வீடுகள் இருந்தன. [1]

மொழிகள்[தொகு]

இங்கு பேசப்படும் மொழிகளில் அவதி, 38 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேசும் இந்தி பேச்சுவழக்கு தொடர்ச்சியின் ஒரு மொழியாகும். இது முக்கியமாக அவத் பிராந்தியத்தில் பேசப்படுகிறது.

சுற்றுலா[தொகு]

துத்வா புலிகள் காப்பகம் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது, துத்வா தேசியப் பூங்கா[8], கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம் ஆகியவை 1987 இல் இணைக்கப்பட்டன. உத்தராகண்டம் உருவான பின்னர் துத்வா தேசியப் பூங்கா மாநிலத்தின் முதல் தேசியப் பூங்கா என்று அழைக்கப்படுகிறது.

புலி, சிறுத்தை, மூக்குக் கொம்பன், முயல், யானைகள், மான்கள், சதுப்பு மான் போன்ற ஏராளமான அரிய மற்றும் ஆபத்தான உயிரினங்கள் இங்கு உள்ளன.

தவளைக் கோயில்[தொகு]

இலாகிம்பூரிலிருந்து சீதாப்பூர் செல்லும் பாதையில் 12 கி.மீ (7.5 மைல்) தொலைவில் உள்ள ஓல் நகரில் இந்த தனித்துவமான தவளைக் கோயில் அமைந்துள்ளது. இது நகரத்தின் முக்கியமான சுற்றுலா மையமாகும். மாண்டூக்கிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இது 1860க்கும் 1870க்கும் இடையில் ஓல் மாநிலத்தின் முன்னாள் அரசனால் (இலாகிம்பூர் கெரி மாவட்டம்) கட்டப்பட்டது. இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் ஒரு பெரிய தவளையின் பின்புறத்தைப்போலக் கட்டப்பட்டுள்ளது. கோயில் ஒரு எண்கோண தாமரை வடிவமாகக் கட்டப்பட்டுள்ளது.

போக்குவரத்து[தொகு]

இலாகிம்பூர் நகரம், மாநில தலைநகரான இலக்னோவிலிருந்து 124 கி.மீ (77 மைல்) தொலைவில் உள்ளது. தொடர் வண்டி மூலமும் உத்தரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலமும் இதை எளிதாக அடையலாம்.

அருகிலுள்ள விமான நிலையம் இலக்னோவின் சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் 135 கி.மீ. தொலைவிலுள்ளது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Census of India: Lakhimpur". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 13 January 2020.
 2. "::Welcome to Nagar Palika Parishad Lakhimpur Kheri ::". www.npplakhimpur.in. Archived from the original on 28 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 21 January 2021.
 3. 3.0 3.1 "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (இந்தியா). Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 1 October 2019. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 4. "Pin Code: Lakhimpur, Kheri, Uttar Pradesh is 262701 | Pincode.org.in". pincode.org.in.
 5. "Maps, Weather, and Airports for Lakhimpur, India". www.fallingrain.com.
 6. "Archived copy". Archived from the original on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 9 May 2011.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
 7. "Archived copy". Archived from the original on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 9 May 2011.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)"Archived copy".
 8. Nature's strongholds: the world's great wildlife reserves – Page 211, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-12219-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-12219-9

வெளி இணைப்புகள்[தொகு]