இலவு நரேந்திரநாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலவு நரேந்திரநாத்
Lavu Narendranath
பிறப்புஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிஎலும்பியல் மருத்துவர்
விருதுகள்பத்மசிறீ

இலவு நரேந்திரநாத் (Lavu Narendranath) ஓர் இந்திய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராவார். மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் ஐதராபாத்திலுள்ள நிசாம் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குனராகவும் இருந்தார்.[1]

தொழில்[தொகு]

மருத்துவப் பாடத்தில் பட்டமும், முதுகலைப் பட்டமும் [2] பெற்றபின்னர் நரேந்திரநாத் நிசாம் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சேர்ந்தார். 2013 ஆம் ஆண்டு ஆகத்து 31 வரை நிறுவனத்தின் துணைத் தலைவராக தனது மேலதிக பதவி நிறைவு பெறும் வரை அங்கு பணியாற்றினார்.[3] தொடர்ந்து இயக்குநராகப் பணியைத் தொடரும்படி நிறுவனம் இவரிடம் கேட்டுக் கொண்டது. இந்நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தோல்வி அடைந்ததால் இவர் தன் பணியை தொடர்ந்து வருகிறார்.[4] நரேந்திரநாத்தின் பதவிக்காலத்தில் நிறுவனம் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது.[5] போலியோ பாதிப்புக்குள்ளான நபர்கள் மற்றும் உறுப்புத் துண்டிக்கப்பட்டவர்களுக்கான மிகக் குறைந்த எடை கொண்ட செயற்கைக் கால்களை உருவாக்கும் திட்டத்தில் புகழ்பெற்ற விஞ்ஞானியும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாமுடன் இணைந்து இவர் பணியாற்றியுள்ளார்.[4] இந்திய மருத்துவத்துறையில் நரேந்திரநாத் ஆற்றிய சீறிய பணிகளுக்காக இந்திய அரசு நான்காவது உயர் குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை 2005 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கி சிறப்பித்தது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "L. Narendranath new Nims head". Deccan Chronicle. 2 September 2013. Archived from the original on 8 December 2015. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
  2. "Practo profile". Practo. 2015. Archived from the original on 8 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Government brings in a Padma Shri to get NIMS back on track". Indian Express. 1 September 2013. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
  4. 4.0 4.1 "Dr L Narendranath appointed director of NIMS, Hyderabad". Pharma Biz. 3 September 2013. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
  5. "Telangana Deputy CM Targets NIMS Director". Great Andhra. 20 January 2015. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
  6. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help); Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலவு_நரேந்திரநாத்து&oldid=3927906" இலிருந்து மீள்விக்கப்பட்டது