உள்ளடக்கத்துக்குச் செல்

இலத்திகா காட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலத்திகா காட்
பிறப்பு(1948-02-20)20 பெப்ரவரி 1948
ஐக்கிய மாகாணம், இந்தியா
இறப்பு25 சனவரி 2025(2025-01-25) (அகவை 76)
செய்ப்பூர், இராசத்தான், இந்தியா
தேசியம் இந்தியா
கல்விதி டூன் பள்ளி
பனாரசு இந்து பல்கலைக்கழகம்
பரோடா கலைக் கல்லூரி
சிலேடு நுண்கலைக் கல்லூரி
அறியப்படுவதுசிற்பம்
விருதுகள்இலலித கலா அகாதமி விருது, பெய்ஜிங் கலை விருது

இலத்திகா காட் (Latika Katt) (20 பிப்ரவரி 1948-25 ஜனவரி 2025) கல் சிற்பம், உலோக வார்ப்பு மற்றும் வெண்கலச் சிலை வார்ப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஓர் இந்திய சிற்பி ஆவார்.[1] வாரணாசியின் தசாவ்மத் படித்துறைப் பகுதியில் "மகர சங்கராந்தி" என்ற தலைப்பில் வடிவமைத்த வெண்கலப் படைப்புக்காக பெய்ஜிங் கலை விருதை வென்றார்.[2][3]

வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

லத்திகா காட், தேராதூனில் உள்ள ஆண்களுக்கான தி டூன் பள்ளியில் பயின்றார். ஆண் சிறுவர்கள் படிக்கும் பள்ளியில் ஒரு பெண்ணாக படித்தது தனது பிற்காலங்களில் தன்னிடம் நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்ததாக ஒரு நேர்காணலில் கூறினார்.[4] வடோதராவிலுள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் நுண்கலை பிரிவில் இளங்கலை படிப்பைத் தொடர பரோடா கலைக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு இவர் 1971 இல் முதல் வகுப்பு கௌரவத்துடன் பட்டம் பெற்றார்.[5] 1981 ஆம் ஆண்டில் இலண்டனின் இலண்டன் பல்கலைக்கழகத்தின் மாநிலக் கலைப்பள்ளியில் சேருவதற்காக உதவித்தொகை இவருக்கு வழங்கப்பட்டது.[6]

1970 களில் மாட்டு சாணம்த்திலிருந்து தயாரிக்கப்பட்ட சோதனை பணிகளுக்காக இவர் முதன்முதலில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றார். ஏனெனில் இவரிடம் வேறு எந்தப் பொருளைக் கொண்டும் முயற்சியை மேற்கொள்ள நிதி வசதி ஏதுமில்லை.[7] இவரது திறமையை அபோதைய பிரதமர் இந்திரா காந்தி ஒரு கலை கண்காட்சியின் போது கண்டறிந்தார். பின்னர் அவர் சிற்பத்தை ஒரு தொழிலாக எடுத்து பணியாற்ற இவரை ஊக்குவித்தார்.[8]இவர் ஆகுஸ்ட் ரொடானின் பெரும் ரசிகர் ஆவார். மேலும் இயற்கையை தனது கருப்பொருளாகப் பயன்படுத்தினார்.[9] இயற்கையுடனான இவரது ஆர்வமும் தொடர்பும் தாவரவியலாளரான இவரது தந்தையிடமிருந்து பெறப்பட்டது.[7] 1981 ஆம் ஆண்டு தொடங்கி பல ஆண்டுகளாக ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் பனாரசு இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்பித்த இவர், ஜாமியா மில்லிய இஸ்லாமியாவில் நுண்கலை துறையின் தலைவராகவும் இருந்தார்.[10] தனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மாணவர்கள் போன்ற உண்மையான மனிதர்களைக் கொண்டே தனது பெரும்பாலான சிற்பங்களை வடித்தார்.[11]

இலத்திகா காட், தில்லி மற்றும் வாரணாசி ஆகிய இரு இடங்களிலும் வசித்து வந்தார்.[12] தனது 76வது வயதில் 2025 ஜனவரி 25 அன்று இறந்தார்.[13]

கண்காட்சிகள்

[தொகு]
இலண்டனிலுள்ள இலத்திகா காட் வடிவமைத்த ஜவகர்லால் நேருவின் மார்பளவு சிலை (1991)

இவரது படைப்புகளைக் காட்டும் சில கலை கண்காட்சிகள்: [14]

  • பாரிஸ் பைனாலே, நவீன கலை அருங்காட்சியகம், பாரிசு.
  • மாஸ்கோ, லெனின்கிராட் மற்றும் தாஷ்கண்டில் நடத்தப்பட்ட கண்காட்சிகள்.
  • த செல்ஃப் அண்ட் த வேர்ல்ட்: என்ற பெயரில் தில்லியிலுள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் இந்திய பெண் கலைஞர்களின் கண்காட்சி.[15]
  • கெமோல்ட் கலைக்கூடம் மற்றும் வூட்ஸ்டாக் கலைக்கூடம், இலண்டன்.
  • மும்பையின் சிம்ரோசா கலைக்கூடத்தில் உருகிய நிலப்பரப்புகள். [16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.karmayog.in/events/sites/default/files/Final_Catalog.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "In the News". Artnewsnviews.com. Archived from the original on 22 January 2011. Retrieved 2012-03-27.
  3. "Indian wins Beijing Art Biennale award". Zeenews.india.com. Retrieved 2012-03-27.
  4. "Material Queen". Indian Express. 2012-03-22. Retrieved 2012-03-27.
  5. "Ms. Latika Katt, Department of Fine Arts". Old.jmi.ac.in. Archived from the original on 13 July 2012. Retrieved 2012-03-27.
  6. "Latika Katt - Gallerie Alternatives" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-04-06.
  7. 7.0 7.1 "Material Queen". Indian Express. 2012-03-22. Retrieved 2012-03-27."Material Queen". Indian Express. 22 March 2012. Retrieved 27 March 2012.
  8. Kusumita Das (2011-03-07). "An iron will gets moulded in stone". The Asian Age. Retrieved 2012-03-27.
  9. Nair, Uma (2018-12-20). "Latika Katt's talking heads" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/art/latika-katts-talking-heads/article25788094.ece. 
  10. "Ms. Latika Katt, Department of Fine Arts". Old.jmi.ac.in. Archived from the original on 13 July 2012. Retrieved 2012-03-27.
  11. . 
  12. "IBNLive". Features.ibnlive.in.com. Archived from the original on 8 July 2012. Retrieved 2012-03-27.
  13. Latika Katt, one of India’s most prolific sculptors, passes away at 76
  14. "Latika Katt - Gallerie Alternatives" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-04-06."Latika Katt - Gallerie Alternatives". Retrieved 6 April 2019.
  15. "Voyage of self discovery". India Today. 1997-04-30.
  16. "The Exhibition". Cymroza Art Gallery. Archived from the original on 23 September 2015. Retrieved 5 July 2015.
  • Sheth, Pretima. Dictionary of Indian Art & Artist. Mapin publishing.

மேலும் வாசிக்க

[தொகு]
  • Kanwar, Raj (April 2017), The Art of Height, vol. XLIXI, The Rose Bowl. Newsletter of The Doon School Old Boys' Society, pp. 38–41

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலத்திகா_காட்&oldid=4234358" இலிருந்து மீள்விக்கப்பட்டது