இலங்கை வெள்ளைக் கண்ணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை வெள்ளைக் கண்ணி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: சோசுடெரோபிடே
பேரினம்: சோசுடெரோப்சு
இனம்: சோ. சிலோனென்சிசு
இருசொற் பெயரீடு
சோசுடெரோப்சு சிலோனென்சிசு
கோடுசுஒர்த், 1872

இலங்கை வெள்ளைக் கண்ணி (Sri Lanka white-eye)(சோசுடெரோப்சு சிலோனென்சிசு) என்பது வெள்ளைக் கண் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய குருவி சிற்றினம் ஆகும். இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது காடு, தோட்டங்கள் மற்றும் பயிரிடப்படும் பகுதிகளில், முக்கியமாக மலைப்பகுதிகளில் வசித்து இனப்பெருக்கம் செய்யவல்ல.

வகைப்பாட்டியல்[தொகு]

இலங்கையின் பிற சிற்றினங்களான இந்திய வெள்ளைக் கண்ணியின் (ஜோசுடெரோப்சு பால்பெப்ரோசசு) சகோதர இனம் அல்ல என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. மேலும் இந்த ஆய்வானது, பூமியில் உள்ள அனைத்து வெள்ளை-கண்ணிகளின் தோற்றத்திற்கு வழிவகுத்த வேர் சிற்றினம் இலங்கை வெள்ளைக் கண்ணி என்றும் பரிந்துரைத்தது.[2] இது வெள்ளை கண்ணி தோற்றம் குறித்து மேலும் கேள்விகளை எழுப்புகிறது.

விளக்கம்[தொகு]

இந்திய வெள்ளைக் கண்ணியுடன் ஒப்பீடு (மேலே)

உடலமைப்பு[தொகு]

இலங்கை வெள்ளைக் கண்ணி, இந்திய வெள்ளைக் கண்ணியை விடச் சற்று பெரியது (சுமார் 11 செ.மீ. நீளம்). இது 4000 அடிக்கு மேல் காணப்படும். உடலின் மேல் பகுதிகளும் கழுத்தின் பக்கங்களும் அடர் ஆலிவ்-பச்சை நிறத்தில் இருக்கும். உச்சி மற்றும் நெற்றி கருமையாகத் தோன்றும். இதே வேளையில் பின்தொடைப் பகுதி வெளிர் பச்சை நிறத்தில் காணப்படும். இறக்கைகள் மற்றும் வாலின் பின்புறங்கள் பச்சை நிறத்துடன் பழுப்பு நிற விளிம்புடன் உள்ளன. கண்ணைச் சுற்றி சிறிய வெள்ளை இறகுகளின் வழக்கமான கண் வளையம் உள்ளது. லோர்ஸ் இருட்டாக உள்ளது. கண்ணுக்குக் கீழே ஒரு இருண்ட கோடு உள்ளது. கன்னம், தொண்டை மற்றும் மார்பகத்தின் மேல் பகுதிகள், தொடைகள் மற்றும் குதம் போன்ற பகுதிகள் பச்சை-மஞ்சள் நிறத்தில் இருக்கும். வயிற்றுப் பகுதி சாம்பல் கலந்த வெள்ளை நிறத்திலும் இருண்ட அலகின் கீழ்த் தாடை வரை ஒரு மெல்லிய தளம் உள்ளது. கால்கள் அடர் வண்ணத்திலும் கருவிழி மஞ்சள் முதல் சிவப்பு-பழுப்பு நிறமாகக் காணப்படும்.[3]

இலங்கை வெள்ளைக் கண்ணியின் பெரிய அளவு, மந்தமான பச்சை மற்றும் மார்பகத்தின் மீது அதிக மஞ்சள் நிறத்தால் பரவலான இந்திய வெள்ளை கண்ணியிலிருந்து வேறுபடுத்தலாம். இது கண்ணுக்கும் அலகுக்கும் இடையில் ஒரு இருண்ட இணைப்பு உள்ளது.

இது சமூக வாழ்க்கை வாழக்கூடிய வகையில், பெரிய மந்தைகளை உருவாக்குகிறது. இது இனப்பெருக்க பருவத்தின் போது மட்டுமே சிதறிக் காணப்படும். இது மரத்தில் கூட்அமைத்து, புள்ளிகள் இல்லாத 3 வெளிர் நீல நிற முட்டைகளை இடுகிறது.

முக்கியமாகப் பூச்சி உண்ணும் தன்மையுடையது என்றாலும், இலங்கையின் வெள்ளைக் கண்ணி, தேன் மற்றும் பல்வேறு வகையான பழங்களையும் உண்ணும்.

பொது மற்றும் விலங்கியல் பெயர்கள் கண்களைச் சுற்றியுள்ள வெள்ளை இறகுகளின் வெளிப்படையான வெண் வளையத்தைக் குறிக்கின்றன. ஜோசுடெராப்சு என்பது கிரேக்க மொழியில் "கச்சை-கண்" என்பதாகும்.

தபால் தலையில்[தொகு]

இலங்கையில் இந்தப் பறவை சிங்கள மொழியில் லங்கா சித்தாசியா என்று அழைக்கப்படுகிறது . இந்த பறவையின் உருவம் 1983-ல் முதன்முதலில் வெளியிடப்பட்ட இலங்கை தபால் தலையில் அச்சிடப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Zosterops ceylonensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22714023A94397877. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22714023A94397877.en. https://www.iucnredlist.org/species/22714023/94397877. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Wickramasinghe, Nelum; Robin, V. V.; Ramakrishnan, Uma; Reddy, Sushma; Seneviratne, Sampath S. (2017-08-09). "Non-sister Sri Lankan white-eyes (genus Zosterops) are a result of independent colonizations" (in en). PLOS ONE 12 (8): e0181441. doi:10.1371/journal.pone.0181441. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. பப்மெட்:28792950. 
  3. Wait, Walter Ernest (1922). "The passerine birds of Ceylon". Spolia Zeylanica 12: 182. https://archive.org/stream/passerinebirdsof00wait#page/182. 
  4. Scharning, Kjell (20 November 2011). "Bird stamps from Sri Lanka". BirdTheme.org. பார்க்கப்பட்ட நாள் 7 February 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_வெள்ளைக்_கண்ணி&oldid=3598554" இலிருந்து மீள்விக்கப்பட்டது