இலட்சுமி குன்வர்
| தனிநபர் தகவல் | |
|---|---|
| பிறப்பு | 29 மார்ச்சு 1989 நேபாளம் |
| விளையாட்டு | |
| விளையாட்டு | நீச்சல் |
| வகுப்பு | S6, SB5, SM6 |
| சங்கம் | நேபாள முதுகுத் தண்டு காயம் விளையாட்டு சங்கம் |
இலட்சுமி குன்வர் (Laxmi Kunwar) நேபாளத்தை சேர்ந்த ஒரு தடகள வீராங்கனை ஆவார். இவர் ரியோ டி செனிரோவில் நடைபெற்ற இணை ஒலிம்பிக் விளையாட்டுகளில் நீச்சல் போட்டியில் நேபாளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்த சிறப்பைப் பெற்ற முதல் நேபாள தடகள வீராங்கனை இலட்சுமி குன்வர் ஆவார்.[1][2][3][4] எசு6 வகை 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் பங்கேற்றார்.[5]
வாழ்க்கை
[தொகு]லட்சுமி குன்வர் 16 வயதில், நேபாளத்தில் உள்ள தனது கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் புல் சேகரிக்கும் போது ஒரு மரத்திலிருந்து கீழே விழுந்தார். முதுகுத் தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டு, இதன் காரணமாக இலட்சுமி குன்வரின் கால்கள் செயலிழந்தன.[6][7][8] குன்வர் தனது குறைபாட்டை சரிசெய்ய போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் பள்ளியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பின்னர் இவரது குடும்பம் காத்மாண்டுவிற்கு குடிபெயர்ந்தது, மேலும் திறமையான வணிக நிர்வாகத்தினால் தனது கல்வியைத் இவரால் தொடர்ந்து படிக்க முடிந்தது.[7] குன்வர் நேபாளத்தின் முதுகெலும்பு காயம் பாதித்தோர் விளையாட்டு சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1]
விளையாட்டு
[தொகு]குன்வர் 2010 ஆம் ஆண்டில் நீச்சல் விளையாட்டைத் தொடங்கினார். மேலும் சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்டத்தையும் விளையாடி வருகின்றார். ஆரம்பத்தில் நீச்சல் தனது மறுவாழ்வுக்கு உதவும் என்று கருதினார். ஆனால் பின்னர் போட்டித்தன்மையுடன் விளையாடத் தொடங்கினார்.[8]
2016 ஆம் ஆண்டு நேபாளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, குன்வர் கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் எசு6 வகை 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் பங்கேற்றார். தகுதிச் சுற்று போட்டியில் இரண்டாம் பிரிவில் ஆறாவது இடத்தைப் பிடித்தார்.[8] மிக மெதுவான நீச்சல் நேரத்திற்காக இலட்சுமி குன்வர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். குன்வருக்கு இவ்வாய்ப்பு சிறப்பு நுழைவு வாய்ப்பாக கிடைத்தது.[2]
2015 ஆம் ஆண்டில், ஐக்கிய இராச்சியத்தின் கிளாசுகோவில் நடைபெற்ற ஐபிசி நீச்சல் உலக வாகையாளர் போட்டியில் எசு 6 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் குன்வர் பங்கேற்றார். தகுதிச் சுற்றில் ஒன்றான பிரிவுப் போட்டியில் பங்கேற்றார்.[1]
விளையாட்டுகள் மூலமாகவும், பல்வேறு பன்னாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலமாகவும், குன்வர் நேபாளத்தில் இணை விளையாட்டுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உதவவும் விரும்புகிறார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் அவர்கள் எளிதாக அணுகக்கூடிய சூழலுக்காக நேபாளம் முழுவதும் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்துள்ளார்.[6]
2018 ஆம் ஆண்டில், சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் குன்வர் நேபாள முதுகுத் தண்டு காயம் பாதித்தோர் விளையாட்டு சங்கத்திற்காக பங்கேற்றார். இதில் நான்கு புள்ளிகளும் பெற்றார்.[9]
விருதுகள்
[தொகு]இலட்சுமி குன்வருக்கு 2017 ஆம் ஆண்டு நேபாளத்தில் உள்ள புத்தர் நல்லிணக்க அறக்கட்டளையால் புத்தர் நல்லிணக்க பிமலா ரெக்மி சமூக சேவை விருது வழங்கப்பட்டது.[10] ஒட்டுமொத்த சமூகத்திற்கும் குன்வரின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக இது வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 "INTERNATIONAL PARALYMPIC COMMITTEE". Retrieved 19 November 2019.
- 1 2 "Paralympic team to go to Rio today". https://thehimalayantimes.com/sports/paralympic-team-to-go-to-rio-today/. பார்த்த நாள்: 19 November 2019.
- ↑ "Paralympic Games 2016: day 10 – in pictures". Retrieved 19 November 2019.
- ↑ "Athletes taking part in Rio 2016 Paralympics seen off". kathmandupost.com (in English). Retrieved 2019-11-19.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Paralympic - KUNWAR Laxmi Swimming Nepal". 2016-11-02. Archived from the original on 2016-11-02. Retrieved 2019-11-19.
- 1 2 "Youth with disabilities demand accessible Nepal". Retrieved 19 November 2019.
- 1 2 "How wheelchair basketball helps Nepal's war victims". Retrieved 19 November 2019.
- 1 2 3 "Nepalese athletes aim to learn from Rio 2016". International Paralympic Committee (in ஆங்கிலம்). Retrieved 2019-11-19.
- ↑ "Wheelchair basketball: WWBA, WSA set title clash". Retrieved 19 November 2019.
- ↑ "Buddha Harmony Foundation Awards Honor talent". Retrieved 19 November 2019.