இலந்தனம் இசுட்ரோன்சியம் கோபால்ட்டு பெர்ரைட்டு
இலந்தனம் இசுட்ரோன்சியம் கோபால்ட்டு பெர்ரைட்டு (Lanthanum strontium cobalt ferrite) என்பது LaxSr1-xCoyFe1-yO3 என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். இங்கு 0.1≤x≤0.4 மற்றும் 0.2≤y≤0.8 என்று பொருள் கொள்ளப்படுகிறது. இலந்தனம் இசுட்ரோன்சியம் கோபால்ட்டைட்டு பெர்ரைட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. பெர்ரைட்டு குழுவின் இலந்தனம் கோபால்ட்டைட்டிலிருந்து பெறப்பட்ட ஒரு குறிப்பிட்ட பீங்கான் ஆக்சைடு என்று வகைப்படுத்தப்படுகிறது. இலந்தனம்(III) ஆக்சைடு, இசுட்ரோன்சியம் ஆக்சைடு, கோபால்ட் ஆக்சைடு மற்றும் இரும்பு ஆக்சைடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு கட்டத்தில் இவ்வாக்சைடுகள் சேர்ந்து இலந்தனம் இசுட்ரோன்சியம் கோபால்ட்டு பெர்ரைட்டு உருவாகிறது.[1]
இலந்தனம் இசுட்ரோன்சியம் கோபால்ட்டு பெர்ரைட்டு கருப்பு நிறத்தில் உள்ளது. சிதைந்த அறுகோண பெரோவ்சுகைட்டு கட்டமைப்பில் படிகமாகிறது.[2] கலவையைப் பொறுத்து பல்வேறு வெப்பநிலைகளில் கட்ட மாற்றங்களுக்கு உட்படுகிறது. பொருள் ஒப்பீட்டளவில் அதிக மின்னணு கடத்துத்திறனும் (200+ சிமென்சு/செ.மீ) நல்ல அயனி கடத்துத்திறனும் (0.2 சிமென்சு/செ.மீ) கொண்ட கலப்பு அயனி மின்னணு கடத்தியாகவும் அறியப்படுகிறது.[3] பொதுவாக விகிதவியலுக்கு ஒவ்வாத சேர்மமான இச்சேர்மம் குறைந்த ஆக்சிசன் பகுதி அழுத்தங்களில் அல்லது கார்பன் போன்ற குறைக்கும் முகவரின் முன்னிலையில் அதிக வெப்பநிலையில் மேலும் குறைக்கப்படுகிறது.[4]
இடைநிலை வெப்பநிலை திட ஆக்சைடு எரிபொருள் மின்கலன்களில் எதிர்மின்வாய் பொருளாகவும், நேரடி கார்பன் எரிபொருள் மின்கலன்களில் நேர்மின்வாய் பொருளாகவும் பயன்படுத்த இலந்தனம் இசுட்ரோன்சியம் கோபால்ட்டு பெர்ரைட்டு ஆராயப்படுகிறது.[2]
காற்றில் இருந்து ஆக்சிசனைப் பிரிப்பதற்கான ஒரு சவ்வுப் பொருளாகவும் இச்சேர்மம் ஆராயப்படுகிறது. எ.கா. தூய்மையான எரிப்பு மின் உற்பத்தி நிலையங்களில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chang, Hun-Chieh; Tsai, Dah-Shyang; Chung, Wen-Hung; Huang, Ying-Sheng; Le, Minh-Vien (27 April 2009). "A ceria layer as diffusion barrier between LAMOX and lanthanum strontium cobalt ferrite along with the impedance analysis". Solid State Ionics 180 (4–5): 412–417. doi:10.1016/j.ssi.2009.01.018.
- ↑ 2.0 2.1 Kulkarni, A.; Ciacchi, F.T.; Giddey, S.; Munnings, C.; Badwal, S.P.S.; Kimpton, J.A.; Fini, D. (December 2012). "Mixed ionic electronic conducting perovskite anode for direct carbon fuel cells". International Journal of Hydrogen Energy 37 (24): 19092–19102. doi:10.1016/j.ijhydene.2012.09.141. Bibcode: 2012IJHE...3719092K.
- ↑ Badwal, SPS; Giddey, S; Munnings, C; Kulkarni, A (2014). "Review of Progress in High Temperature Solid Oxide Fuel Cells". Journal of the Australian Ceramics Society 50 (1).
- ↑ Munnings, C.; Kulkarni, A.; Giddey, S.; Badwal, S.P.S. (August 2014). "Biomass to power conversion in a direct carbon fuel cell". International Journal of Hydrogen Energy 39 (23): 12377–12385. doi:10.1016/j.ijhydene.2014.03.255. Bibcode: 2014IJHE...3912377M.
- ↑ "Ceramic Tubes Could Cut Greenhouse Gas Emissions From Power Stations". ScienceDaily (in ஆங்கிலம்). Retrieved 2020-10-08.
வெளி இணைப்புகள்
[தொகு]- LSCF supplier and info American Elements