உள்ளடக்கத்துக்குச் செல்

இலலிதா லஜ்மி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலலிதா லஜ்மி
பிறப்பு(1932-10-17)17 அக்டோபர் 1932
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (நவீன மேற்கு வங்காளம், இந்தியா)
இறப்பு13 பெப்ரவரி 2023(2023-02-13) (அகவை 90)
தேசியம் இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்சர் ஜே, ஜே கலைப்பள்ளி, மும்பை
பணிஓவியர்
செயற்பாட்டுக்
காலம்
1960–2023
பிள்ளைகள்கல்பனா லஜ்மி உட்பட இருவர்
உறவினர்கள்குரு தத் (சகோதரர்)
இயக்குநர் ஆத்ம ராம் (சகோதரர்)

இலலிதா லஜ்மி (Lalita Lajmi) (17 அக்டோபர் 1932-13 பிப்ரவரி 2023) ஓர் இந்திய ஓவியர் ஆவார்.[1][2][3][4] இவர் இகலையை சுயமாகக் கற்றுக்கொண்டார். ஆனால் குழந்தையாக இருந்தபோது பாரம்பரிய நடனத்தை மிகவும் விரும்பினார். இவர் இந்தித் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் மற்றும் நடிகருமான குரு தத்த்தின் சகோதரி ஆவார். 1994 ஆம் ஆண்டில், இலண்டனில் உள்ள நேரு மையத்தில் இந்திய உயர் ஆணையர் கோபாலகிருஷ்ண காந்தி ஏற்பாடு செய்த குரு தத் திரைப்பட விழாவிற்கு இவர் அழைக்கப்பட்டார். இவரது சகோதரர், சத்யஜித் ரே மற்றும் ராஜ் கபூர் தயாரித்த இந்தியத் திரைப்படங்களும் இவரது படைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தின.

தனது குடும்பம் நடுத்தரமானது என்பதால் தன்னால் பாரம்பரிய நடன வகுப்புகளில் சேர முடியவில்லை என்று ஒரு நேர்காணலில் கூறினார். கொல்கத்தாவைச் சேர்ந்த வணிகக் கலைஞரான அவரது மாமா பி. பி. பெனகல், இவருக்கு ஒரு வண்ணப்பூச்சு பெட்டியை பரிசாக அளித்தார். அதைக் கொண்டு இலலிதா தீவிரமாக ஓவியம் வரையத் தொடங்கினார். பின்னர் இவர் கலைப் பள்ளியில் கற்பிக்கத் தொடங்கினார். அங்கே மாற்றுத் திறன் மற்றும் பின்தங்கிய குழந்தைகளுடன் பணியாற்றினார். இவரது முதல் ஓவியம் ஜெர்மன் கலை சேகரிப்பாளர் டாக்டர் ஹெய்ன்ஸ்மோடிடம் வெறும் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அவர் அதற்கு ஈடாக ஜெர்மன் கலைஞர்களின் படைப்புகள் அல்லது சில புத்தகங்களை இலலிதாவிற்குக் கொடுத்தார்.

இவர், தனது ஓவியங்களில் பெண்களை உறுதியானவர்களாகவும் ஆக்ரோஷமானவர்களாகவும் வரைந்தார். காளி மற்றும் துர்க்கை ஆகிய கடவுள்களின் உருவங்களையும் இவர் தனது படைப்புகளில் பயன்படுத்தினார். இவர் வரைந்த "தி ஃபேமிலி சீரிஸ்" என்ற ஓவியத் தொடர் மும்பையின் கெமோல்ட் கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.[5]

சொந்த வாழ்க்கை

[தொகு]

கார்வாரில் இருந்த இவரது பெற்றோர் பின்னர், பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர். இலஜ்மியின் தந்தை ஒரு கவிஞர் மற்றும் அவரது தாயார் ஒரு பன்மொழி எழுத்தாளர்.[6] இலலிதா போவானிபூரில் வளர்ந்தார்.

