இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம்
Rupavahini logo
வகை ஒளிபரப்பாக்கம் (ரூபவாகினி, செனல் ஐ, நேத்ரா டீ.வி மற்றும் என்.டீ.வி)
நாடு இலங்கை
ஒலிபரப்பு வீச்சு தேசிய அளவில்
நிறுவியது இலங்கை அரசாங்கம் (இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் 1982 ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டம்)
உரிமையாளர் இலங்கை அரசாங்கம்
முக்கிய நபர்கள் மொகான் சமரநாயக்க (தவிசாளர்)
துவக்கப்பட்ட நாள் பெப்ரவரி 14, 1982
Picture format PAL
இணையதளம் http://www.rupavahini.lk

இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம், இலங்கையின் பொது நிதியில் நடாத்தப்படும் தேசிய தொலைக்காட்சி ஆகும். கல்வி [சான்று தேவை] மற்றும் பயன்தரும் [சான்று தேவை] தகவல்களை வழங்குவதற்காக இது யப்பான் மக்களால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

1982 ஆம் ஆண்டின் இல. 6ம் நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் தேசியத் தொலைக்காட்சிச் சேவையாக நிறுவப்பட்டது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் நிகழ்ச்சிகள் தொகுத்து/தயாரித்து ஒளிபரப்பப்படுகின்றன.

ரூபவாகினி, சனல் ஐ ஆகிய இரண்டு அலைவரிசைகளில் தொழிற்படுகிறது. இவ்விரண்டு அலை வரிசைகளும் இலக்க முறை (அ) எண்மருவி (Digital) அல்லாது அனலொக் (அ) அலைமருவி (Analogue) முறையையே பயன்படுத்துகின்றன.

இது, இலங்கை அதிபரால் (சனாதிபதி) நியமிக்கப்பட்ட குழுவொன்றினால் நடாத்தப்படும் ஒரு நிறுவனமாகும். இதன் முழுமையான மேலாண்மை/முகாமைத்துவம் இலங்கை அதிபரால் நியமிக்கப்பட்ட உயரதிகாரி ஒருவரிடமே (Director-General) இருக்கும். நிகழ்ச்சிகளுக்கும் ஒளிபரப்புகளுக்குமான நிதி விளம்பரங்கள் மூலமும் அரச மானியங்கள் மூலமும் பெறப்படுகிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]