இலடாக்கு மாணவர்கள் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கம்
| வகை | அரசு சாரா அமைப்பு |
|---|---|
| நிறுவுகை | 1988 |
| நிறுவனர்(கள்) | சோனம் வாங்சூக் |
| தலைமையகம் | லே (நகரம்), இலடாக்கு, இந்தியா |
| இணையத்தளம் | www |
இலடாக்கு மாணவர்கள் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கம் (Students' Educational and Cultural Movement of Ladakh) என்பது இந்தியாவின் இலடாக்கில் உள்ள லே நகரத்தை தளமாகக் கொண்ட ஓர் அரசு சாரா இந்திய அமைப்பாகும். இதனை 1988ல் நிறுவியவர் சோனம் வாங்சூக் ஆவார்.
வரலாறு.
[தொகு]இலடாக்கு மாணவர்கள் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கம் 2017 ஆம் ஆண்டில் இலடாக்கின் கல்வி முறையை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட ஓர் அமைப்பாகும். பல்கலைக்கழகத்திலிருந்து திரும்பிய இளம் இலடாக்கிய மாணவர்கள் குழு, நவீன கல்வியில் இளைய தலைமுறையின் பிரச்சினைகள், அவர்களின் கவனம் பெறாமல் இருந்தது மற்றும் பண்பாட்டுக் குழப்பம் ஆகியவற்றைப் புரிந்துகொண்டனர். அரசு பள்ளி அமைப்பை சீர்திருத்துவது, கிராமப்புற மாணவர்களுக்கு அவர்களின் கல்வியில் உதவுவது, பொருத்தமற்ற மற்றும் உணர்ச்சியற்ற பள்ளிப் படிப்பிலிருந்து எழும் பிரச்சினைகளுக்கு இளைஞர்களை விழிப்படையச் செய்வது, தொடர்புடைய காணொலிகள் மற்றும் வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பது மற்றும் சூரிய வெப்பமுடைய சூழல் நட்பு கட்டிடங்களை வடிவமைத்து கட்டுவது ஆகியவை இவர்களின் செயல்பாடுகளில் அடங்கும்.[1][2]
பெய் வளாகம்
[தொகு]
இலடாக்கு மாணவர்கள் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்க வளாகம், லேவிலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள சிந்து சமவெளியில் உள்ள பெய் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. 1994 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டில் தலாய் லாமா வளாகத்தை திறந்து வைத்தார்.
எளிமையான, குறைந்த விலை பாரம்பரிய நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த வளாகத்தில் இப்போது மூன்று குடியிருப்பு வீடுகள், 20 சிறிய அறை அறைகள் மற்றும் ஒரு பெரிய பள்ளி கட்டிடம் ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் சூரிய வெப்பத்தால் இயங்குபவையாகும். மாற்று எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தும் நுட்பங்களை உருவாக்குவதே இலடாக்கு மாணவர்கள் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கப் பணியின் ஒரு பகுதியாகும். இலடாக்கில் ஆண்டுக்கு 300 நாள்களுக்கும் மேற்பட்ட வெயில் நாட்கள் உள்ளன. எனவே சூரியன் நம்பகமான ஆற்றல் மூலமாகவும் புதைபடிவ எரிபொருள்களுக்கு மாற்றாகவும் உள்ளது.[3] இந்த வளாகத்தில் சுமார் 70 மாணவர்கள் மற்றும் ஒரு சில ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளனர், அவர்கள் அங்கு வசித்து வருகின்றனர். வேலை செய்கின்றனர். படித்து வருகின்றனர். இந்த வளாகம் சனநாயக அடிப்படையில் மாணவர்களால் பராமரிக்கப்பட்டு, பெருமளவில் நடத்தப்படுகிறது.
முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள்
[தொகு]- சோனம் வாங்சூக், நிறுவனர்
- இசுடான்சின் தொர்செய், படத்தயாரிப்பாளர் [4]
நூலியல்
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]
இலடாக்கு மாணவர்கள் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.