இலங்கை வர்த்தக சம்மேளனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை வர்த்தக சம்மேளனம்
உருவாக்கம்1839
நிறுவனர்Rt. Hon. ஜேம்ஸ் அலக்ஸாண்டர் ஸ்டுவெர்ட் மக்கன்ஸ்சி, இலங்கை தேசாதிபதி
நோக்கம்வியாபார கூட்டமைப்பு
தலைமையகம்
சேவைப் பகுதி
ஏற்றுமதி இறக்குமதி
முக்கிய நபர்கள்
சுரேஸ் ஷா
முதல்வர்

சமந்தா ரணதுங்க
துணை முதல்வர்

மங்கள யாபா
நிறைவேற்று அதிகாரி/ பொது செயலாளர்
வலைத்தளம்Ceylon Chamber of Commerce

இலங்கை வர்த்தக சம்மேளனம் (The Ceylon Chamber of Commerce) என்பது இலங்கையில் காணப்படும் மிகவும் பழைமை வாய்ந்ததும் முன்னிலை பெற்றதுமான வர்த்தக கூட்டமைப்பு ஆகும்..

வரலாறு[தொகு]

இலங்கை வர்த்தக சம்மேளனம் மார்ச் மாதம் 25ம் திகதி 1839 ம் ஆண்டு இலங்கை பிரிட்டனின் காலனியாதிக்கதின் உள்ளபொழுது ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும்.

ஓய்வு பெற்ற கௌரவ ஜேம்ஸ் அலக்ஸாண்டர் ஸ்டுவார்ட் மக்கன்ஸி ,இலங்கையின் தேசாதிபதி என்பவரின் ஆர்வத்தினாலும் விருப்பின் பெயரால்இலங்கையின் விவசாயம் மற்றும் வர்தக நடவடிக்கைகளில் முன்னேற்றதிற்கும் அபிவிருத்திக்கும் என ஆரம்பிக்கப்பட்டது.மார்ச் 25,1839 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுகுழுவில் வர்த்தக சமுகத்தினை பிரதிநிதிதுவம் செய்யும் 13 பிரதிநிதிகளால் பிரின்ஸ் வீதி கோணர் மாளிகையில் வைத்து வைபபரீதியாக சட்டங்களுக்கும் நியதிகளுக்கும் அமைவாக ஆரம்பிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து 1895 ல் இலங்கை சட்டவாக்க கழகதினால் 1895 ம் ஆண்டு 10 ம் இலக்க இலங்கை வர்த்தக சம்மேளன நியதி சட்டத்தினால் சட்டரீதியாக கூட்டிணைக்கப்பட்டது. 1954 ம் ஆண்டு முதல்வரான திரு ரெரன்ஸ் டீ சொய்சா என்பவரே இலங்கை வர்தக சம்மேளனதின் தலைமை ஏற்ற முதல் இலங்கையராவார். [1][2][3]

சேவைகள்[தொகு]

  • பண்டம் ஏலம் நடாத்துதல் (தேயிலை, இறப்பர், மசாலா & பெட்ரோலிய பொருட்கள்)
  • அறிமுகம் பிறப்பிடம் சான்றிதழ் வழங்குதல், (certificate of orgin)
  • சேவைகள் / சர்வேயர்கள் / மதிப்பீட்டாளர்கள், மத்தியஸ்தம் / இணக்கப்படுத்தல் மற்றும் சமரச சேவைகள்,
  • ஏற்றுமதி கண்காட்சிகள் நடாத்துதல்
  • ஏற்றுமதி மேம்பாட்டு செயலகம்,
  • இருதரப்பு வர்த்தக சபைகள் உருவாக்கம்
  • ஏற்றுமதி விருது வழங்கும் திட்டம்
  • சமூக பொறுப்புணர்வு விருதுகளை வழங்கள்
  • விநியோக சங்கிலி மேலாண்மை
  • ஏற்றுமதிகள் தொடர்பிலான விசேட நிபுணத்துவ சேவைகள் வழங்கள்

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

உசாவுதுணை[தொகு]