இலட்சுமிபாய் திலக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலட்சுமிபாய் திலக் (Lakshmibai Tilak) (1868-1936) இந்தியாவின் மகாராட்டிராவைச் சேர்ந்த மராத்தி எழுத்தாளர் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

இவரது காலத்தின் சமூக வழக்கப்படி, இவரது தனது 11 வயதில் பெற்றோர்களால் நாராயண் வாமன் திலக் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.

நாராயண் வாமன் திலக் ஒரு திறமையான மராத்தி கவிஞர். அவர் அடிப்படை மராத்தியைப் படிக்கவும் எழுதும் அளவிற்கு இவருக்கு முறையான அடிப்படைக் கல்வியைக் கொடுத்தார். தனது கணவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியபோது, முதலில் இவர் அதிர்ச்சியடைந்தார். இருப்பினும், படிப்படியாக, இறுதியில் இவரும், ஒரு கிறிஸ்துவத்திற்கு மாறினார். [1] முறையான கல்வி குறைவாக இருந்தபோதிலும், தனது சொந்த முயற்சியில் இவரும் சில சிறந்த கவிதைகளை இயற்றினார். மேலும், அவர் தனது சுயசரிதையை ஸ்மிருதிச்சித்ரே என்ற தலைப்பில் எழுதினார். இது மராத்தி இலக்கியத்தில் ஒரு தலைசிறந்த படைப்பாக மாறியது. சுயசரிதை 1934 -1937 காலப்பகுதியில் நான்கு பகுதிகளாக வெளியிடப்பட்டது. 1950ஆம் ஆண்டில், ஈ. ஜோசபின் இன்க்ஸ்டர் என்பவர் இதனை ஐ ஃபாலோ ஆஃப்டர் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். [2]

நாராயண் வாமன் திலக் மராத்தியில் இயேசு கிறிஸ்துவின் படைப்புகளை விவரிக்கும் "கிறிஸ்டாயனா" என்ற காவியத்தை இசையமைக்கத் தொடங்கினார். இருப்பினும், அதன் பத்து அத்தியாயங்களை முடித்த பின்னர் அவர் இறந்தார். இலட்சுமிபாய் அக்காவியத்தை 64 அத்தியாயங்களை சேர்த்து முடித்தார்.

நூல்பட்டியல்[தொகு]

முதன்மை[தொகு]

 • Tilak, Laksmibai. Smrtichitren. Serialized in the weekly Sanjivani.
 • Tilak, Laksmibai. Smrtichitren, Part 1. 15 December 1934.
 • Tilak, Laksmibai. Smrtichitren, Part 2. 1935.
 • Tilak, Laksmibai. Smrtichitren, Part 3, 1936.
 • Tilak, Laksmibai. Smrtichitren, Part 4. 15 December 1935. [or 1937?] 7 impressions up to 1953.
 • Tilak, Laksmibai. Smrtichitren. Abridged version, ed. K.B. Devale. Mumbai, 1940.
 • Tilak, Laksmibai. I Follow After. English tr. of Part 1 by E. Josephine Inkster. London / Madras: Oxford University Press, 1950. 353 pp.
 • Tilak, Laksmibai. Smrtichitren. Abridged version, Sahitya Akademi, Mumbai, 1958, 1968.
 • Tilak, Laksmibai. Sampurna Smrtichitren. Parts 1-4. Abhinava avrtti, ed. Ashok D. Tilak. 1st ed. 1973.
 • Tilak, Laksmibai. Smrtichitren. Abridged version, ed. H.A. Bhave, Varda Prakashan, Pune, 1987. Second impression / edition 1989.
 • Tilak, Laksmibai. Sampurna Smrtichitren. Parts 1-4. Abhinava avrtti, ed. Ashok D. Tilak. 2nd ed. 1989.
 • Tilak, Laksmibai and Devadatta Tilak. Sampurna Smritichitren. Ed. Ashok Devadatta Tilak. 3rd revised ed. Mumbai: Popular Prakashan, 1996. Containing all 4 parts, plus other scholarly apparatus (introduction, notes, index).
 • Tilak, Laksmibai. I follow after: An Autobiography. Delhi: OUP, 1998.
 • Tilak, Laksmibai. (Sanksipta) Smrtichitren. Ed. Devadatta Narayan Tilak. Mumbai: Popular Prakashan, 2000. (1st ed. 1958, 4th ed. 1996).
 • Tilak, Laksmibai. Bharali Ghagar. Ed. K.B. Devale. Mumbai, 1948.
 • Tilak, Laksmibai. 'Agadi Step by Step.’ Testimony of Lakshmibai Tilak in her own words. Ed. Ashok Devdatt Tilak. Nashik: Mayawati A. Tilak, Shantisadan, 1968.

இடைநிலை[தொகு]

 • George, Anthony D. Svatantryapurvakalatila Dharmantarita Khristi Vyaktinci Atmanivedane Samajika Ani Vangmayina Abhyasa. Mumbai: Mumbai Vidyapeeth, 2007. [PhD. submitted to Bombay University on Marathi converts to Christianity of the Pre-Independence (1947) era.]

மேற்கோள்கள்[தொகு]

 1. Lakshmibai Tilak, Agadi Step by Step. Testimony of Lakshmibai Tilak in her own words. Ed. Ashok Devdatt Tilak. Nashik: Mayawati A. Tilak, Shantisadan, 1968.
 2. For an excerpt, see "Archived copy". Archived from the original on 23 July 2011. பார்க்கப்பட்ட நாள் 2009-06-19.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமிபாய்_திலக்&oldid=3117564" இலிருந்து மீள்விக்கப்பட்டது