இலதோகா லாகசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலதோகா லாகசு (Ladoga Lacus) என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் எண்ணற்ற ஐதரோகார்பன் ஏரிகளில் இதுவும் ஒரு ஏரியாகும் [1]. 74.8° மற்றும் 26.1° மே என்ற அடையாள ஆள்கூறுகளில் தோராயமாக 110 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக டைடனின் வடதுருவத்தில் இந்த ஏரி காணப்படுகிறது[2].நீர்ம ஐதரோகார்பன்களான திரவ ஈத்தேனும் மீத்தேனும் [3] சேர்ந்து இந்த ஏரியை உருவாக்கியுள்ளன. கேசின் விண்வெளி ஆய்வு விண்கலம் 2004 ஆம் ஆண்டில் இந்த ஏரியைக் கண்டுபிடித்தது. பூமியில் உள்ள உருசியாவின் இலதோகா ஏரியின் நினைவாக டைட்டனின் இந்த ஏரிக்கு இலதோகா லாகசு என்று பெயரிடப்பட்டது .

மேற்கோள்கள்[தொகு]

  1. Map of the liquid bodies in the north polar region of Titan.
  2. "Ladoga Lacus". USGS planetary nomenclature page. USGS. பார்க்கப்பட்ட நாள் 2015-03-25. {{cite web}}: External link in |work= (help)
  3. Coustenis, A.; Taylor, F. W. (21 July 2008). Titan: Exploring an Earthlike World. World Scientific. பக். 154–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-981-281-161-5. இணையக் கணினி நூலக மையம்:144226016. https://books.google.com/books?id=j3O47dxrDAQC&pg=PA154. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலதோகா_லாகசு&oldid=2173866" இலிருந்து மீள்விக்கப்பட்டது