இலவாசியே-இலப்பிலாசு விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்பவேதியியலில் இலவாசியே-இலப்பிலாசு விதி (Lavoisier-Laplace law) அல்லது இலப்பிலாசு விதி என்பது வேதி வினையின் போது தோன்றும் வெப்பம் (heat evolved) அல்லது ஏற்கும் வெப்பம் (heat absorbed), அவ்வினை எதிர்த் திசையில் நிகழும் போது ஏற்கப்படுகிறது அல்லது வெளிப்படுகிறது. அந்துவான் இலவாசியே, பியர் சிமோன் இலப்லாசு ஆகியோர் 1780 ஆம் ஆண்டில் இவ்விதியை அறிமுகப்படுத்தினர்.

ஒரு கூட்டுப் பொருளிலிருந்து, அதிலுள்ள தனிமங்களைப் பெறத் தேவைப்படும் வெப்ப அளவு, அத்தனிமங்களைக் கொண்டு அந்தக் கூட்டுப் பொருளைப் பெறத் தேவைப்படும் வெப்ப அளவிற்குச் சமமாக இருக்கும். கூட்டுப் பொருளைப் பெற அதிக வெப்பம் தேவை என்றால் அதன் நிலைப்புத் தன்மை (stability) அதிகமாக இருக்கும்.

A + B ----> AB  : ΔH = - ஏற்றுக் கொண்ட வெப்ப அடக்கம்
AB ----> A + B  : ΔH = + வெளிப்படும் வெப்ப அடக்கம்

எடுத்துக் காட்டு,

Cs + O2(g) ---> CO2(g) :ΔH -395.5 kJ ,எதிர் திசையில்
CO2(g) ----> C(s) + O2(g) : ΔH +395.5 kJ

உசாத்துணை[தொகு]

  • Principles of Physical Chemistry - Puri, Sharma & Pathania