இலட்சுமண சேனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலட்சுமண சேனா
வங்காலத்தின் மன்னன்
ஆட்சிக்காலம் 1178–1206
முன்னையவர் பல்லால சேனா
பின்னையவர் விசுவரூப சேனா
வாழ்க்கைத் துணை தந்ரா தேவி
வாரிசு
விசுவரூப சேனா
கேசவ சேனா
தந்தை பல்லால சேனா
தாய் இரமாதேவி
பிறப்பு

லட்சுமண சேனா (Lakshmana Sena) ( ஆட்சி: 1178-1206), நவீன மொழிகளில் இலட்சுமண் சென் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது முன்னோடி அவரது தந்தை பல்லால் சென் என்பவராவார். [1] இலட்சுமண சேனா இந்திய துணைக் கண்டத்தில் இடைக்கால வங்காளப் பிராந்தியத்தின் சேனா வம்சத்தைச் சேர்ந்த நான்காவது மன்னர் ஆவார். இவரது ஆட்சி 28 ஆண்டுகள் நீடித்தது. மேலும், இந்திய துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதிகளுக்கு, குறிப்பாக வங்காளம், காமரூப் (தற்போதைய அசாம்), கலிங்கம் (தற்போதைய ஒடிசா), வாரணாசி, தில்லி, பீகார் போன்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தினார். முகம்மது பின் பக்தியார் கில்ஜியின் துருக்கியப் படையெடுப்பால் இவரது ஆட்சி முடிந்தது. [2]

இவரது தந்தை பல்லால சேனாவுக்குப் பிறகு இவர் பதவிக்கு வந்தார். இவரது ஆட்சியின் வரலாறு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இவரது காலத்தின் எழுத்துக்களில் இருந்து புனரமைக்கப்படவேண்டும். உமாபதி தார், ஷரன் மற்றும் தபக்த்-இ-நசிரி ஆகியப் புத்தகங்களைத் தவிர, இவரைப் பற்றிய தகவல்கள் வேறு எதிலும் இல்லை. இவர் ஜெயச்சந்திர மன்னரை தோற்கடித்தார். இவரது ராஜ்யத்தின் தலைநகரம் பிக்ராம்பூரில் இருந்தது. இவர் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். மேலும் தனது தந்தையால் முழுமையடையாமல் எழுதப்பட்ட ஆட்புதா சாகர் என்ற ஒரு புத்தகத்தின் மீதிப் பகுதியை எழுதினார். [3]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமண_சேனா&oldid=3089030" இருந்து மீள்விக்கப்பட்டது