இலட்சுமி (2018 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலட்சுமி
சுவரொட்டி
இயக்கம்ஏ. எல். விஜய்
தயாரிப்புபிரதீக் சக்ரவர்த்தி
சுருதி நல்லப்பா
ஆர். இரவீந்திரன்
கதைஏ. எல். விஜய்
அஜயன்பாலா
இசைசாம் சி. எஸ்.
நடிப்புபிரபுதேவா
தீத்யா பாண்டே
ஐஸ்வர்யா ராஜேஷ்
சல்மான் யூசுப் கான்
ஒளிப்பதிவுநீரவ் ஷா
படத்தொகுப்புஆண்டோனி
தயாரிப்புபிரமோத் பிலிம்ஸ்
டிரைடெண்ட் ஆர்ட்ஸ்
வெளியீடுஆகத்து 24, 2018 (2018-08-24)
நேரம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இலட்சுமி 2018 இல் நடனத்தை முதன்மைப்படுத்தி வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். ஏ. எல் விஜய் எழுதி இயக்கியிருக்கின்றார். பிரபு தேவா, தித்யா பாண்டே, ஐஸ்வர்யா ராஜேஸ் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சல்மான் யூசுப் கான் மற்றும் கருணாகரன் துணை நடிகர்களாக நடித்துள்ளனர். பிரதிக் சக்ரவர்த்தி, சுருதி நல்லப்பா மற்றும் ஆர். ரவீந்திரனின் தயாரிப்பில் வெளியானது. இத் திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கின்றார். நீரவ் சா ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருக்கின்றார். 2018 ஆம் ஆண்டு ஆகத்து 24 இல் வரலட்சுமி விரத நாளில் இத்திரைப்படம் வெளிவந்தது.[1]

கதை[தொகு]

இலட்சுமி நடனத்தை உயர் மூச்சாகக் கொண்டு தனது தாயுடன் வசித்துவரும் ஒரு 10 வயது பெண்ணாவார். இவளது தாய் நடனத்தை வெறுக்கிறாள். தனது பள்ளிக்கு அருகிலிருக்கும் ஒரு விடுதியிலுள்ள விகே என்கிற விஜய் கிருட்டிணா என்பவருடன் நட்பு கொள்கிறாள். இலட்சுமியின் நடனத் திறமைக் கண்டு விகே வியக்கிறார். விகேயின் அன்பையும் அனுதாபத்தையும் இலட்சுமி பெறுகின்றாள். பிரைட் ஆப் இந்தியா நடன நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதே இலட்சுமியின் இலட்சியமாகும். சென்னையிலுள்ள ஒரு நடனப் பள்ளியில் தனது தாய்க்குத் தெரியாமல் விகேயை தனது தந்தை எனக்கூறி சேர்கிறாள். ஒரு கட்டத்தில் விகேவுக்கு இலட்சுமி தனது முன்னால் காதலி நந்தினியின் மகள் எனத் தெரிய வருகின்றது. விகே 2005 இல் பிரைப் ஆப் இந்தியா நடன நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளர் என்பதும் விபத்தால் இறுதி போட்டியில் கலந்து கொள்ள முடியாமற்றுகின்றனர் படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்[தொகு]

 • பிரபு தேவா - விஜய் கிருட்டிணா என்கிற “விகே”
 • தித்யா பாண்டே - இலட்சுமி
 • ஐஸ்வர்யா ராஜேஷ் - நந்தனி (இலட்சுமியின் தாய்)
 • சல்மான் யூசுப் கான் - யூசுப் கான்
 • கருணாகரன் - அழகு
 • கோவை சரளா - சரஸ்வதி, இலட்சுமியின் பள்ளி முதல்வர்
 • சாம்ஸ் - பேருந்து நடத்துனர்
 • அக்சத் சிங் - இலட்சுமியின் நண்பன்
 • சோபியா - இலட்சுமியின் நடன பயிற்றுவிப்பாளர்
 • ஜீத் தாஸ் - சோபியாவின் மகன்
 • சாம் பால் - சேனல் 99 இன் தலைவர்

தயாரிப்பு[தொகு]

2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஏ. எல் விஜய் மற்றும் பிரபு தேவா புதிய திரைப்படத்தில் இணைவதாக தகவல் வெளியானது. இத்திரைப்படம் தேவி (2016) திரைப்படத்தின் தொடர்ச்சியில்லை என மறுத்து அறிக்கைகள் வெளியாகின. 22 செப்டம்பர் 2017 திரைப்பட பணிகள் ஆரம்பித்தன. ஐஸ்வர்யா ராஜேஸ் முக்கிய கதா பாத்திரத்தில் நடிப்பதற்கும், நிரவ் சா ஒளிப்பதிவாளராகவும், சாம் சி. எஸ் மற்றும் அந்தோனி முறையே இசையமைப்பாளராகவும், படத்தொகுப்பாளராகவும் ஒப்பந்தமானார்கள். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன், பிரமோத் பிலிம்ஸ் சுருதி நல்லப்பா ஆகியோர் தயாரிப்பில் வெளிவந்தது.

இத்திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தித்யா பாண்டே முன்னணி பாத்திரமேற்றுள்ளார். இவர் இந்தி தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியான சூப்பர் டான்ஸ் நிகழ்ச்சியின் வாகையாளர் ஆவார். மேலும் அக்சத் சிங், ஜீத் தாஸ் ஆகிய சிறுவர்களும் நடித்துள்ளனர்.[2][3]

இத்திரைப்பட பணிகள் 2018 பெப்ரவரி 6 பூர்த்தியாகின. திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் பிரபு தேவாவின் ஓவியத்தை அவருக்கு பரிசளித்தனர்.[4]

வெளியீடு[தொகு]

12 கோடி ரூபாய் செலவில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.[5] 24 ஆகத்து 2018 இல் இத்திரைப்படம் வெளியானது.

ஒலிப்பதிவு[தொகு]

விக்ரம் வேதா திரைப்படத்திற்கு இசையமைத்த சாம் சி. எஸ். இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மதன் கார்க்கியின் ஏழு பாடல்களுக்கும் பாடலாசிரியராக பணி புரிந்திருக்கின்றார்.

இலட்சுமி திரைப்பட பாடல்கள்
எண். பாடல் பாடகர் பாடல் நீளம்
1. மொரக்கா மாட்ராக்கா உத்ரா உன்னிகிருஷ்ணா 03:05
2. ஆலா ஆலா ஜி. வி. பிரகாஷ் குமார், சைந்தவி 03:12
3. பப்பர பப்பா பிரினிதி, ரியாஸ், சிறீவிஷ்ணு, பிரணவ் 02:46
4. ட்ரீமி செல்லம்மா சைந்தவி 03:53
5. நில்லாதே நில்லாதே சத்ய பிரகாஷ் 03:30
6. இறைவா இறைவா சாம் சி எஸ் 04:19
7. தி ரிதம் ஆப் தீம்ஸ் ஜசின் ஜார்ஜ் 04:02

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]