இலவுரா தான்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலவுரா தான்லி (Laura Danly) ஓர் அமெரிக்க வானியலாளரும் கல்வியியலாளரும் ஆவார். இவர் இப்போது இலாசு ஏஞ்சலீசில் உள்ள கிரிபித் வான்காணகத்தின் பொறுப்பாளராகப் பணிபுரிகிறார். இதற்கு முன்பு இவர் இயற்கை அறிவியல் தென்வர் அருங்காட்சியகத்தில் விண்வெளி அறிவியல் துறைத்தலைவராக இருந்துள்ளார்.

இதற்கும் முன்பு, இவர் தென்வர் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும் பொமோனா கல்லூரியில் வருகைதரு உதவிப் பேராசிரியராகவும் இருந்தார். இப்பதவிகளை வகித்தபோது, இவர் வானியல், தொல்வானியல், சூரிய இயற்பியல், வான் ஒளிப்படவியல், வானுயிரியல் ஆகிய புலங்களுக்கான பாடத்திட்டங்களை உருவாக்கினார்.

இவர் மேரிலாந்து, பால்டிமோரில் உள்ள விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். இங்கே கல்விசார்ந்த திட்ட அறிவியலாளராகவும் உதவி வானியலாளராகவும் அபுள் ஆய்வுறுப்பினராகவும் பல பதவிகளில் இருந்துள்ளார். மேலும் இவர் தன் முதுமுனைவர் ஆய்வையும் விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்திலேயே மேற்கொண்டார்.

வானியலாளராக இவர் பரந்து விரிந்த நோக்கீட்டுப் பட்டறிவு வாய்ந்தவர். இவர் இவர் அபுள் விண்வெளித் தொலைநோக்கி வழியாக 441 புற ஊதாக் கதிர் நோக்கீடுகளைச் செய்துள்ளார். மேலும், ஒளியியல், கதிர்வீச்சு நோக்கீடுகளைப் பல் நூறுமணி நேரத்துக்கு கிட் தேசிய வான்காணகத்திலும் மெக்டொனால்டு வான்காணகத்திலும் செரோ தோலோலோ அமெரிக்க வான்காணகத்திலும் தேசியக் கதிர்வீச்சு வான்காணகத்திலும் மேற்கொண்டுள்ளார்.

இவர் 1991 இல் மகளிர் அறிவியல் பேரவையை உருவாக்கி இளம்பெண்கள் அறிவியலில் பணிமேற்கொள்ள ஊக்கப்படுத்தினார். அவர்கள் பல்வேறு துறைகளில் பணிபுரியும் சிறந்த பெண் அறிவியலாளர்களையும் பொறியாளர்களையும் சந்தித்து தாம் மேற்கொள்ள விரும்பும் அறிவியல் புலங்களைப் பற்றி அளவளாவ ஏற்பாடுகள் செய்தார்.[1] In 1993, Danly co-authored The Baltimore Charter for Women in Astronomy[2] வானியலில் சிறுபான்மையினராக உள்ள மகளிரின் அக்கறைகளையும் இள மகளிருக்கு அறிமுகப்படுத்தினார்.[3]

இவர் இயற்பியலில் இளங்கலைப் பட்டத்தை யேல் பல்கலைக்கழகத்திலும் வானியலில் முனைவர் பட்டத்தை விசுகான்சின்-மேடிசன் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.

புடவி (The Universe), புடவி எப்படி வேலை செய்கிறது ( How the Universe Works )ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் விருந்து அறிவியலாளராக தோன்றி நடித்துள்ளார்.[4]

இவர் 2009 அக்தோபர் 21 இல், காசினி-ஐகன்சு இலக்குத் திட்டத்தில் இருந்து காரிக்கோள் பயணத்திட்டம் வரையிலான அண்மை விண்வெளி ஆய்வில் ஈடுபட்ட அறிவியலாளர்களை அறிமுகப்படுத்தி விரிவுரை ஆற்றியுள்ளார். .[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலவுரா_தான்லி&oldid=2693327" இருந்து மீள்விக்கப்பட்டது