இலங்கை மீதான ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2014 மார்ச் மாதம் செனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 'இலங்கையில் நடைபெற்ற போரின் போது நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் முறைகேடுகள், அவை தொடர்பான குற்றச்செயல்கள் குறித்து, ஒரு முழுமையான புலனாய்வை மேற்கொள்ளுமாறும்' ஐநா மனித உரிமை ஆணையருக்கு ஆணையிட்டது. இந்த விசாரணையின் இடைக்கால அறிக்கை 2014 செப்டம்பரிலும் இறுதி அறிக்கை மார்ச் 2015 இலும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டது. இந்த ஆணைகளுக்கு ஏற்ப இலங்கை மீதான ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணை (OHCHR Investigation on Sri Lanka - OISL) முன்னெடுக்கப்பட்டு வருகிறது.[1]

விசாரணைக் குழு[தொகு]

இந்த விசாரணையில் பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபரும் நோபல் பரிசு பெற்றவருமான மார்ட்டி அட்டிசாரி, கம்போடிய இனப்படுகொலை நீதிமன்ற நீதிபதியும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவருமான சில்வியா காட்ரைட், பாகிஸ்தான் நாட்டின் மனித உரிமை வல்லுநர் அஸ்மா ஜகாங்கிர் ஆகியோர் சிறப்பு வல்லுனர்களாக செயற்படுகின்றார்கள். மேலும், சட்டத்துக்கு புறம்பான அரசப்படுகொலைகள் (Extrajudicial executions), காணாமல் போகச்செய்தல் (Disappearances), உள்நாட்டு அகதிகள் (internally displaced persons), சட்டவிரோத காவல் (Internally displaced persons), பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (Violence against women), சித்தரவதை (Torture) ஆகியனவற்றுக்கான சிறப்பு ஐநா வல்லுநர்கள்களின் உள்ளீடும் பெறப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "OHCHR Investigation on Sri Lanka". www.ohchr.org. 17 செப்ரெம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]