இலண்டன் தாக்குதல், ஜூன் 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலண்டன் தாக்குதல், ஜூன் 2017
இலண்டன் பாலம்
இடம்இலண்டன், ஐக்கிய ராச்சியம்
நாள்3 சூன் 2017; 6 ஆண்டுகள் முன்னர் (2017-06-03)
22:07 - 22:15 (பிரிதானிய கோடைக்கால நேரம்)
தாக்குதல்
வகை
வாகனத் தாக்குதல் மற்றும் கத்திக்குத்து
ஆயுதம்வாகனம் மற்றும் கத்தி
இறப்பு(கள்)10 (7 பொதுமக்கள், 3 தாக்குதல்தாரிகள்)
காயமடைந்தோர்48
நோக்கம்Islamic extremism

மத்திய இலண்டன் பகுதியில் 3 ஜூன் 2017 அன்று மூவரால் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. பிரித்தானிய கோடைக்கால நேரப்படி 22:08 மணிக்கு இத்தாக்குதல் நடைபெற்றது. காவல் துறையினரால் தாக்குதல்தாரிகள் மூவரும் கொல்லப்பட்டனர்.[1]

தாக்குதல்[தொகு]

இலண்டன் பாலத்தில் சென்ற வெள்ளை நிற வாகனம் பாதசாரிகளின் மேல் மோதியது. அதிலிருந்த தீவிரவாதிகள் மூவர் பரோ சந்தைப் பகுதியில் கத்தியுடன் ஓடி இது அல்லாவுக்காக எனக் கோஷமிட்டபடி பாதசாரிகளைக் குத்தினர்.[2][3][4] இத்தாக்குதலில் எழுவர் கொல்லப்பட்டனர் 48 பேர் காயமடைந்தனர். இலண்டன் காவல்துறை இலண்டன் பாலம் மற்றும் பரோ சந்தைப் பகுதியில் நடந்த இரு தாக்குதல் நிகழ்வுகளையும் தீவிரவாதத் தாக்குதல் எனக் குறிப்பிட்டனர்.

பாதிக்கப்பட்டோர்[தொகு]

எழுவர் கொல்லப்பட்டனர், 48 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோரில் ஆஸ்திரேலியர் ஒருவரும் இரு நியூஸிலாந்துக்காரரும் நான்கு பிரான்ஸ் நாட்டினரும் அடங்குவர்.[5][6][7]

தாக்குதல்தாரிகள்[தொகு]

மூன்று தாக்குதல்தாரிகளையும் காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களை அடையாளம் காணும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. தாக்குதல்தாரிகள் போலியான வெடிகுண்டு ஆடைகளை அணிந்திருந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு, 48 பேர் காயம்". பிபிஸி தமிழ். பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2017.
  2. Steve Almasy; Natalie Gallon. "Police: Reports Of ‘Multiple’ Casualties In 2 Terror Incidents In London". CBS Philadelphia. http://philadelphia.cbslocal.com/2017/06/03/london-bridge/. பார்த்த நாள்: 4 June 2017. "A witness of the London Bridge incident said the attackers were yelling, "This is for Allah."" 
  3. "London terror attack: London Bridge and Borough Market latest - at least two dead amid van attack, stabbings and gunfire". The Daily Telegraph. http://www.telegraph.co.uk/news/2017/06/03/london-bridge-incident-armed-police-respond-several-people-mown/. பார்த்த நாள்: 4 June 2017. "An eyewitness on London Bridge, told the BBC he saw three men stabbing people indiscriminately, shouting "this is for Allah"." 
  4. Mendick, Robert (4 June 2017). "'They shouted 'this is for Allah', as they stabbed indiscriminately' - How the London terror attack unfolded". The Telegraph, UK. பார்க்கப்பட்ட நாள் 4 June 2017.
  5. "London Bridge: Terrorists shot dead, at least six people killed, dozens injured after van, knife rampage". ABC News. 4 June 2017. பார்க்கப்பட்ட நாள் 4 June 2017. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  6. Bernard, Marie-Violette; Godon, Pierre (4 June 2017). "DIRECT. Attentat de Londres : quatre Français blessés, dont un grièvement, selon un nouveau bilan". Franceinfo (in French). பார்க்கப்பட்ட நாள் 4 June 2017. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)CS1 maint: unrecognized language (link)
  7. "London attack: Macron and Turnbull lead world condemnation". BBC News. 4 June 2017. பார்க்கப்பட்ட நாள் 4 June 2017. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  8. "லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் : எட்டு முக்கிய தகவல்கள்". பிபிஸி தமிழ். பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2017.