இலட்சுமி நரசிம்மா கோயில், மங்களகிரி
இலட்சுமி நரசிம்மா கோயில் | |
---|---|
![]() இலட்சுமி நரசிம்மா கோயில் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம்: | குண்டூர் மாவட்டம் |
அமைவு: | மங்களகிரி |
ஆள்கூறுகள்: | 16°26′13″N 80°34′12″E / 16.4370352°N 80.5701012°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கட்டட கலை |
கல்வெட்டுகள்: | திராவிட மொழிகள், சமசுகிருதம் |
இணையதளம்: | guntur |
இலட்சுமி நரசிம்ம கோயில் (Lakshmi Narasimha Temple) என்பது இந்தியாவில் உள்ள விஷ்ணுவின் எட்டு புனித இடங்களில் ஒன்றாகும். இது ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தின் மங்களகிரியில் எனும் புனித மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இம்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மூன்று தொடர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். மலையில் உள்ள பங்காள நரசிம்ம கோயில் மற்றும் மலையின் உச்சியில் உள்ள கண்டல நரசிம்ம கோயில் பிற கோயில்களாகும். இந்த கோயிலின் கோபுரம் தென்னிந்தியாவில் உள்ள கோயில்களில் காணப்படும் உயர்ந்த கோபுரங்களில் ஒன்றாகும். இதன் உயரம் 153 அடிகள் (47 m) அகலம் 49 அடிகள் (15 m). இக்கோபுரம் பதினொன்று மாடங்களைக் கொண்டுள்ளது. [1] [2]

மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Temple". http://www.mangalagiri.net/temple.html.
- ↑ "Mangalagiri Temple". National Informatics Centre இம் மூலத்தில் இருந்து 29 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160329122032/http://guntur.nic.in/mangalagiri_temple.html.