இலவுரா பெராரீசு
நாசா, எசா படிமம் | |
பிறப்பு | பாதோவா, இத்தாலி |
---|
இலவுரா பெராரீசு (Laura Ferrarese) கனடா தேசிய ஆராய்ச்சி மன்றத்தில் பணிபுரியும் விண்வெளி ஆராய்ச்சியாளர் ஆவார். இவரது முதன்மையான பணி அபுள் தொலைநோக்கிவழி விண்வெளி சார்ந்த நோக்கீடுகள் செய்வதாகும்.
இளமை
[தொகு]இவர் இத்தாலியில் உள்ள பதோவாவில் பிறந்தார். பதோவா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.[1] இவர் 1996 இல் இயற்பியல் முனைவர் பட்டத்தை ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் 2004 இல் உரட்செர்சு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆனார்.[2] இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார்.[3] இவர் 2014 இல் எலன் சாயர் கோகு பரிசுக்கான விருந்து தகைமையுரை ஆற்றியுள்ளார்.[2]
ஆராய்ச்சி
[தொகு]இவரது பணி இவருக்கு அபுள் விண்வெளித் தொலைநோக்கி, கனடா-பிரான்சு-அவாய் தொலைநோகி ஆகிய திட்டங்களுக்குத் தலைமையேற்கும் தகுதியை ஈட்டித் தந்தது.[2] இவரது ஆய்வுகள் மீப்பொருண்மை கருந்துளைகளின் பொருண்மைகளைக் கண்டறிவதிலும் பால்வெளி புடைப்புகள் விண்மீன் விரைவை விரவச் செய்தலிலும் கருந்துளைப் பொருண்மை பால்வெளிப் புடைப்புகளின் ஊடாட்டத்திலும் செறிந்தமைந்தன. இவர் பால்வெளிக் கருக்களின் இயங்கியலிலும் அளவுறவுகளிலும் பால்வெளிப் புற தொலைவு விரிவின் அளவீட்டிலும் ஆய்வுகள் மேற்கொண்டார் .[4]
தகைமைகளும் விருதுகளும்
[தொகு]இவர் 2012 இல் இரண்டாம் எலிசபெத் அரசியின் வைர விருதிப் பெற்றார். இவர் வட அமெரிக்காவுக்குச் சென்று 2014 CASCA/RASC எலன் கோகு விரிவுரைகளை நிகழ்த்தியுள்ளார்.[5]
இவர் 2000 நவம்பர் 30 இல், பிரித்தானிய ஒலிபரப்புக் கழகத்தின் “மீப்பொருண்மைக் கருந்துளைகள்” தொடரில் தோன்றி விரிவான விளக்கங்களைத் தந்துள்ளார்.
இவர் தனது வானியல் ஆராய்ச்சிப் பங்களிப்புகளுக்காக 2015 இல் பீட்டர் ஜி. மார்ட்டின் விருதைப் பெற்றார்.[5]
கருத்தரங்குகள்
[தொகு]- Supermassive Black Hole Research in the Post-HST Era (2002) appeared in “Hubble Science Legacy Workshop” held in Chicago, (ASP Conference Series)
- Black Hole Demographics (2002) in "Current High-Energy Emission Around Black Holes", Proceedings 2nd KIAS Astrophysics Workshop, ed. C.-H. Lee. Singapore: World Scientific, p. 3
- Relationship of Black Holes to Bulges by David Merritt & Laura Ferrarese (2001) appeared in "The Central Kpc of Starbursts and AGN", ed. J. H. Knapen, J. E. Beckman, I. Shlosman & T. J. Mahoney (ASP series.)
- The Hubble Constant from the HST Key Project on the Extragalactic Distance Scale by Laura Ferrarese (2000) appeared in "Towards an Understanding of Cosmic Flows" eds. S. Courteau, M. Strauss & J. Willick (ASP series)[6]
வெளியீடுகள்
[தொகு]- Astronomy: Feeding the first quasars in 2003[7]
- Wavelength Calibration of GHRS, Analysis of Side 2 Data (Proposals 2844 and 2845). Duncan, D. Ferrarese, L. Walsh, J.R., Walter, L. 1991, GHRS Science Report no. 35, STScI Publications.
- Analysis of GHRS proposal 3021 and 3127: Comparison between GHRS and Copernicus Data. Ferrarese, L.1991, STScI Publications.
- GHRS Status. Gilliland, R., Duncan D, Ferrarese, L., 1991, STScI Publications.
- Calibration of the Photometric Sensitivity of some Low and Medium Resolution Gratings for the GHRS. Ferrarese, L. Walsh, J.R. 1990, GHRS Science Report no. 27, STScI Publications.
- Analysis of GHRS proposal 3021: Wavelength Accuracy and Stability. Ferrarese, L. 1990, GHRS Science Report no. 26, STScI Publications.[6]
- Article: Co-author of Supermassive Black Holes (2002) Physics World.[6]
தொடர்புகள்கள்
[தொகு]இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தில் மும்முரமாகச் செயல்பட்டு வந்துள்ளார். இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தில் ஏந்துகள், தொழில்நுட்பங்கள், தரவியச் சார்ந்த B பிரிவிலும் உட்கணப்பொருண்மம். களப்புடவி சார்ந்த H பிரிவிலும் பால்வெளிகள், அண்டவியல் சார்ந்த J பிரிவிலும் செயல்பட்டர். இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தில் 2012 வரை பால்வெளிகள், புடவி சார்ந்த எட்டாம் பிரிவின் முன்னா உறுப்பினராக இருந்துள்ளார்; மேலும், 2015 வரை பால்வெளிகள் சார்ந்த 28 ஆம் ஆணையத்திலும் இருந்துள்ளார்.[8]
இவர் 2013 முதல் 2015 வரை கனடா தேசிய வானியல் குழுவின் தலைவராக விளங்கினார்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Curriculum Vitae of Laura Ferrarese" (PDF). University of Victoria. Archived from the original (PDF) on 2015-11-17. பார்க்கப்பட்ட நாள் 2018-08-19.
- ↑ 2.0 2.1 2.2 "CASCA 2015 Press Tip Sheet" (PDF). Canadian Astronomical Society. Archived from the original (PDF) on 2015-11-17. பார்க்கப்பட்ட நாள் 2018-08-19.
- ↑ "Two Public Astronomy Lectures Help Mark 100 Years of Astronomy Group in Victoria". Royal Astronomical Society of Canada.
- ↑ "Laura Ferrarese -- Herberg Astrophysics" (in en-US). Herzberg Astrophysics. http://astroherzberg.org/people/laura-ferrarese/.
- ↑ 5.0 5.1 Sage, Leslie (2015). CASCA 2015 Press Tip Sheet. Canadian Astronomical Society. http://imp.mcmaster.ca/CASCA%202015%20Press%20Tip%20Sheet.pdf. பார்த்த நாள்: 2018-08-19.
- ↑ 6.0 6.1 6.2 "Laura Ferrarese's Publications". astrowww.phys.uvic.ca. பார்க்கப்பட்ட நாள் 2016-11-22.
- ↑ Ferrarese, Laura (2003-01-23). "Astronomy: Feeding the first quasars" (in en). Nature 421 (6921): 329–330. doi:10.1038/421329a. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. Bibcode: 2003Natur.421..329F. http://www.nature.com/nature/journal/v421/n6921/full/421329a.html.
- ↑ 8.0 8.1 "International Astronomical Union | IAU". www.iau.org. பார்க்கப்பட்ட நாள் 2016-11-22.