திருமணம்

[தொகு]

இலலிதா கேப்டன் கோபி லஜ்மி என்பவரை மணந்தார்.[7] இவர்களுக்கு [[கல்பனா லஜ்மி] என்ற ஒரு மகள் பிறந்தார். இவர் இந்தித் திரைப்பட இயக்குனராக இருந்தார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

இவரது மாமா பி. பி. பெனகல் இவரது சிறுவயதில் இவரை ஓவியம் வரையச் செய்து அதை ஒரு ஓவியப்போட்டிக்கு அனுப்பி வைத்தார். அதில் இவருக்கு முதல் பரிசு கிடைத்தது. இதன் பின்னர் ஓவியம் வரைவதற்கான இவரது ஆர்வம் 1960 களில் வேகமாக வளர்ந்தது, அப்போதுதான் அவர் தீவிரமாக ஓவியம் வரையத் தொடங்கினார்.

காட்சிப் படுத்துதல்

[தொகு]

இவரது முதல் கண்காட்சி மும்பையில் உள்ளஜஹாங்கீர் கலைக்கூடத்தில் குழு கண்காட்சியாக நடந்தது. பின்னர், இதே இடத்தில் 1961 ஆம் ஆண்டில், இலலிதா தனது முதல் தனி கண்காட்சியையும் நடத்தினார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கேம்பியன் பள்ளி மற்றும் கான்வென்ட் ஆஃப் ஜீசஸ் அண்ட் மேரியில் கற்பித்த இலலிதா, பின்னர் தனது கலை முதுகலை பட்டப்படிப்பை முடிக்க ஜே. ஜே. கலைப்பள்ளியில் சேர்ந்தார். இலலிதா லஜ்மியின் படைப்புகள் புது தில்லி, தேசிய நவீன கலைக்கூடம் மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம் மற்றும் பிரித்தானிய அருங்காட்சியகம் ஆகியவற்றில் சேகரிக்கப்பட்டுள்ளன.[6]

திரைப்படங்கள்

[தொகு]

2007 ஆம் ஆண்டு ஆமிர் கானின் பாலிவுட் படமான தாரே ஜமீன் பர் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் தோன்றினார். மேலும் அமோல் பாலேக்கரின் நாடகத்திற்கான ஆடை வடிவமைப்பையும் செய்துள்ளார் அகாத் என்றா இந்தித் திரைப்படத்தின் வரைகலை பணிகளையும் செய்துள்ளார்.[8]

இறப்பு

[தொகு]

இலலிதா லஜ்மி தனது 90வது வயதில் 2023 பிப்ரவரி 13 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lalitha Lajmi | BIOGRAPHY". lalithalajmi.com. Archived from the original on 3 March 2018. Retrieved 3 March 2018.
  2. Kochhar, Ritika (2021-01-09). "Artist for all seasons: Lalitha Lajmi" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/society/artist-for-all-seasons-lalitha-lajmi/article33527166.ece. 
  3. "International Creative Art Centre " Lalita Lajmi". Icacart.com. Archived from the original on 13 August 2019. Retrieved 10 September 2017.
  4. "Artists". Archived from the original on 28 பெப்ரவரி 2008. Retrieved 8 பெப்ரவரி 2008.
  5. "Lalitha Lajmi". Saffronart. Retrieved 2019-03-12.
  6. 6.0 6.1 "Lalitha Lajmi | The Mind's Cupboards | Opening 28 November". mattersofart.blogspot.in. Retrieved 3 March 2018.
  7. "Lalitha Lajmi disapproved of Kalpana Lajmi living-in with Bhupen Hazarika: 'He was fit to be her father'". 22 September 2021.
  8. "Aghaat (1985) Cast and Crew". Gomolo.com. Archived from the original on 10 September 2017. Retrieved 10 September 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lalita Lajmi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இலலிதா_லஜ்மி&oldid=4231295" இலிருந்து மீள்விக்கப்பட்டது